Archive for the ‘சர்ச்சைகள்’ Category

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)  

May 12, 2018

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)

Clooney, invited Vasudhat at Harvard

குளூனிவின் வைஷ்ணவ ஆராய்ச்சிற்கு உதவியவர்: இவருக்கு உதவி செய்துள்ள சமஸ்கிருத, வைஷ்ணவ மற்றும் இதர பண்டிதர்கள்: குளூனி தனது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் கீழ்கண்டவர்கள் தமக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  1. ஶ்ரீ ராமமூர்த்தி சாஸ்திரி, முந்தைய சமஸ்கிருத கல்லூரி முதல்வர், மைலாப்பூர்.
  2. ஶ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார்.
  3. ஶ்ரீ எம்.ஏ. வேங்கிடகிருஷ்ணன், வைஷ்ணவ ஆராய்ச்சித் துறை, சென்னை பல்கலைக்கழகம்.
  4. ஶ்ரீமதி பூமா. வேங்கிடகிருஷ்ணன்
  5. ஶ்ரீ. அனந்தகிருஷ்ணன்,
  6. ஶ்ரீ மோஹனரங்கன்.

இதைத்தவிர திருமலையில் உதவிய புரபசர், திருச்செந்தூருக்கு செல்ல உதவியவர், சென்னையில் கச்சேரி, நாடகம், சினிமா முதலியவற்றிற்கு அழைத்துச் சென்ற / உதவிய / கூட வந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அமெரிக்காவில் பரஸ்பரமாக, இந்து மற்றும் இந்தியமூலங்கள் கொண்ட புரபசர்கள், பிரபலமானவர்கள் மற்ற முக்க்கியஸ்தர்கள் உதவி வருகிறார்கள். உதாரணமாக, வசுதா நாராயணன் என்பவர், குளுனிக்கு உதவியிருக்கிறார். அதனால் தான் அவர்களது மைலாபூர் உறவினர்கள் அவருக்கு உதவியுள்ளது தெரிகிறது. இங்கு குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் எல்லோருமே பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆனால், “உள்-கலாச்சாரமயமாக்கல்” மற்றும் “உரையாடல்” என்று வரும் போது, முடிவுகள், இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் தான், கவனிக்க வேண்டியிருக்கிறது.  மேலும், குளூனி பதிவு செய்தது போல, இவர்கள் பதிவு செய்யாதது, திகைப்பாக இருக்கிறது.

M.A. Venkatakrishna and Smt Bhooma Venkatakrishnan

தமிழகத்தைச் சுற்றி வந்து நுணுக்கங்களை அறிந்த குளூனி: வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்ற முகாந்திரத்தில் உலா வந்து மைலாப்பூர் பக்கம் சுற்றி வந்தார். திருவாழ்மொழி படிக்கிறேன் என்று விளம்பரம் செய்து கொண்டார். இவரை ஆதரிக்கிறேன் மற்றும் எதிர்க்கிறேன் என்ற ரீதியில் சிலர் வேலை செய்த போது, அவர் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசயங்களை சேகரித்துக் கொண்டு சென்றார். சென்னை, ஶ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு வந்தால், அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு உபசாரம் செய்தவர்களில் பலர் உள்ளனர். பிரான்சிஸ் சேவியர் குளூனியை பல மடாலயங்கள், கோவில்களுக்குள் அழைத்து சென்றுள்ளனர், ஆனால், குளுனி புத்தகங்களை எழுதியது இந்துமதத்தை எதிர்த்து தான். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

Vasudha speaks in India

  1. ஶ்ரீவைஷ்ணவ “சில்லறை விசயங்கள்” எல்லாம், குளுனிக்கு புரிந்து புத்தகங்கள் எழுதும் அளவுக்கு, நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தது யார்?
  2. “மதங்கங்களுக்குள் உரையாடல்” போர்வையில், ஶ்ரீவேதாந்த தேசிகரையும், கத்தோலிக்க சேவியரையும் ஒப்பிட்டு ஏழுதியபோது, பாராட்டுத் தெரிவித்தது ஏன்?
  3. மேரியை, ஶ்ரீ மற்றும் லக்ஷ்மியுடன் ஒப்பிட்டு, “தெய்வீக மாதா, ஆசிர்வதிக்கப் பட்ட மாதா” என்று குளூனி புத்தகம் எழுதியது எவ்வாறு?
  4. “ஹார்வார்ட் தமிழ் நாற்காலி” என்றால் குதிக்கும் இந்துத்துவவாதிகள், இத்தகைய ஹார்வார்ட் புரவசர்களை ஆதரிப்பது ஏன்?
  5. புரவசர் வசுதா நாராயணன் இங்கே வந்தால், கதா-காலக்ஷேபம் செய்கிறார், அங்கோ, குளுனிக்கு “பேச” ஏற்பாடு செய்கிறார்!
  6. ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி என்பவர், ஶ்ரீரங்கத்தில் நடப்பதையெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார், கோர்ட்டுக்கு போகிறார்!
  7. “மதங்கங்களுக்குள் உரையடல்” இந்துத்துவவாதிகள் என்றாவது நடத்தியுள்ளனரா? பிறகு, ஒருவழியாக அவர்களை அனுமதிப்பது / புலம்புவது ஏன்?

Fr Clooney SJ - Vidyajoti- lecture -2011

2011லேயும் குளூனி சென்னை கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்றிருக்கிறார்[1]: சத்யஜோதி என்ற கிருத்துவ கல்லூரியில், ஜூலை 27, 2011 அன்று பைபிள் மற்றும் திருவாய்மொழி ஒப்பிட்டு சொற்பொழிவாற்றினார்[2]. “சத்யஜோதி” இரு ஜெசுவைட் கல்லூரி, அதனால் அங்கு வரவேற்க்கப்பட்டது, பேசியது எல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மற்ற மதங்களுடைய நூல்கள் எப்படி பைபிள் படிக்க உதவும் என்று அவர் எடுத்துக் காட்டியதிலும் வியப்பில்லை. ஆகஸ்ட் 2, 2011 அன்று எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியிலும், கிறிஸ்துவ-இந்து மதங்களை ஒப்பிட்டு பேசினார்[3]. இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கெனவே, குளூனியின் புத்தங்கள் வெளிவந்த பிறகு, அவற்றின் சர்ச்சை ஏற்பட்ட பிறகு, அவர் எப்படி அங்கு வரவேற்க்கப் பட்டு பேசினார் என்பது வினோதம் தான். ஆகஸ்ட் 5, 2011 அன்று, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தத்துவ துறை சார்பாக சார்பில் நடந்த கருத்தரங்கத்திலும், மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து பேசினார்[4]. அதாவது, 1992-93 விஜயங்களின் போது, சென்னையில் இவரைத் தட்டிக் கேட்டதாலும், நேரில் வந்து கேள்விகள் கேட்டதாலும், இவையெல்லாம் விளம்பரம் இல்லாமல் நடத்தப் பட்டதாகத் தெரிகிறது அல்லது அந்த அளவிற்கு மற்றவகளுக்குத் தெரியும் வகையில் அறிவிக்கப்படவில்லை. மேலும் 2011ல் உடனடியாக, இதைப் பற்றி பதிவு செய்தேன். ஆதாரமாக, இணைதள லிங்குகள் முதலியவற்றைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது, அவையெல்லாம் மறைந்து விட்டன. “இந்து பிசினஸ் லைன்” மட்டும் இன்றளவில் உள்ளது. ஆகவே, இவ்விவகாரங்களை மறைப்பதிலும் ஈடுப்பட்டுள்ளது தெரிகிறது.

Clooney- gave Radhakrishna lecture -2011

இந்துக்கள், கிறிஸ்தவர் போல உரையாடல்களில் ஈடுபடுவதில்லை: இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள் யாரும் கிருத்துவர்களுடன் உரையாடல் நடத்தி, இந்துமதம் தான் தொன்மையானது, அதிலிருந்து தான் தத்துவம் முதலியவற்றை மற்ற மதங்கள் எடுத்தாண்டன என்றெல்லாம் எடுத்துக் காட்டுவதில்லை. ஜைனம் மற்றும் பௌத்தம், 2500 ஆண்டுகளுக்கு முன்னமே அத்தகைய உரையாடலில் ஈடுபட்டதும், இந்து மதத்தின் தொன்மையினைக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவம், இவ்விசயத்தில் எந்த தொன்மையினையும் காட்ட முடியாது. காலக்கணகியலே, அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி விடுகிறது. அயல்நாடுகளுக்கு சென்றவர்கள், செல்கிறவர்கள், அந்தந்த நாடுகளின், நிறுவனங்களின், இயக்கங்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆராய்ச்சி செய்து, பட்டங்களைப் பெற்று, வசதியாக இருந்து விடுகின்றனரே தவிர, சிலர் தான், பிரச்சினையை உணர்ந்து எதிர்க்கிறார்கள்[5].  இந்தியாவிற்கு வரும் போது அல்லது இணைதளங்களில், ஏதோ, இந்துக்களுக்கு போராடுவது, ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அங்கு, பணியிடங்களில் “சலாம்” போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் பதவி போய்விடும், கீழே தள்ளப்படுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

NOP Vaishnava college, Clooney- resource person

இந்தியாவில் இருப்பவர்களுக்குஉரையாடல்நுணுக்கங்கள் தெரியாது, ஆவணப்படுத்துவதில்லை: இந்து கோணத்தில் “உரையாடல்” என்றால் என்ன, கிருத்துவம் அல்லது முகமதிய மதங்களுடன் “உரையாட” வேண்டிய அவசியம் என்ன, அவ்வாறு நிலை வந்தால், என்ன பேசுவது, விவாதிப்பது, நிலைநாட்டுவது, முடிவுக்கு வருவது மற்றும் இறுதியாக ஆவணப்படுத்துவது போன்ற விசயங்களை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு கிருத்துவன் அல்லது முகமதியன் கூட பேசினால், “உரையாடல்” ஆகாது. மேலும், ஆங்கிலத்தில் “என்கவுன்டர்” என்ற பிரயோகம் [encounter, எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நில்] செய்வது எதிர்மறையாக இருக்கிறது. ஆனால், “வாய்ஸ் ஆப் இந்தியா” போன்ற “இந்து-சார்பு” பதிப்பங்களே அத்தகைய பிரயோகங்களை செய்து வருகின்றது[6]. இந்தியாவில் இருப்பவர்களோ, ஏதோ கிருத்துவர்களுடன் பேசினாலே “உரையாடல்” ஏற்பட்டு விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால், ஆவணப்படுத்துவதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில்லை. எம்.டி. ஶ்ரீனிவாஸ் என்பவர், “சத்திய நிலையத்துடன்” நெருக்கமான தொடர்பு வைத்திருந்தாலும், தனது கட்டுரை பதிப்பாயிற்று என்ற நிலையில் அமைதியாக இருந்தார். அங்கு தங்கியிருந்த குளூனியிடம் என்ன பேசினார் என்று ஆவணப்படுத்தவில்லை. அதேபோல, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிக் கொண்டாலும் ஆவணப்படுத்தவதில்லை.

© வேதபிரகாஷ்

11-05-2018

Jesus trail in India, The Hindu 20-11-2007

[1] கீழ்கண்ட லிங்குகள் வேலை செய்யவில்லை / காணாமல் போய்விட்டது என்பதால், என்னுடைய பிளாக்கின் லிங்கைக் கொடுக்கிறேன்: https://vaticanculturation.wordpress.com/2011/08/12/95-the-christian-vaishnavite-dialogue-continues-clooneys-2011-visit-to-chennai/

[2] Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ  This was the topic of the special lecture given by Prof. Francis Xavier Clooney SJ at Vidyajyoti on July 27, 2011. He spoke of the importance of reading the texts of other religions while doing Christian theology.  Dr. Clooney illustrated his ideas by bringing together select texts from Song of Songs of the Bible and Tiruvaymoli of the Tamil bhakti tradition. The scholarly lecture was very enlightening and led to a lively discussion moderated by Fr. George Gispert-Sauch SJ, an eminent Indologist and emeritus Professor at Vidyajyoti.

http://www.americamagazine.org/blog/blog.cfm?blog_id=2&category_id=4A03E29A-3048-741E-7E0C76FB5CD0D40D

Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ By Vidyajyoti College of Theology, August 3, 2011;  http://vidyajyoti.in/?p=1275

[3] Addressing a seminar on Dynamics of Religious Trajectories: Continuities and Changes, Traditions and Improvisations at the M O P Vaishnav College here, Clooney said traditions were not the things of the past, they could cha-nge the world. He said religion was not static and it kept changing as the modern world. “God is like a lover and tends to change. We can’t restrict him saying he belongs to me,” he said.

‘God Is like a lover, can’t restrict him’,  Express News Service, Last Updated : 03 Aug 2011 09:23:22 AM IST, http://expressbuzz.com/cities/chennai/god-is-like-a-lover-can%E2%80%99t-restrict-him/300447.html.

[4] Department of Philosophy organized Dr. Sarvepalli Radhakrishnan Endowment Lectures on 5th August 2011. Prof. Francis X. Clooney, Parkman Professor of Divinity and Director of the Center for the Study of World Religions, Harvard University, USA delivered two lectures on theme “Comparative Theology as 21st Century Christian Theology” and “The Drama of a God Who Comes and Goes: Reading the Biblical Song of Songs with the Srivaishnava Thiruvaymoli“. The Principal, Dr. R.W. Alexander Jesudasan presided over the function and the Bursar, Mr. C. Sundaraj and student and faculty of various departments were present on the occasion.

http://www.mcc.edu.in/index.php?option=com_k2&view=item&id=135:dr-sarvepalli-radhakrishnan-endowment-lectures&Itemid=530

[5] கியானால்ட் எல்ஸ்ட், வாமதேவ சாஸ்திரி, மைக்கேல் டேனினோ, ராஜிவ் மல்ஹோத்ரா, நரஹரி ஆச்சார், கோஸ்லா வேபா, போன்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்க / ஐரோப்பிய குடிமகன்கள் என்ற முறையில், இவர்களுக்கும், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

[6] Hindu-Christian Encounters, Voice of India, New Delhi.

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் – பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

May 12, 2018

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

Clooney, Hindu-christian dialogue-with Hindu Swami

கிருத்துவர்களின் போலித்தனம்உள்கலாச்சாரமயமாக்கலும், இந்தியஇந்து எதிர்ப்பும்: உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு வாழ்ந்து, சரியான சமயம் வரும்போது, எல்லோரும் “கிருத்துவர்கள்” என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால், இதுவரை, எந்த இந்துவும் கிருத்துவன் அல்லது முகமதியன் போல வேடமிட்டு, நடந்து கொண்டு, அம்மத நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களைப் போல ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியாதாகத் தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல இந்து குடும்பங்களில் கிருத்துவ மாப்பிள்ளை மற்றும் மறுமகள், தாய் அல்லது தந்தை, மாமியார் அல்லது மாமனார் இருப்பது சகஜமாகி விட்டது. ஆனால், அவர்கள் அதை இந்தியாவில் தங்களது உறவினர்களிடம் கூட சொல்வதில்லை. இப்பொழுது மூன்றாம்-நான்காம் தலைமுறைகள், இந்திய உறவுகளை, சொந்தங்களை, மூலங்களை மறந்து விட்டனர். அவர்களால், இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆகவே, அவர்களிடமிருந்து, இந்துக்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டுவிடலாம்.

Clooney, Hindu-christian dialogue-with Hindu ISKCON and Swaminarayan Swamis

இவ்விசயங்களில்இந்துஎதிர்ப்பில், கிருத்துவப் பிரிவுகள், டினாமினேஷன்கள் ஒத்துப் போவது: பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue), மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா, சுலோகங்கள் சொல்வது, பொங்கல், தீபாவளி கொண்டாடுவது முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Protestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

Clooney, Bama Gopalan, Kumudam

ஒருதலைப் பட்சமான, போலி உரையாடல்கள்: “உரையாடல்” [dailogue], “மதங்கங்களுக்குள் உரையாடல்” [inter-religious dialogu], “மதங்களுக்குள் இடையே உரையாடல்” [inter-faith dialogue] என்ற ரீதியில் கிருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்துக்களுக்கு அது தெரியாது. படித்தவர்கள், “எல்லாம் மதங்களும் ஒன்று,” “எல்லா மதங்களும் ஒன்றைத் தான் போதிக்கின்றன,” “ஒளி பலவென்றாலும் வெளிச்சம் ஒன்று”, என்று ஏதோ மேலெழுந்தவாரியாக அல்லது முற்றும் துறந்த முனிவர் போல பேசும் ரகங்களைத் தான், இந்து சாமியார்களிடம், மடாதிபதிகளிடம், “துறவி” போன்ற வகையறாக்களில் காணப்படுகின்றன. இவர்களால் இக்காலநிலையில், இந்துக்களும், நன்மையை விட, எதிர்மறையான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்திய மதநூல்களை எல்லாம் படித்து விட்டு, அதில் சொல்லப் பட்டிருக்கின்ற இந்து கடவுளர் எல்லாமே, கிருத்துவ மதத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டது, பெறப்பட்டது என்று முடிவாக விளக்கம் கொடுப்பது தான் அவர்களது திட்டம். மறைந்துள்ள ஏசு, உள்ளேயிருக்கும் கிறிஸ்து, ஞானகுரு என்றெல்லாம் சொல்வது அவர்களது வழக்கம். ஆனால், செக்யூலரிஸ, முட்டாள் மற்றும் படிக்காத இந்துக்கள் இதனை அறிந்டு கொள்வதில்லை.

Clooney, Vasudha Narayanan

கிருத்துவர்களின் கட்டுக்கதை மோசடிகள்: ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திர ரீதியில் இல்லை என்று மேனாட்டில், கடந்த 200 வருடங்களில் பெரிய-பெரிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டி விட்டனர். இதனால், கிருத்துவர்கள், கிருத்துவ மதத்திற்கு சரித்திர ஆதாரம், தொன்மை முதலியவை குறைவு மற்றும் இல்லை என்ற ரீதியில், மற்றவற்றின் சரித்திர ஆதாரங்கள், தொன்மை முதலியவற்றை தமது போல காட்டிக் கொள்ள, ஆவணங்களை திரித்து எழுதி, போலி ஆதாரங்களை உருவாக்கி, ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். இவையெல்லாம் இன்றும் தொடர்ந்து வருகின்றன. “அதையும்-இதையும் இணைத்து, இரண்டும் ஒன்று” என்ற ஏமாற்று சமன்பாட்டை வைத்து, ஏமாற்றி வரும் போது, நம்பி மோசம் போவது, இந்துக்கள் தாம். “தாமஸ்கட்டுக் கதை,” “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக்கதைகளின் பின்னணி இதுதான். இதெல்லாம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, மோசடி என்றெல்லாம் அடிக்கடி வெளிப்பட்டாலும், வெட்கமில்ல்லாமல் தொடர்ந்து செய்வது தான் அவர்களது கை வைந்த கலை. ஏனெனில், அத்தகைய விவரங்கள் ஒருசிலருக்கே தெரியும் மற்றவகளுக்குத் தெரியாது என்ற நிலையில், மோசடிகளை செய்து வருகின்றனர்.

Nuns inside Srirangam temple -08-05-2018

ஶ்ரீரங்கமும், கிருத்துவர்களும்: ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் கிருத்துவர் நுழைந்து விட்டார்கள் என்று புலம்புகின்றனர் “இந்துத்துவ வாதிகள்”, ஆனால் கிருத்துவர்களுக்கு உதவுவது இவர்களில் சிலர். 08-05-2018, செவ்வாய்கிழமை அன்று கன்னியாஸ்திரிக்கள் நுழைந்தது “குளூனி” விஜயம் போன்றதா என்று ஆராய வேண்டும்[1]ஏனெனில், குளூனி அங்கு வந்து சென்றபோது, யாரும், இந்த அளவுக்கு போட்டோ, போட்டு கேட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக வெளிநாட்டினர், மற்ற மதத்தினர் கோவிலில் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப் படுவது உண்டு[2]. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இவர்கள் செயலாற்றுவதால் பலனில்லை. ஒரு ஶ்ரீரங்கத்து ஜீயருக்கும் அங்கிருக்கும் ஒரு கிருத்துவ செமினரி பாஸ்டருக்கும் நட்பு என்ற ரீதியில், ஜீயர் பாஸ்டருக்கு மாலை போட்டு கௌரவித்திருக்கிறார், இதை அந்த பாஸ்டரே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், எந்த சர்ச்சோ, செமினரியோ, கிருத்துவ மடாலயமே, இந்துவை உள்ளே விடுவதில்லை. அப்படியே, யாராவது சென்றாலும், “ஏதாவது ஒரு காரணாம் சொல்லி” திருப்பி அனுப்பப் படுவர்.

Francis Clooney at Laksmi temple

பிரான்சிஸ் சேவியர் குளூனி கோவில்களுக்குள் சென்று வந்தது: பிரான்சிஸ் சேவியர் குளூனி [ஹார்வார்ட் புரபசர்] என்பவர், தமிழகத்திற்கு பலமுறை வந்து, கிருத்துவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒப்பீட்டு செய்து ஆராய்ச்சி செய்கின்றேன் என்ற விதத்தில் வந்து போக ஆரம்பித்தார். 1982-83, 1992-93, 2011 என்று பல வருடங்கள் வந்து, வருடத்திற்கும் மேலாக தங்கிருந்தார். “ஐக்கிய ஆலயம்” இவருடைய தங்கியிருந்த இடம், அங்கு தான் இக்னேசியஸ்ஸ் இருதயம் என்பவர் இவரை நன்றாக கவனித்துக் கொண்டார். வெஇயில் வரும்போது, கதர் சர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்ததால், ஏதோ அமெரிக்க பிராமணர் அல்லது “”ஹரே கிருஷ்ண” கோஷ்டி என்று நினைத்துக் கொண்டனர். இதனால், சைக்கிளில் ஊர்வலம் வந்து சென்னை முழுவதும் சுற்றி வந்து, ஏகப்பட்ட கோவில்களுக்கு சென்று வந்துள்ளார். அம்மன் கோவில்கள் இவருக்கு தனிப்பட்ட விருப்பமாகும். தமிழைக் கண்டு கொண்டுதால், அப்படியே பேசி சமாளித்து சமாளித்துள்ளார். பணத்தைப் பொறுத்த வரையில் கவலை இல்லை. தாராளமாகவே செலவழித்திருக்கிறார். தமிழகத்தை பஸ், ரெயில் என்று பயணித்து பற்பல கோவில்களுக்கு சென்று வந்தார். ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் உள்ளூர் நண்பர்கள் உதவியுள்ளனர். திருமலை கோவிலுக்கு 1983 மற்றும் 1992 என்று இரு முறை சென்றுள்ளாதாக அவரே பதிவு செய்துள்ளார். அங்குள்ள பட்டரின் நண்பரான புரபசர் அவருக்கு உதவியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-05-2018


Fr Clooney SJ - lecture -2011

[1] The Hindu, Christian nuns’ visit to temple causes flutter, R. Rajaram, TIRUCHI, MAY 10, 2018 00:00 IST; UPDATED: MAY 10, 2018 05:11 IST

[2] The visit of a group of Christian nuns to Sri Ranganathaswamy Temple in Srirangam on Tuesday evening caused a flutter on social media. The visit raised a furore after allegations were made on a social networking site that the nuns in their religious attire started to pray taking out their rosaries while inside the temple. Photographs showing a group of nuns standing and walking near Thousand Pillar Mandapam were also widely circulated on online messaging platforms. Officials of the Hindu Religious and Charitable Endowments Department said the nuns had come from Kerala as tourists and were indeed in their religious attire, but did not pray with rosaries inside the temple. The nuns were near the Thousand Pillar Mandapam at the outer prakaram when it was brought to the notice of the temple authorities by some devotees. Temple officials said the nuns were politely asked to leave the premises as they were in their religious attire. The nuns left the temple immediately, an official said. Although people of other faiths, including foreign nationals, were permitted inside the temple, they were not allowed beyond the Aryapadaal entrance. Visitors of other faiths were not allowed inside any of the Sannidhis as well, the temple authorities explained.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nuns-visit-to-temple-causes-flutter/article23830818.ece

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)!

2007 image of Mother Teresas Home for the Dying, Nirmal Hriday, in Kolkata. 1952

2007 image of Mother Teresas Home for the Dying, Nirmal Hriday, in Kolkata. 1952

வாடிகன் கவுன்சில்IIக்கு முன்பு மற்றும் பின்பு: இந்நிகழ்சிகள் வாடிகன் கவுன்சில்-IIக்கு முன்பு மற்றும் பின்பு என்று நடந்துள்ளது. அதாவது, இத்தகைய பரிசோதனை முறைகளை செய்து வருவது, நடமுறைப் படுத்துவது, பிறகு வாடிகன் அனுமதி கொடுத்துவிட்டது என்று அறிவிப்பது போன்ற நிகழ்வுகள், ஏற்கெனவே திட்டமிட்டு, தீர்மானிக்கப்பட்ட நாடகக் காட்சிகளை அரங்கேற்றுவது போலிருக்கிறது. இங்கு, டி.எஸ். லூர்துசாமி, ராயப்ப அருளப்பா, பேட் கிரிபித்ஸ், தெரசா (1910-1997) என்று எல்லோரும் இக்கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளது நோக்கத்தக்கது. 1970ல் தெரசா அம்மையாருக்கு இவற்றில் நாட்டம் என்ன என்பதனையும் யோசிக்க வேண்டும். இதே அருளப்பா, கணேஷ் ஐயர் என்பவரை வைத்துக் கொண்டு, போலி ஆதாரங்களை உருவாக்கி, சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று, பிறகு விவகாரங்கள் அமுக்கப்பட்டன. இப்பொழுது கூட, CBCIன் இணைதளத்தில் இதற்கான [CBCI Office for Dialogue and Desk Ecumenism] அமைப்புள்லதைக் காட்டுகிறது[1]. வாடிகன் கவுன்சில்-II ஒட்டி, 1969 ஜனவரியில் “இந்தியாவில் சர்ச்” என்ற மாநாட்டிற்குப் பிறகு, உரையாடல் மற்றும் ஒற்றுமை பற்றிய கமிஷன் 1973ல் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக, கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லத பிரிவுகள், மற்றும் மற்ற மதங்கள், மதநம்பிக்கையில்லாதவர்கள் முதலியோருடன் உரையாடல் வைத்துக் கொள்ள் மற்றும் ஒற்றுமை ஏற்படுத்த, சிறிதுசிறிதாக மாற்றியமைக்கப்பட்டது, என்று அறிவிக்கிறது[2].

குழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு

குழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு

சுதந்திரத்திற்கு முன்பு மற்றும் சுதந்திரத்திற்கு பின்பு: சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை ஆங்கிலேயர் எப்படி மாற்றிக் கொண்டனர் என்று மேலே விவரிக்கப்பட்டது. குறிப்பாக ஜேகோபைட், மார் தோமா, மலங்காரா சர்ச்சுகள், கத்தோலிக்கத் திணிப்பை பலமாக எதிர்த்தன. இதனால், புதியக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அவர்களை குழப்பினர். இதில் தான் தாமஸ் கட்டுக்கதை குறிப்பாக வருகிறது. சரித்திர ஆதாரமில்லாத அதனை, ஆரம்பிதிலிருந்தே,  அவர்களே எதிர்த்து வந்தனர். ஆனால், கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முறையில், இதற்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போப் ஒருபக்கம், தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பது, அதே நேரத்தில், இந்த கோஷ்டிகள் வந்தார் என்று பேசுவது, எழுதுவது முதலியவற்றைக் காணலாம். பிறகு ஏசுவை ஒரு யோகி என்பது போல சித்தரிக்கும் போது, சரித்திர ரீதியில் ஏசுகிறிஸ்து இல்லை என்ற செய்து, அவர்களை பாதித்தது. அதனால், அக்கட்டுக்கதையினையும் சேர்த்துக் கொண்டு, ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம், புதிய கட்டுக்கதைகளை உண்டாக்கினர். திரைப்படமும் எடுக்கிறேன் என்று ஆரம்பித்தனர். ஆனால், வெகுஜன மக்களிடையே அத்தகைய யுக்திகள் எடுபடவில்லை. அதே நேரத்தில், லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட், டா வின்சி கோட், போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். சில இடங்களில் தடையும் விதிக்கப்பட்டது. உண்மையில், முந்தைய கட்டுக்கதையில், ஏசு மேரி மேக்தலினியோடு, காஷ்மீருக்கு வந்தார், கணவன் மனைவி போன்று வாழ்ந்தனர், குழந்தைகளை பெற்றுக் கொண்டனர், அங்கேயே இறந்தனர், ஏசுவின் சமாதி இன்றும் உள்ளது என்றெல்லாம் சொல்ல்க்கொள்பவர்களும் உண்டு.  பிறகு, இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

2012_01_11_Jamison_TaintedSaint_ph_Donald_McGuire_SJ_and_Mother_Teresa

2012_01_11_Jamison_TaintedSaint_ph_Donald_McGuire_SJ_and_Mother_Teresa

தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள்: 1970ல் CBCIன் கூட்டத்தில் கலந்து கொண்ட தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள் தனியாக ஆராய வேண்டியுள்ளது. 1952ல் ஒரு கோவிலை ஆக்கிரமித்து, அதனையே “நிர்மல் ஹிருதய்” என்ற அனாதை இல்லமாக மாற்றினார் எனும் போது வியப்பாக இருக்கிறது. இது காளிகோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. போகும் வழியில், சுவற்றை ஒட்டி ஏராளமான கடைகளில், காளி கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய பொருட்கள் விற்கப்படுவதை காணலாம். ஆக வேண்டுமென்றே, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1952ல் ஆக்கிரமித்தனர் என்று தெரிகிறது, ஆனால், உபயோகத்தில் இல்லாத கோவிலை அவர் அவ்வாறு மாற்றினார் என்று கதை விட்டனர். இந்த இடத்தில் ஆனாதைகளைக் காக்கிறேன் என்று, ஆரம்பித்தாலும், இவரது தீவிரமான மதக்கருத்துகள் விசித்திரமாக இருந்தன. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும், கிருத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது ஆண்டவனின், தெய்வீகத் திட்டம் என்றெல்லாம் பேசியுள்ளார். அங்குள்ள அனாதைகள் இறப்புகளிலும் சர்ச்சை ஏற்பட்டது.

Mother Teresa prophecies of

Mother Teresa prophecies of

தெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர். அதைப்பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ராமகிருஷ்ணனின் சாந்திவனம் மேலே குறிப்பிடப்பட்டது.  பெரிய அளவில் உள்ளா தொழிற்சாலை [“Large scale Industry”] என்பார்களே, அதுபோல, இவர், பணம், ஆதரவு, ஆட்கள் முதலியவை இருந்ததினால், அவ்வாறு செய்து பிரபலமடைந்தார்.

Ignatius Hirudayam, Ikkiya Alayam, Santhome

Ignatius Hirudayam, Ikkiya Alayam, Santhome

இந்து அறிவிஜீவிகளை தந்திரமாகப் பிரித்தது: இப்படி 1956-1970களிலேயே நடந்து முடிந்த விசயங்களைப் பற்றி இந்துக்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். உண்மையில், இந்த ஆவணங்கள் எல்லாம், இந்துக்களுக்குக் கிடைப்பவை அல்ல. மேலும் இவற்றில் உள்ள ஆணைகள் முதலியவை கத்தோலிக்கக் கிருத்துவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். முதலில் இந்துக்கள், கிருத்துவர்கள் உண்மையிலேயே, தங்களது மதத்தினால் ஈர்க்கப்பட்டு அவ்வாறு செய்கிறார்கள் என்று அமைதியாக விட்டுவிட்டார்கள் போலும். ஆனால், 1980களில்[3] அவர்களது மதம் மாற்றும் செயல்களைக் கவனித்தபோது, அவையெல்லாம் அவர்கள் கையாளும் யுக்திகள், சாதாரண இந்துக்களை மதம் மாற்றத்தான், அத்தகைய வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்று தெரிய வந்த போது, எதிர்க்க ஆரம்பித்தனர். இங்கு இவர்களது மதம் மற்றும் யுக்திகள் பலவிதங்களில் செயல்படுவதை அறியலாம்.  ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்தால், மதம் மாறிவிடுவர். ஆனால், மற்றவர்கள் அத்தகைய முறைகளுக்கு ஒத்துவர மாட்டார்கள்.

Nirmal Hrudaya before Kali temple

Nirmal Hrudaya before Kali temple

ஒருபக்கம் உண்மைகளை மறைத்தல், இன்னொரு பக்கம் சமத்துவம் பேசுதல்: பேட் கிரிபித்ஸ் போன்றோர், நன்றாக படித்தவர்கள், பணக்காரர்கள், உயர்ந்த பதவிகளில் உள்ளோர் முதலியவர்களுடன் நட்புடன் இருந்து கொண்டு, அவர்களிடம் ஒரு மாதிரி பேசி, நம்பிக்கையை உருவாக்கி, பிறகு மற்றவர்களுடன் வேறு மாதிரி பேசி, மதம் மாற்ற முயற்சிகளைக் கையாண்டுள்ளார்கள். அதனால் தான், பேராசியர்கள் கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், பேட் கிரிபித்ஸை ஆதரித்து, ராமகிருஷ்ண ராவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இக்னேசியஸ் இருதயம், சாமி குலந்தைசாமி, பேட் கிரிபித்ஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், டி. எஸ். அமலோர்பவ தாஸ் முதலியோர் தத்தம் இடங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது. கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், அவர்களது முறைகளை அறிந்து கொண்டிருந்தால், ஒருவேளை, வேறுமாதிரி, நடந்து கொண்டிருப்பார்கள். எனவே, இதுவும் கிருத்துவர்களின் ஒரு யுக்தி என தெரிந்து கொள்ளலாம். உண்மையினை-சொல்-சொல்லாதே பாணியில் செயல்படுவது, ஆன்மீக மோசடி யுக்திகளில் ஒன்று என்று அறிந்து கொள்ளலாம். முரண்பாடுகள் இல்லாமல் இல்லை, முரண்பாடுகள் உள்ளது தான் சிறந்த சித்தாந்தம் (Theory of contradictions), அதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாதத்தையும் இப்பொழுது வைக்கப்படுகிறது.

Prof K Swaminathan

Prof K Swaminathan

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] http://cbci.in/all-Commissions/Dialogue-Ecumenism.aspx

[2] The Commission for Dialogue and Ecumenism’ was established in January 1973 following the national seminar on ‘Church in India’ held in 1969 and as a follow-up of Vatican II. Initially it was one among the cluster of concerns known as ‘Commission for Proclamation, Ecumenism, Dialogue and Mass Media’. Later, it was made an autonomous department with the name ‘Commission for Ecumenism and Dialogue’. The focus of the Commission then included ‘inter-denominational dialogue, inter-religious dialogue and dialogue with non-believers’. http://cbci.in/all-Commissions/Dialogue-Ecumenism.aspx

[3]  மீனாட்சிபுரம் மதம் மாற்றம், பெரிய பிரச்சினையாகியது, எல்லோருக்கும் தெரியவந்தது. அதில் முகமதியர்கள் வளைகுடா பணத்தை உபயோகப்படுத்தி, இந்துக்களை மதம் மாற்றினர்.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

So called cosmic OM crucified

So called cosmic OM crucified

சிலுவையில் அறையப்பட்ட ஓம்: “ஓம்” என்ற சின்னத்தை சிலுவையில் அறைந்த மாதிரியான இரு சித்திரப்பை வைத்துக் கொண்டு, சச்சிதானந்த ஆசிரமத்தில் பூஜித்து வந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தெரியவந்ததால், அதனைக் ராமகிருஷ்ண ராவ் கண்டித்து எழுதிய கடிதம் பிப்ரவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. “ஓம்” என்ற சின்னம் மற்றும் பிரணவ மந்திரத்தை கிருத்துவர்கள் இவ்வாறு உபயோகப்படுத்துவது சரியில்லை என்றுதான் இந்துக்கள் எதிர்த்தனர். இக்கடிதம் வந்ததும், பேராசியர் கே. சுவாமிநாதன் ராமகிருஷ்ண ராவை அழைத்து பேட் கிரிபித்தை எதிர்த்து எழுத வேண்டாம், ரமண மகரிஷி பற்றி படி, என்று அவரது புத்தக்தைக் கொடுத்து அறிவுருத்தினார்[1]. இது தவிர அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ராம் ஜுகானி[2] என்பவர் முதலில் கடிதம் எழுதி, பிறகு வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் பேசிவிட்டுச் சென்றார். இருவருமே பேட் கிரிபித்ஸின் நண்பர்கள் என்ரு பிறகு தெரிய வந்தது. இடையில் பல மிரட்டல் கடிதக்களும் வந்தன.  அதாவது, சாம-பேத-தண்ட முறைகள் கையாளப்பட்டன என்று தெரிகிறது.

சச்சிதானந்த ஆசிரமம் - 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

சச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

ஓம் உபயோகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்தி எழுதிய பேட் கிரிபித்ஸும், சிபிசிஐயும்: சில கிருத்துவர்களும், அவர்களுடைய இறையியல் பாதிப்பு நிலையில் எதிர்த்தனர். இப்பிரச்சினை பெரிதாகிறது என்றதால், பேட் கிரிபித்ஸ் மார்ச்.23 1989 அன்று ஓமை தான் உபயோகப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று வாதித்து, சச்சிதானந்த ஆசிரமத்தைப் பற்றிய ஒரு குறும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்[3]. இதனால், ராமகிருஷ்ண ராவ் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மற்ற சர்ச் அதிகாரிகளுக்கு மார்ச்.3, 1989 அன்று எவ்வாறு அவற்றை கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று ஒரு கடிதம் மூலம் எழுதி கேட்டார். அதற்கு மே.26, 1989 அன்று அவர்கள் பதிலளித்த போது, NBCLC தயாரித்த சில சுற்றறிக்கைகள் முதலியவற்றை அனுப்பி வைத்தது. லுசியோ ட வைகோ கௌடின்ஹோ (Fr. Lucio da Veiga Coutinho, Deputy Secretary General) என்ற துணை அதிகாரி கையொப்பம் இட்டிருந்தார். 727/29IVi/150 என்ற சுற்றறிக்கையை  டி.எஸ்.அமலோபவதாஸ் தயாரித்தாக உள்ளது. 96/18IV82/185 எண்னிட்ட அறிக்கையில் பெயர் இல்லை. “ஓம் என்பது கடவுளின் வார்த்தை”[4] மற்றும் “ஓம் என்றதன் பொருள்”[5] என்று பேட் கிரிபித்ஸ் எழுதிய பிரசுரத் துண்டுகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, ஓம் என்றது பொதுவான தத்துவம், அது கிருத்துவக் கொள்கைகளுடன் பொறுந்தியுள்ளது, அதனால் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்துன் முறையில் அவை இருந்தன.

NBCLC, Bangalore - CBCI.- entrance

NBCLC, Bangalore – CBCI.- entrance

இரட்டை வேடம் போடும் கத்தோலிக்கர்கள்: இதனால், கத்தோலிக்கர்கள் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. இதனால், சாமி குலந்தை சாமி புத்தகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி மே.31.1989 அன்று ஒரு கடிதத்தினை அவருக்கு எழுதியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர்கள் ஒரு தீர்மானமான திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கத்தோலிக்க-பொரொடெஸ்டென்ட் பிரிவுகள், மறுபக்கம் கத்தோலிக்க-தீவிரவாத மற்றும் மிதவாத குழுக்கள் என்ற போர்வையில், இவர்கள் இந்துக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. “ஓம்” என்பதற்கான வேதங்கள், உபநிடதங்களில் கொடுத்துள்ள சுலோகங்கள், அர்த்தங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை நாங்கள் உபயோகப்படுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்வது, இன்னொரு பக்கம் அதனை எதிர்ப்பது என்ற நிலை காணப்பட்டது. உண்மையில், எதிர்க்கும் பாவனையில், இந்துமதம் தான் தூஷிக்கப்பட்டது. உண்மையில், இந்து மதத்தில் உள்ள நல்லவற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என்றால், அத்தகைய கீழ்த்தரமான செய்களைச் செய்ய மாட்டார்கள். ஆன்மீகம் பேசிக்கொண்டு அராஜகம் செய்யமாட்டார்கள்.

KVR asks questions

KVR asks questions

கிருத்துவர்கள் ஓமை உபயோகப்படுத்துவது, போலித்தனமான ஆன்மீகம்: இங்கு, ராமகிருஷ்ண ராவ் மார்ச்.28 1989 அன்று இந்திய எக்ஸ்பிரசில் வெளிவந்த கடிதத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “கடவுளை நம்புகிறவர்கள் கடவுளர்களை தூஷித்தால், கடவுளைத் தேடுகிறவர்கள், கடவுளை அழித்தால், தார்மீக மற்றும் நேர்மையான கொள்கைகள் மற்றும் அகில-உலக தார்மீக தத்துவங்கள் இவற்றையெல்லாம் மீறி நம்பிக்கையுள்ள ஒருமதத்தவர், மற்ற மத நம்பிக்கைகளை சந்தேகித்து, கேலி பேசினால், போலித்தனமான ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியிலான மதபோர்முறைகளை, இன்னொரு மதத்தின் மீது பிரயோகித்தால், அத்தகைய முறைகளை எல்லாம், உள்-கலச்சாரமயமாக்கல் என்று சொல்லமுடியாது, உன்மையில் அவர்கள், அத்தகைய கொள்கைக்கு எதிராக வேலைசெய்கிறார்கள் என்றகிறது. இந்துக்களுக்கு மதமும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருப்பதால், அவர்களுடைய கலாச்சார சின்னங்கள், முதலியவற்றை விட்டுக் கொடுக்க முடியாது”.

christ_guru

christ_guru

சம-மரியாதை இல்லாத உரையாடல், உரையாடல் இல்லை: “இறையியல் மற்றும் இறையாட்சி எண்ணங்கள் கொண்டவர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட சமதர்மவாதிகள் போல இருப்பது, அணுகுண்டுகளைப் போன்று ஆபத்தானவர்கள் ஆவர். “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், ஆனால், உன் கடவுள் கடவுள் இல்லை”, என்ற போக்கு, புரிதலுக்கோ, சமரசத்திற்கோ ஒவ்வாததாக இருக்கிறது. “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், அதேபோல, உன் கடவுள் என் கடவுள் ஆகும்”, என்று அந்த கோக்கை மாற்றிக் கொண்டு, ஒப்புக் கொண்டால் தான் சமரச, சமதர்மம் ஏற்படும், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருப்பார்கள்”. ராமகிருஷ்ண ராவ் தொடர்கிறார், “மனித வாழ்வுக்கு இதுதான் ஒரே வழி. பெரிய கடவுள் போட்டி, மதவுயர்வு அகம்பாவம், மதரீதியில் உலகத்தை அடக்கியாள் நினைக்கும் போக்கு, நவ-ஆன்மீக உலக ஆதிக்கம் போன்றவை, நம்பிக்கையாளர்களை என்றுமே அமைதியாக வாழ விடாது”.

Beyond compare: Wrapper of the book

Beyond compare: Wrapper of the book

கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் CBCI போடும் இரட்டை வேடங்கள்: கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் அமைப்பின் ஆண்டு பொதுசெயற்குழு கூட்டங்களில் நடக்கும் விசயங்களைக் கவனித்தாலே, இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தனிக்குழுக்களில் சேர்ந்து பேசி தீர்மானங்களை எடுக்கின்றனர் என்பதனை அரிந்து கொள்ளலாம். ஏதோ சர்ச்சுகளை, கிருத்துவமதத்தை, அவர்களது கடவுள்களை, பைபிளை இந்தியமயப்படுத்தும் அல்லது இந்துமயப்படுத்தும் திட்டங்கள், வேலைகள் ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு சில விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

  1. அக்டோபர் 26-31, 1956 தேதிகளில் பெங்களூரில் நடந்த கூட்டத்திலேயே –
    1. கதாகாலக்ஷேபம் போன்ற முறைகளைக் கையாளுவது[6],
    2. எட்மண்ட்ஸ் என்பவர் யுகாரிஸ்ட் சடங்கை சமஸ்கிருதத்தில் எப்படி நடத்துவது[7], ரோம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அதனை ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்தது.
    3. இந்திய இசையை உபயோகிப்பது[8]

போன்ற விசயங்களை அலசியுள்ளனர். தங்களது மதத்தூய்மையினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், இந்த கலப்புகள் தேவையில்லையே!

  1. 1969 ஜனவரி 4-8 தேதிகளில் பூனாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,
    1. தீபாவளி, சரஸ்வதி பூஜை, பொங்கல் முதலிய பண்டிகைகளைக் கொண்டாலலாமா,
    2. வேதங்களில் உள்ள சுலோகங்களை நமது சடங்குகளில், கிரியைகளில் உபயோகப்படுத்தினல் என்ன

முதலியவை “மற்ற மதங்களுடன் உரையாடல்” என்ற பயிற்சி-கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டன[9]. அதே நேரத்தில் கத்தோலிக்கத்துவத்தின் தனித்தன்மையும் வலியுறுத்தப்பட்டது[10].

  1. அடுத்த ஆண்டு 1970ல் எர்ணாகுளத்தில் நடந்த கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் கூட்டத்தில் எப்படி சர்ச்சை இந்தியமயமாக்கல் அல்லது இந்துமயமாக்கல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன[11].
    1. இக்கூட்டத்தில் ஆர். அருளப்பா, டி. எஸ். லூர்துசாமி, பேட் கிரிபித்ஸ், தெரசா போன்றோர் பங்கு கொண்டனர்.
    2. பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையத்தில் (NBCLC) 1969ம் ஆண்டில் ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடந்த பயிற்சி-கருத்தரங்கம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டன[12].
    3. பின்னிணைப்பு-IIல் வாடிகன் ஒப்புக்கொண்ட 12 முறைகள் கொடுக்கப்பட்டன[13].
  1. அதாவது, கத்தோலிக்க ஆசிரமங்களில் நடந்தவற்றையெல்லாம் அங்கீகரிக்கும் முறையில், இந்த ஆணை இருந்தது. இருப்பினும் 1989ல் கிருத்துவர்கள் இவற்றை எதிர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அவர்களும் தெரிந்து கொண்டே விளையாடியுள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-05-2015

———————————–

[1] பேராசியர் கே. சுவாமிநாதன், மஹாத்மா காந்தியின் மொத்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவற்றைத் தொகுத்து, 110 பகுதிகளாக வெளியிட்டவர்.

[2] பேராசிரியர் ராம் ஜுகானி, அமெரிக்காவில் போதித்து வருகிறார், இரண்டு பிஎச்டிக்களைக் கொண்டவர்.

[3]  Bede Griffiths, Saccidananda Ashram- Shantivanam, A Christian Ahram, Jyoti Press, Kulitalai.

[4] Bede Griffiths, Meaning of OM, NBCLC Inculturation pamphlet series.1

[5] Bede Griffiths, OM as the word of God, NBCLC Inculturation pamphlet series. 2

[6]  CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 28.

[7] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[8] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[9] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.39-40 and 149-150..

[10] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.149-150.

[11]  CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 75.

[12] CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 185-185.

[13] Prot.N.802/69, Consilium and Exsequendam Constitutionem de Sacra Liturgia, April 25, 1969. CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 192-194.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)!

Eucharist and cannibalism

Eucharist and cannibalism

யூகாரிஸ்ட் என்ற பலி சடங்கு: விகிபீடியா கூறுகிறது, “திருப்பலி வழிபாட்டில் இறைவாக்காலும்கிறிஸ்துவின் உடலாலும் தயாராகும் திருப்பந்தியில் இருந்து விசுவாசிகள் போதனையும் ஊட்டமும் பெறுகின்றார்கள்”.  ரொட்டியும், சாராயமும் / மதுவும் உண்மையாகவே, இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பதனை நேரிடையாக சொல்வதற்கு அவர்கள் பயப்பட்டனர் என்று தெரிந்தது. யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[1]. அதாவது அவரது உடலை திருப்பலி கொடுத்து, பலிப்பூசை செய்து, உடலின் மாமிசத்தை, ரத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்றாகிறது. உலகத்தில் நடக்கும் எல்லா யுகாரிஸ்டிலும் ஏசுகிறிஸ்து உடல் செல்லமுடியாது. அதிலிருந்தே, இது நடக்கமுடியாத காரியம் என்றாகி விடுகிறது. மேலும் ஏசுகிறிஸ்துவை, ஏதோ ஒரு யோகி, முனிவர், பிரம்மா போன்றெல்லாம் சித்தரிக்கும் போது, அவரது உடலை உண்டு, ரத்தத்தைக் குடிக்கும் சடங்கு காட்டுமிராண்டித்தனமாகப் பட்டது. மனித மாமிசத்தை உண்ணும் “கன்னிபாலிஸம்” என்ற குரூரமானப் பிரிவைக் காட்டுகிறது. பிறகு தினம்-தினம் கிருத்துவர்கள் எப்படி மாமிசத்தை உண்டு, ரத்தத்தை குடித்து வருகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், பைபிளின் படியான உண்மையினை ஏற்றுக் கொள்வதா, அல்லது ஒரு சாத்துவிகமான, சைவ கிறிஸ்துவத்தை அளிப்பதா என்ற குழப்பத்தில் சிக்கிக் கொண்டனர். யோகா, தியானம், முதலியவற்றை செய்யும் யோகிகள், முனிவர்கள் புலாலை உண்பது கிடையாது. திருக்குறள் வேறு கிருத்துவ நூல் என்று சில கிருத்துவ பிரகஸ்பதிகள் புத்தகங்கள் எழுதியுள்ளனர், போதாகுறைக்கு அத்தகைய அரைவேக்காட்டுத் தனமான மோசடி ஆய்வுகள் செய்து பி.எச்டிகளும் வாங்கியுள்ளனர்.

Eucharist belief of eating the flesh - Rani John experience

Eucharist belief of eating the flesh – Rani John experience

1998ல் ரொட்டி மற்றும் மது, மாமிசம் மற்றும் ரத்தமாகி விட்டன என்று கேரளாவில் கூறிக்கொண்டது: பிப்ரவரி 1998ல், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிகோடு கிராமத்தில் வாழும் ராணி ஜான் பலும்பரம்பில் [Rani John Palumparambil] என்ற பெண், திருப்பலி பிரசாதத்தை வாயில் வைத்தவுடன், அவை சதை மற்றும் ரத்தமாக மாறிவிட்டது என்று கூறினார்[2].  இதை உள்ளூர் கிருத்துவர்களே நம்பாத நிலையில் உள்ளபோது, சிலர் அதனை பிரபலப்படுத்தினார்கள். வேறுவிதமாக இல்லை என்று இதனை மெய்ப்பிக்கும் வரை, இதெல்லாம் ஆண்டவருடைய மகிமை என்றே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சைரோ-மலங்காரா சர்ச் அதிகாரி கூறினார்[3]. இது உண்மையா-பொய்யா என்று ஆராய்வது ஒருபக்கம் இருந்தாலும், உயிர்ப்பலி சடங்கிற்குப் பிறகு மாமிசம் சாப்பிட்டு, ரத்தம் குடிக்கிறார்கள் என்றால், அவை எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழுகின்றது. ஏதாவது ஒரு விலங்கின் மாமிசம்-ரத்தம் கொண்டு வந்து வைத்து, அவற்றைப் பிரசாதமாகக் கொடுத்தால் பரவாயில்லை, ஆனால், பைபிளில் உள்லது படி அல்லது நம்பிக்கையின் படி, மனித மாமிசம்-ரத்தம் கொடுக்கிறார்கள் என்றால் பிரச்சினை ஆகிறது. அப்படியென்றால் அவை எங்கிருந்து வருகின்றன, பிணத்திலிருந்து வருகின்றனவா அல்லது புதியனவாக இருந்தால், அப்பொழுது இறந்த அல்லது கொல்லப்பட்ட மனிதனின் உடலிலிருந்து வந்தனவா போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகளை, கிருத்துவர்களே பலமுறை எழுப்பியுள்ளார்கள். நாத்திகர்கள் என்ரு சொல்லிக் கொள்ளும் கூட்டங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

The reported Rani John Eucharist miracle negates  the spiritual -cosmic Christ projected to Indians

The reported Rani John Eucharist miracle negates the spiritual -cosmic Christ projected to Indians

ஜானின் வார்த்தை, மாமிசம், வார்த்தை மாமிசமானது முதலியவை: மனித மாமிசம் உண்ணும் கூட்டதினரால் தான் இத்தகைய சடங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் மாமிசம் உண்ணும் சடங்கினைக் கொண்டிருந்தார்கள் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[4]. ஜானின் விளக்கத்தின்படி[5], “வார்த்தை மாமிசமாகியது” என்பதால், சப்தம் பொருளாக மாறியது, வாஸ்து, வஸ்துவாகியது என்றனர். அதுமட்டுமில்லாது, ஜான் சொல்லுவதாவது[6], “ஏசு அவர்களிடம் சொன்னார். உண்மையாக நான் சொல்கிறேன். மனிதனுடைய மகனின் மாமிசத்தை உண்டு, ரத்தத்தைக் குடித்தால் ஒழிய உனக்கு வாழ்க்கை கிடையாது. யார் என்னுடைய மாமிசத்தைப் புசித்து, ரத்தத்தைக் குடிக்கிறார்களோ, அவர்களுக்கு நிலையான வாழ்வு உள்ளது. நான் அவர்களை கடை நாளன்று எழுப்புவேன். ஆதலால், என்னுடைய சதை மாமிசமாகும், ரத்தம் குடிக்கும் மதுவாகும்”. . யுகேரிஸ்ட் (Eucharist) சடங்கின் போது, உண்மையிலேயே, ஏசு கிறிஸ்து வந்திருக்கிறார் என்று கூட நம்பப்படுகிறது[7] என்று எடுத்துக் காட்டப்பட்டது.  ரொட்டி மாமிசமாக, ஏசுவின் உடலாக மாறுவதும், மது, ரத்தமாக, கிறிஸ்துவின் ரத்தமாக மாறுவதும் “டிரான்ஸ்-சப்சேன்டியாஷன்” (Transubstantiation) என்றும் விளக்கப்படுகிறது[8]. இவற்றையெல்லாம் மீறித்தான், அதாவது ஜீவகாருண்யம் மிக்க, மாமிசன் தின்னாத, ஒரு சைவ கிறிஸ்துவை இந்துக்களுக்குக் கொடுக்க கிருத்துவர்கள் படாத பாடுபடுகின்றனர். ஆன்மீகப்போர்வையில், பல திரிபுவாதங்களையும் கொடுத்து வருகின்றனர்.

Victor Kulanday book - Paganization of the church in India

Victor Kulanday book – Paganization of the church in India

சிவன்பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்மேரி என்ற கணவன்மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை: கிருத்துவயியலேயே பற்பல முரண்பாடுகள் இருக்கும் இந்நிலையில் தான், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீட்டு கோஷ்டிகள், தக்களது குழப்பத்தைத்தாண்டிய தூஷணத்தையும் சேர்த்துக் கொண்டது. ஓம் என்றால் பெண்ணின் குறியைக் குறிக்கிறது, சிவன் பார்வதியைப் புணர்ந்த போது சதோஷத்தினால் எழுப்பிய சப்தம் தான் ஓம் என்று ஜே. எப். விக்டர் என்ற சாமி குலந்தைசாமி விளக்கம் கொடுத்தார்[9]. ஏசு கிறிஸ்து மேரி மற்றும் அவளது கணவனான ஜோஸப் புணர்ந்து பெற்ற பிள்ளை கிடையாது என்கின்றனர். அதாவது, ஏசு கிறிஸ்து, ஜேஹோவாவின் பரிசுத்த ஆவி, நேரிடையாக மேரியைப் புணர்ந்ததால், கருவுற்று பெற்றெடுத்தாள் என்கிறது பைபிள். மேரி, “நான் எந்த ஆணையும் அறியேன்”, என்பதற்கு, எந்த ஆணுடனும் உடலுறவுக் கொள்ளவில்லை என்று நேரிடையாக மொழிபெயர்க்காமல், அவ்வாறு நாஜுக்காக, மொழிபெயர்த்தனர். நுற்றுக்கணக்கான வெளிவந்துகொண்டிருக்கும் பைபிள்களில் பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன[10]. “நான் கன்னி, நான் எந்த ஆணையும் அறியேன், நான் எந்த ஆணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை, நான் யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை…………”, என்று பலவிதமாக மொழிபெயர்த்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளாமல், ஒரு பெண் கருவுற்றிருக்க முடியாது, குழந்தையையும் பெற்றிருக்க முடியாது. அப்படியென்றால், மேரியை யாரோ புணர்ந்தபோது,   சதோஷத்தினால் அவர் எந்த சப்தமத்தை எழுப்பினால் என்பதை திருவாளர் சாமி குலந்தைசாமி சொல்லியிருக்க வேண்டும், ஆனால், சொல்லவில்லை!

Victor Kulanday - a fundamentalist Catholic but posing as Swami

Victor Kulanday – a fundamentalist Catholic but posing as Swami

ஏசுவின் சகோதரர்களும், கிருத்துவ சாமிகளும்: “சிவன்-பார்வதி இணைப்பைக் கொச்சைப் படுத்தும் கிருத்துவர்கள், ஜோசப்-மேரி என்ற கணவன்-மனைவி புணர்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், ஆவி வந்து புணர்ந்தது என்பதனை ஏற்றுகொள்கிறார்கள். பிறகு மதங்களுக்கு இடையிலான உரையாடல் என்று வரும்போது, எப்படி, இந்துமதத்தை மட்டும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இந்துவும், பதிலுக்கு கேட்கலாமே, மேரிக்கு எப்படி குழந்தை பிறந்தது, என்று. இல்லை, குழந்தை பிறந்தது என்றால், யாரோ மேரியைப் புணர்ந்துள்ளான் என்றகிறாது என்றும் வாதிடலாம். இதைத்தவிர, பைபிளிலேயே ஏசுவின் சகோதரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அப்படியென்றால், மேரிக்கு இன்னும் பல பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள் என்றாகிறது. பிறகு அவர்கள் எப்படி பிறந்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், சர்ச்சை இந்துமயமாக்கப்படுகிறது என்று மிக்கக்காட்டமாக, புத்தகத்தை எழுதியுள்ள இவர், தானே காவியணிந்து கொண்டு, நீண்ட முடி வைத்துக் கொண்டு, சாமி குலந்தைசாமி என்று கூறிக் கொண்ட இவரது முரண்பாட்டை என்னென்பது?

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] http://www.newadvent.org/cathen/05573a.htm

[2] http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[3] According to the Syro-Malankara metropolitan, the messages are “in tune” with the Catholic faith. Unless proved otherwise, he said, he has reason to believe that the miracles are genuine and part of God´s design.

http://www.ucanews.com/story-archive/?post_name=/1998/02/26/local-bishops-say-they-witnessed-alleged-miracles-now-drawing-thousands&post_id=10952

[4] Bob Arson, Butchering the Human Carcass for Human Consumption, see at:  http://www.churchofeuthanasia.org/e-sermons/butcher.html

[5] And the Word was made flesh, and dwelled among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth (John: 1.14).

[6] Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you. Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. For my flesh is meat indeed, and my blood is drink indeed. (John 6:53-55)

[7] http://www.newadvent.org/cathen/05573a.htm

[8] Transubstantiation (in Latin, transsubstantiatio, in Greek μετουσίωσις metousiosis) is the change whereby, according to the teaching of the Catholic Church, the bread and the wine used in the sacrament of the Eucharist become, not merely as by a sign or a figure, but also in actual reality the body and blood of Christ.

[9] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988, p.72.

[10] http://biblehub.com/luke/1-34.htm

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)!

March 21, 1950. Inauguration of Saccidananda Ashram at Shantivanam. Henri Le Saux

March 21, 1950. Inauguration of Saccidananda Ashram at Shantivanam. Henri Le Saux

பேட் கிரிபித்ஸைப் போல மற்றவர்களைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரான்ஸுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கத்தோலிக்க ஆசிரமங்களை உண்டாக்குவது, கிருத்துவ சாமியார்கள், இந்து சாமியார்களைப் போன்று காவியாடை அணிவது, ஆச்சிரமங்களில் வாழ்வது, தாவர-சைவ உணவை உண்பது, சர்ச்சுகளை கோவில் போல கட்டுவது, இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது, முதலிய செயல்களில் ஈடுபட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தாலும், புரொடெஸ்டென்டுகளின் ஆதரவு இருந்தது வியப்பாக உள்ளது. எந்த நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்த அல்லது சட்டப்பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பெயர்கள் மாறுபடினும், நாடுகள் வேறுபடினும் அவர்களது எண்ணம், வாடிகன் கவுன்சில்-II திட்டத்தை நிறைவேற்றுவதில் தான் இருந்தது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

Bed Griffiths books

Bed Griffiths books

பரமருப்யானந்த [Jules Monchanin (1895-1957)]: ஜூல்ஸ் மோன்சானின் என்ற பிரெஞ்சு கத்தோலிக்கர், தண்ணீர்ப்பள்ளியில் 1938ல் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்[1] என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னொரு குறிப்பின் படி, இவர் இந்தியாவுக்கு 1939ல் வந்தார் என்றுள்ளது. அந்த ஆசிரமம் தான் பிறகு சச்சிதானந்த ஆசிரமம் என்று மாறியது என்று கூறப்பட்டது. 1939-1949 காலத்தில் திருச்சி டையோசிஸில் பாதிரியாராக இருந்தார். இந்துமதம் ஏதோ சீரழிந்த நிலையில் இருந்தது என்றும், அதனை காப்பாற்றத்தான், இவர் இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம் இப்பொழுது எழுதி வருகிறார்கள்[2]. ஆனால், வாடிகன் கவுன்சில்-II – படி தான், இவர் செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படிதான், இவர் பல இந்து யோகிகள் முதலியவர்களைச் சந்தித்துப் பேசினார், உரையாடினார், புண்ணியக்ஷேத்திரங்களுக்குச் சென்றார் என்றெல்லாம் இவரைப்பற்றிய விவரங்கள் கூறுகின்றன. இவர் செப்டம்பர் 1957ல் இவர் பிரான்சுக்குச் சென்றதும், அங்கு அக்டோபர் 1957ல் காலமானார்[3].

Henri Le Saux and Jules Monchanin

Henri Le Saux and Jules Monchanin

அபிஷிக்தானந்த (Henri Le Saux 1910-1973): ஹென்றி லெ சாக்ஸ் என்பவர் 1948ல் இந்தியாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். முதலில் ஆகஸ்ட் 15, 1948 அன்று கொழும்பு வந்தடைந்து, அங்கிருந்து, குளித்தலைக்கு வந்து அங்கிருந்த ஜூல்ஸ் மோன்சானின் என்ற பாதிரியுடன் சேர்ந்து கொண்டார். 1950ல் இவர் சச்சிதானந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார், அதாவது, முறைப்படி அப்பொழுது துவக்கி வைக்கப்பட்டது. அப்பொழுதுதான் தன் பெயரை அபிஷிக்தானந்த என்று மாற்றிக் கொண்டார். மே 15 முதல் 20 ஜூன் வரை 1969ல் பெங்களூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி தனது வாழ்நாளை செலவிட்டார் எனலாம். 1973ல் இந்தூரில் இருதய நோயினால் காலமானார்.

D S Amalorpavadass

D S Amalorpavadass

டி. எஸ். அமலோர்பவதாஸ் (1932-1999): டி. எஸ். அமலோர்பவதாஸ், கார்டினல் லூர்துசாமியின் தம்பி. இவர் பிரான்ஸுக்குச் சென்று படித்து வந்ததும் அக்டோபர் 1966ல் தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் [National Biblical, Catechetical[4], and Liturgical[5] Centre (NBCLC)] என்பதனை ஆரம்பித்தார். 1979ல் மைசூர் பல்கலைக்கழகத்தில், கிருத்துவப் படிப்பிற்கு ஒரு துறையை ஏற்படுத்தினார். 1980ல் இந்தியாவிலேயே முதன் முதலாக கிருத்துவப் படிப்புகளுக்கான ஒரு தனிப்பிரிவே உண்டாக்கப்பட்டது. அஞ்சலி ஆசிரமம் என்றதையும் ஆரம்பித்தார். இவர் செய்து வந்த இந்துமதக் கலப்புகளை, சில காத்தோலிக்கர்கள் எதிர்த்தனர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனால், சர்ச்சைகள் ஏற்பட்டன. 1978ம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 8 வரை பத்தாவது தீவிர பயிற்சி வகுப்பு நடந்தது பற்றி புகார்கள் கூறப்பட்டன. உடலுறவு பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது, இதனால், பங்கு கொண்ட இளைஞர்களில் சிலர் ஜோடியாக இருந்தனர், வெளியேசென்றனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது[6]. மே.25 1990 அன்று மைசூரிலிருந்து, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

Acharya Francis

Acharya Francis

ஆச்சார்ய பிரான்சிஸ் (1912-2002): பிரான்சிஸ் ஆச்சார்ய எனப்படுகின்ற ஜான் ரிச்சர்ட் மஹீ [John Richard Mahieu, 1912-2002] என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரி, ஜூலை.12, 1955 அன்று பாம்பேக்கு வந்தபோது, அபிஷிக்தானந்தா (டாம் ஹென்றி லெ சாக்ஸ்) வரவேற்றாராம். இவர் சாந்திவனத்தில் ஓராண்டு இருந்து தங்கி, ஜூல்ஸ் மோன்சானின் மற்றும் டாம் ஹென்றி லெ சாக்ஸ் முதலியோருடன் கத்தோலிக்க ஆசிரமம் உருவாக்குவது பற்றி பேசினர். அதன்படியே நவம்பர் 1956ல் கேரளாவுக்கு ஜான் ரிச்சர்ட் மஹீ புறப்பட்டார்.  திருவல்லாவின் பிஷப் ஜக்காரியா மார் அதனசியாஸ் [Zacharias Mar Athanasios] என்பவர் தான் இவரை, ஆசிரமம் துவங்க அழைத்தாராம். இதற்குள், பேட் கிரிபித்ஸ் அங்கு வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் சேர்ந்து டிசம்பர்.1 1956 அன்று கிறிஸ்திய சந்நியாச சமாஜ, குரிசமல ஆசிரமத்திற்கு, திருவல்லாவில் உள்ள சைரோ மலங்காரா கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அடிக்கல் நாட்டினர். மார்ச்.20, 1988 அன்று 88 ஏக்கர் நிலத்தை வாங்கினர். ஆகஸ்ட்.6, 1958 அன்று இந்திய பிரஜை உரிமை பெற்றார். இருபது ஆண்டுகள் பேட் கிரிபித்ஸ் அங்கு வேலை செய்த பிறகு, 1978ல் சச்சிதானந்த ஆசிரமித்திற்கு வருகிறார்.

Caridnal_Lourdusamy

Caridnal_Lourdusamy

துரைசாமி சைமன் லூர்துசாமி (Duraisamy Simon Lourdusamy 1924-2014): வாடிகன் கவுன்சில் திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றுவதில் முக்கியப்பக்கு வகித்தவர். நவம்பர் 1964ல் நடந்த வாடிகன் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்டவர். தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் (NBCLC) நிறுவி அதன் தலைவராக இருந்தார். அமலோர்பவ தாஸ் இவரின் தம்பி. கத்தோலிக்க பிஷப் மாநாட்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு, உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி பல திட்டங்களை வகுத்தார். போப் ஜான் பால் II கூட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் விஜயத்தின் போது கூட இருந்தார்.

அசைவ ஏசுவும், சைவ கிறிஸ்துவும்: பிண்ட, அண்ட, பேரண்ட விளக்கங்களைக் கொடுக்க முயன்ற (Cosmic Christ, Son of God, Son of Man) கிருத்துவ இறையியல் அறிவுஜீவிகள், குறிப்பாக பேட் கிரிபித்ஸ்[7], இந்துக்களுக்கு ஒரு சாத்துவீகமான ஏசுகிறிஸ்துவை சித்தரித்துக் காட்ட முயன்றனர். சரித்திர ரீதியில் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசு கிறிஸ்து இல்லை என்றாலும், அந்த கட்டுக்கதை பாத்திரத்தை, பலவாறு –

  1. யோகி, யோகேஸ்வரன்,
  2. பாம்பு படுகையின் கீழே உட்கார்ந்திருப்பது,
  3. நடராஜரைப் போல ஆடும் தோற்றம்,
  4. பிரம்மனைப் போறு நான்கு தலைகளுடன் இருப்பது,
  5. விஷ்ணுவைப் போல நான்கு கைகளுடன் இருப்பது

என்று இந்துக்களுக்குச் சித்தரித்துக் காட்டினர். ஆனால், சடங்குகள், கிரியைகள் மற்றும் பண்டிகைகளை விளக்கும் போது, உண்மையினை சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போய், வெலவெலத்து விட்டனர் என்றே சொல்லலாம். குறிப்பாக யுகாரிஸ்ட் (Eucharist) என்பது பலி, திருப்பலி, பலிப்பூசை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சடங்கினை விவரிக்கத் தயங்குகின்றனர். தமிழ் விகிபீடியா சொதப்பலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளது[8]. “திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும், இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு”, என்றதை ஒப்புக்கொண்டு, “லூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப்பலி” (sacrifice) என்று கருதுவதைவிடதிருவிருந்து” (communion) என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன”, என்று சொல்கிறது. அதாவது அவை ஏன் கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக இருக்கின்றன என்பதனை விளக்கவில்லை. மேலும், அத்தகைய நம்பிக்கையே பைபிளுக்கு எதிரான விளக்கம் ஆகும்[9].

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] Father Jules Monchanin (who chose to call himself Swami Paramarubyananda), (April 10, 1895 in Fleurie, Rhône – October 10, 1957 in Paris) was a French Catholic priest, monk and hermit. He was an ardent proponent of Hindu-Christian interfaith dialogue. He is known for the being one of the “Trinity from Tannirpalli” along with Le Saux, and Griffiths who were the co-founders of Saccidananda Ashram (also called Shantivanam), an ashram founded in the village of Tannirpalli in Tamil Nadu in 1938. http://en.wikipedia.org/wiki/Jules_Monchanin

[2] http://themathesontrust.org/papers/comparativereligion/Hindu-Christian%20Encounter.pdf

[3]   In 1939, Fr. Jules Monchanin (1895-1957) arrived in India from France. From 1939-1949 he served as a parish priest in numerous parishes in the diocese of Trichy, Tamil Nadu. Henri le Saux arrived in Trichy in 1948 and in 1950 the two priests established Saccidananda Ashram. Monchanin remained at the Ashram until serious illness caused him to return to France in September 1957; he died one month later.

http://oblatesofshantivanam.yolasite.com/tributes-to-fr-jules-monchanin.php

[4] Catechetical = relating to religious instruction given in preparation for Christian baptism or confirmation.  “instruction by word of mouth”, relating to religious teaching by means of questions and answers.

[5] Liturgical = Liturgy (Greek: λειτουργία) is the customary public worship done by a specific religious group, according to its particular beliefs, customs and traditions.

[6] Letter of Fr T. J. Chako, Assistant Director, Pastoral Training Centre, P.B.No.10, Impal, Manipur. Apendix – VII, pp.246-255. J. F.  Victor, The Paganization of the Church in India, Madras.

[7] http://www.patheos.com/blogs/christpathseminar/2013/06/teachings-of-the-cosmic-christ-from-fr-bede-griffiths/

[8] http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)

[9] Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you. Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. For my flesh is meat indeed, and my blood is drink indeed. (John 6:53-55)

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (3)!

May 13, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (3)!

Inter religious dialogue

Inter religious dialogue

கரூரில் இன்னொரு சாந்திவனம்ஆசிரமம்: கரூரிலேயே இன்னொரு சாந்திவனம் இருப்பது வியப்பாக இருக்கிறது. “மனநலம் குன்றியோருக்கு தேவை ஆதரவே; அனுதாபம் அல்ல’ என்ற நோக்கில், கரூர் மாவட்டம் தோகமலை அருகே புழுதேரியில் மனநல காப்பகம் ஒன்று இயங்குகிறது[1] என்று தினமலர் இவ்விவரங்களைக் கொடுக்கிறது. கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, கரூர் வழியாக செல்கிறது. வடமாநிலங்களை சேர்ந்த பல வாகனம் கரூரை கடந்து செல்வதால், பல இடங்களை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், லாரியில் இங்கு இறக்கிவிடப் படுகின்றனர். லாரி டிரைவர்களுக்கு கணிசமான தொகை கிடைப்பதால், இந்த நிகழ்வு தொடர்கிறது. இதனால், கரூர் சாலைகளில் மனநிலை தவறியவர்களை காண்பது வாடிக்கையாவிட்டது. நெருங்கவே அச்சப்படும் வகையில் ஆக்ரோஷமாகவும், அருவருப்பாகவும் உள்ள இவர்களை மனிதாபிமானத்துடன் கவனிக்கும் பொறுப்பை, புழுதேரி “சாந்திவனம்’ அமைப்பினர் ஏற்றுள்ளனர். சாலையில் திரியும் மனநிலை பாதித்தவர்களுக்கு அடைக்கலம், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதுடன், பலரை அவர்களுடைய உறவினர்களிடமே சேர்க்கும் கடமையையும் சாந்திவனத்தினர் செய்கின்றனர்.

சச்சிதானந்த ஆசிரமம் - நுழைவு

சச்சிதானந்த ஆசிரமம் – நுழைவு

மக்களின் ஆதரவுடன் நடக்கும் சாந்தி ஆசிரமம்: “சாந்திவனம்’ அமைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது[2]: மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மறுவாழ்வு ஏற்படுத்த அமைப்பு துவங்கினோம். இந்நிலையில், ஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டோர் பாதிக்கப்பட்டது அறிந்து, காப்பகம் அமைக்க தீர்மானித்தேன். டாக்டர் கலையரசன் மற்றும் நண்பர்கள் உதவியுடன், தோகமலை அருகே புழுதேரியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் காப்பகம் அமைத்தோம். இதுவரை 200க்கு மேற்பட்டோர் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஐந்துக்கு மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளிக்க காப்பகம் வருகின்றனர். இதுமட்டுமல்லாது “சாந்திவனம்’ பரிந்துரைக்கும் நபருக்கு, திருச்சியில் உள்ள டாக்டர்கள் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கின்றனர். கரூரில் பொறுப்பில் இருந்த அனைத்து கலெக்டர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருந்து கிடைக்க உதவியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாந்திவனத்தில் இறந்த நோயாளி ஒருவருக்கு, ஜாதியின் பெயரால் தகனம் செய்ய இடமளிக்காமல் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், சாந்திவனம் அருகில் மயானத்துக்கு அரை ஏக்கர் நிலமும் அளிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் எந்த உதவியும் இல்லாமல், மக்கள் நன்கொடை மூலமாக சாந்திவனம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உதவி கோரி, சமூகநலத்துறை மத்திய இணை அமைச்சர் நெப்போலியனிடமும் கோரிக்கை அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

சச்சிதானந்த ஆசிரமம் - பழைய நுழைவு வாயில்-மூடப்பட்டுள்ளது

சச்சிதானந்த ஆசிரமம் – பழைய நுழைவு வாயில்-மூடப்பட்டுள்ளது

பேட் கிரிபித்ஸின் சாந்திவனம் உருவானது: ஆலன் ரிச்சர்ட் கிரிபித்ஸ் [Alan Richard Griffiths] என்ற ஆங்கிலேயர் 1955ல் இந்தியாவிற்கு வந்து பெங்களூரில் கெங்கேரி என்ற இடத்தில் தங்கினார். அங்கு நடப்பவை எல்லாம் அதிகமாக மேற்கத்தைய பாணியில் இருப்பதாக கேரளாவுக்குச் சென்று, அங்கு பிரான்சிஸ் ஆச்சார்யா என்ற பெல்ஜிய நாட்டுப் பாதிரியுடன் சேர்ந்து, கிறிஸ்திய சந்நியாச சமாஜ், குரிசமல ஆசிரமம் ஆரம்பித்தார். இது சிரிய சடங்குகளைக் கொண்ட சிரிய-மலங்காரா கத்தோலிக்க சர்ச்சைச் சேர்ந்ததாகும். அப்பொழுதுதான் காவியுடை அணிந்து கொண்டு, தயானந்த என்று கிறிஸ்தவ சாமியாராக மாறினாராம். இவர் கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் அமைப்பில் உள்-கலாச்சாரமயமாக்கல் மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் வேலைகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். 1968ல், இந்த சச்சிதானந்த ஆசிரமத்திற்கு வந்தார். இது பிரெஞ்சு பெனிடிக்டைன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாதிரி டாம் ஹென்றி லெ சாக்ஸ் [the French Benedictine monk Abhishiktananda, Dom Henri Le Saux, OSB (1910-1973)] மற்றும் இன்னொரு பிரெஞ்சுக்காரரான ஜூல்ஸ் மோன்சானின் [Jules Monchanin (1895-1957)] என்பவருடன் சேர்ந்து 1950ல் இதனைத் தொடங்கினார். டாம் ஹென்றி லெ சாக்ஸ் மற்றும் ஜூல்ஸ் மோன்சானின் முறையே அபிஷேகானந்த மற்றும் பரம அருப்யனந்த என்று தம்மை அழைத்துக் கொண்டனர். ஜூல்ஸ் மோன்சானின் / அபிஷேகானந்த இதனை 1938ல் ஆரம்பித்தார் என்று விகிபிடியா இன்னொரு இடத்தில் குறிபொபிடுகின்றது. வெயின் ராபர்ட் டீஸ்டேல் [Wayn Robert Teasdale] பேட் கிரிபித்ஸின் நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். 1957ல் மோன்சானின் இறந்ததும், லெ சாக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிருத்துவயியலைக் கற்றுத் தேர்ந்த தயானந்த இந்து-கிருத்துவ உரையாடல்களைப் பற்றி 12 புத்தகங்களை எழுதித் தள்ளினார். அதனால், சாமி தயானந்த என்றழைக்கப் பட்டார்.

சச்சிதானந்த ஆசிரமம் - 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

சச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை மாற்றிக் கொண்ட ஆங்கிலேயர்: சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலிகென் சர்ச் ஆப் இந்தியா [Anglican Church of India (ACI)] சுதந்திரமாக செயல்பட்டு வந்தன. சுதந்திற்குப் பின்பு, ஆங்கிலேயர்க் கிருத்துவர்கள், மதம் மாறிய இந்தியக் கிருத்துவர்களுடன் “யுகாரிஸ்ட்” என்ற மாமிசம் சாப்பிடுவது மற்றும் மது குடிப்பது போன்ற பலி-சடங்குகளில் பங்கு கொள்ள, பாரம்பரிய ஆங்கிலிகன் கிருத்துவர்கள் அதனை விரும்பவில்லை. பலியில் உபயோகப்படுத்தப் படும் அப்பம் மற்றும் வைன்/மது முதலில் தலைமை பூஜாரி எச்சில் சேய்து மற்றவர்களுக்கு கொடுக்கும் விசயத்தில் பிரச்சினை ஆரம்பித்தது. பிறகு, அப்பம் மற்றும் வைன்/மது, ஏசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுகின்றன என்று நம்புவதிலும், வேறுபாடு ஏற்பட்டது. உண்மையில் அவ்வாறு மாறுகிறது என்று நம்பவேண்டும் என்று அடிப்படைக் கிருத்துவம் நம்பவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. ஆனால், உள்ளூர் கிருத்துவர்கள் அவ்வாறாக நம்புவதில்லை. போச்சுகீசியர்களால் நுழைக்கப்பட்ட சடங்குகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை[3]. கேரளாவில், சிரிய கிருத்துவர்கள் மீது வாடிகன் தனது அதிகாரத்தை சுமத்துவதையும் அவர்கள் விரும்பவில்லை[4]. கேரள கிருத்துவப் பிரிவுகள் பலமுறை உச்சநீதிமன்றம் வரை வழக்குத் தொடுத்து சண்டைப் போட்டுள்ளனர்[5]. இவ்வாறு, இறையியல் மற்றும் இனபாகுப்பாடு விசயங்களில் ஒத்துப்போகாத நிலைகளை மறைத்து வேறுவிதமாக திரிபு வாதங்கள் கொடுக்கப்பட்டன.

INCULTURATION OPPOSED BY SOME CHRISTIANS

INCULTURATION OPPOSED BY SOME CHRISTIANS

இறையியல் பிரச்சினைகள், உள்கலாச்சாரமயமாக்கல், மாறும் முறைகள்: சென்னையில், ஆங்கிலேயர்கள் கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்கள், விடுகள், தெருக்கள், வழிபாடு கூடங்கள், எல்லாவற்றையுமே வெள்ளையர் மற்றும் கருப்பர் உபயோகப்படுத்தப் படும் நிலையில் தான் வைத்தனர்[6]. இதனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அவர்கள் ஆகஸ்ட்.14, 1964ல் தனியாக இந்திய ஆங்கிலிகென் சர்ச் என்பதனை ஆரம்பித்தனர். அதனால், 1947ல் சர்ச் ஆப் சவுத் இந்தியா [the Church of South India (CSI)] என்று செப்டம்பர்.27, 1947 அன்று தனியாக ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஆங்கிலிகென், பாப்டிஸ்ட், பேஸல் மிஷன் மற்றும் பிரெஸ்பிடேரியன் [Anglicans, Baptists, Basel Mission, Lutherans and Presbyterians] முதலிய பிரிவுகள் அடங்குவர். இவையெல்லாம் இறையியல் ரீதியில் இருந்தாலும், சொத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் தகராறுகள் இருந்தன. 1947லேயே இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ், ஒரு கம்பெனியாக [in 1947 the Church of South India Trust Association (CSI-TA) was registered as a company] பதிவு செய்யப்பட்டது. ஆனால், சொத்துக்கள் சண்டை சமீபத்தில் கூட நடந்து, நீதிமன்றத்திற்குச் சென்றது[7]. கேரளா மற்றும் இதர மாநிலங்களிலும் இப்பிரச்சினை சொத்து, பணம், பதவி போன்ற விவகாரங்களில் ஆரம்பித்தாலும், இறையியல் பூச்சு கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். பிறகு, சுதேசி சர்ச் இயக்கம் போன்றவற்றை ஆரம்பித்து, இந்துமுறைகளில் கிறிஸ்து, மேரி முதலியவர்களை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, அத்தகைய முறைகளை செய்ய அனுமதித்தது.

INCULTURATION OPPOSED BY SOME CHRISTIANS

INCULTURATION OPPOSED BY SOME CHRISTIANS

இந்திய காலாச்சாரத்தை வைத்துக் கொண்டு, கடவுளை மாற்றிய கிருத்துவர்கள்: வெள்ளை கிருத்துவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் உள்நாட்டு கிருத்துவர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலையில், கலாச்சாரம், பண்பாடு, நாகரிக போன்ற காரணிகள் குறுக்கிட்டன. இதனால், கலாச்சாரத்தை முக்கியமான காரணியாகக் கொண்டு, கிருத்துவர்களான மாறிய இந்துக்களை, அப்படியே அவர்களது கலாச்சாரத்திலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் ஜாக்கெட்-புடவை அனிவது, தலைமுடித்து பூவைத்துக் கொள்வது, நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, தாலி-நகை அணிவது, என்று எல்லாமே அனுமதிக்கப்பட்டன. ஆனால், கடவுளை மட்டும் மாற்றினர். ஆங்கிலேயர் 1947ல் சுதந்திரம் கொடுத்த உடனே, சமய ரீதியில், இந்தியாவைக் கட்டுப்படுத்த திட்டமிட்டனர் என்று தெரிகிறது. இதனால், கிருத்துவ பாதிரிகளை, இந்துமதத்தை, கிருத்துவமதத்துடன் ஒப்பிட்டு, ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். ஒரு பக்கம் இந்துமதத்தை உயர்வாக பேசுவது, மறுபுறம் அதனைக் கடுமையாகத் தாக்குவது என்ற முறையில் செயல்பட்டுவருகின்றனர். இந்துமதத்தை அப்படியே காப்பியடித்து, இந்துக்களை ஏமாற்றி, மதம் மாற்ற வேண்டும் என்பதுதான் இந்த கத்தோலிக்க ஆசிரமங்களின் நோக்கம். இவ்வித ஆராய்ச்சியில், சைவம் மற்றும் வைணவம், தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏற்கெனவே ஆரிய-திராவிட பிளவு இருப்பதை அவர்கள் அறிந்தாலும், அதனைக் குறிப்பிடாமல், சமஸ்கிருதம்-தமிழ் முறையில் அணுகினார்கள்.

சச்சிதானந்த ஆசிரமம் - ஐந்து கல்லறைகள்

சச்சிதானந்த ஆசிரமம் – ஐந்து கல்லறைகள்

1969ல் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா (CBCI), சர்ச்சுகளை இந்துமயமாக்கும் முறையில் என்ற பெங்களுரின் ஆர்ச்-பிஷப் மற்றும் லிடர்ஜி கமிஷனின் (Liturgy Commission) தலைவருமான டி.எஸ். லூர்துசாமி (D. S. Lordruswmy) மிக்கவேகமாக செயல்பட்டார். டி.எஸ். அமலோர்பவ தாஸ் (D. S. Amalopavadass) என்ற தனது சகோதரை அதில் ஈடுபடும் படி ஊக்குவித்தார். இந்த டி.எஸ். லூர்துசாமி கார்டினல் ஆகி, இப்பொழுது போப்பாகி விட்டார். வாடிகனுடைய ஏப்ரல்.25, 1969 தேதியிட்ட ஆணை எண்.82/69ன்படி, ஏற்றுக்கொள்ளப்பட 12 வழிபாட்டு முறைகளில், சர்ச்சுகளில் கடைபிடிக்கலாம் என்றுள்ளது.  விக்டர் குலந்தை (Victor J. F. Kulanday) உயிரோடிருக்கும் வரை இந்த “சர்ச்சுகளை இந்துமயகாக்கும் முறை”களைத் தீவிரமாக எதிர்த்து வந்தார். இப்பொழுது, மைக்கேல் பிரபு என்பவர் தனது இணைதளத்தில் இம்முயற்சிகளைக் கண்டித்து வருகிறார்[8].

சச்சிதானந்த ஆசிரமம் - பால் நெருங்கிய தோற்றம்

சச்சிதானந்த ஆசிரமம் – பால் நெருங்கிய தோற்றம்

© வேதபிரகாஷ்

13-05-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=44793&Print=1

[2]  தினமலர், மனநலம் குன்றியவர்களுக்கு ஆதரவு : களப்பணியில்சாந்திவனம்சாதிப்பு, ஜூலை.22, 2010:02:59.

[3] Moran Mar Basselios Catholicos v. Thukalan Paulo Avira & others (1958 K.L.T.721) = AIR 1959 SC 31 ; http://indiankanoon.org/doc/37282232/

[4] Supreme Court of India – Most. Rev. P.M.A. Metropolitan & … vs Moran Mar Marthoma & Anr on 20 June, 1995, Equivalent citations: 1995 AIR 2001, 1995 SCC Supl. (4) 286, Author: R Sahai, Bench: Sahai, R.M. (J,   http://indiankanoon.org/doc/634316/

[5] Supreme Court of India – Moran Mar Basselios Catholicos … vs The Most Rev. Mar Poulose … on 21 May, 1954, Equivalent citations: 1954 AIR 526, 1955 SCR 520, Author: B Jagannadhadas ,Bench: Jagannadhadas, B. http://indiankanoon.org/doc/1864509/

[6]  பிளாக் டவுன் / தெரு மற்றும் ஒயிட் டவுன் தெரு என்ற பாகுபாடு இருந்தது. சர்ச்சுகளில் இந்தியர்கள் நிற்க தனி இடம் ஒதுக்கப்பட்டது.

[7] The Madras High Court ruled this week that the Church of South India Trust Association (CSI-TA) is a company registered under the Companies Act, and that the Registrar of Companies (RoC) is entitled to invoke the provisions of the Companies Act by calling upon CSI-TA to produce documents for inspection under Section 209A of the Act.

http://articles.economictimes.indiatimes.com/2012-04-01/news/31266997_1_csi-church-of-south-india-ta

[8] http://ephesians511blog.com/category/hinduisation-of-the-catholic-church-in-india/

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (2)!

May 12, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (2)!

vatican council II

vatican council II

கிருத்துவமதம், மற்ற மதங்களில் உள்ள நல்ல விசயங்களை விடாது: கிருத்துவமதம், மற்ற மதங்களில் உள்ள நல்ல விசயங்களை விடாது, அவற்றை எடுத்துக் கொள்ளும் என்ற விதத்தில், அவர்களது வாதம் இருந்தது[1]. மற்ற மதங்களில் உள்ள நல்லவை மற்றும் புனிதமானவற்றை கத்தோலிக்க மதம் மறுக்காது. பல விதங்களில் வேறுபட்டிருந்தாலும், உண்மையுடன் மனிதர்களுக்கு ஞானத்தை அளிப்பதாக இருந்தால், அத்தகைய தத்துவ-ஞானங்களை விசுவாசத்துடன் மதிக்கிறது என்ற பீடிகையுடன் தனது திட்டத்தை அறிவித்தது. அதாவது, மத-யதேச்சதிகாரம் கொண்ட முறையில், அகம்பாவத்துடன் அத்தகைய வாதத்தினை வைத்துள்ளது தெரிந்தது. மற்ற மதங்களில் நல்லது இருக்கின்றன, எனும்போது, கிருத்துவமதத்தில் அவை இல்லை என்றாகிறது. பிறகு, உண்மைகள் எந்த மதத்தில் இருக்கின்றனவோ, அம்மதத்தைப் பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும், மாறாக, இந்துமதநூல்களை ஆராய்ச்சி செய்துவிட்டு, இந்துக்கள் நம்பும் “பரப்பிரம்மம்” தான் ஏசு, “மறைந்துள்ள கிறிஸ்து” என்றெல்லாம் விளக்கம் கொடுப்பதிலிருந்து, அவர்களது மதமாற்றம் திட்டம் தான் வெளிப்படுகிறது.

Bede Ashram - temple - Peter one side

Bede Ashram – temple – Peter one side

இறையியல் திரிபுவாதங்கள்: மேலும், இங்கு ஒரே ஒர் உதாரணம் கொடுக்கலாம். விக்டர் குலந்தை என்ற கத்தோலிக்க அடிப்படைவாத, மதவாத கிருத்துவர் தமது நூலில், சிவன் பார்வதியைப் புணரும் போது, வெளிப்பட்ட சப்தம் தான் ஓம் என்று விளக்கம் அளித்துள்ளார். பிறகு அந்த சப்தம் தான், ஜான் குறிப்பிட்ட ஓம் என்ற வார்த்தை, அந்த வார்த்தைதான், மாமிசம் ஆனது, அதுதான் ஏசு என்று பேட் கிரிபித் போன்றவர்கள் எப்படி விளக்கம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கிருத்துவ நம்பிக்கையின் படி, ஜேஹோவாவின் ஆவி (Holy spirit) மேரியின் மீது வந்திறங்கி, அவளது கருப்பையில் நுழைந்ததால், அதிசயமாக, யாருடைய ஆணின் புணர்ச்சி இல்லாமலேயே கருவுற்று ஏசுவைப் பெற்றேடுத்தாள் என்றுதான் உள்ளது. இதனை “பரிசுத்தமான கருவுற்றத் தன்மை” [இம்மாகுலேட் கன்சப்ஸன், Immaculate conception] என்று அபாரமாகப் புகழ்கிறார்கள். இதனை மறுப்பவன் கிருத்துவன் ஆகமாட்டான்.

Bede Ashram - temple - Benedinct another side

Bede Ashram – temple – Benedinct another side

மோசடி உரையாடல்களும், ஆதாரங்களை அழித்தலும், கட்டுக்கதைகளை உருவாக்குதலும்: மேலும் கடந்த 300 ஆண்டுகளில் அவர்களது செயல்கள் இந்து மதத்தினை மதித்தாக இல்லை. பெஸ்கி (Beschi) என்ற பாதிரி, சிவப்பிரகாசர் (1680-1746) இயற்றிய “ஏசுமதநிராகரணம்” மற்றும் “ஏசுமதகண்டனம்” போன்ற நூல்களை, வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி எரித்துவிட்டான்[2]. எஞ்சியுள்ள சில பாடல்களிலிருந்தே, அவர் கிருத்துவமத்தை எந்த விதத்தில் மறுத்திருந்தார் என்று தெரிகிறது[3]. அதாவது, கிருத்துவர்கள் விசயம் தெரிந்தவர்களிடம் தங்களது உரையாடல்களை வைத்துக் கொள்ள மட்டார்கள் என்றாகிறது. போர்ச்சுகீசியர் திருமலைக் கோவிலை கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர், ஆனால், ராமராயர் அவர்களது சதிதிட்டத்தை முறியடித்துவிட்டார். ஆனால், ராபர்டோ டி நொபிலி வந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு சர்ச்சாக இருந்தது, ஆனால், இந்துக்கள் அதனை கோவிலாக மாற்றிவிட்டனர் என்று கட்டிவிட்ட கதையினை இன்றும் கிருத்துவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அக்கட்டுக்கதையினை பரப்பி வருகிறார்கள்[4].

Deivanayagam, Johnson, Basakara dos, Devalkaa, Alva edison, Sameul

Deivanayagam, Johnson, Basakara dos, Devalkaa, Alva edison, Sameul

மற்ற பேராசிரியர்கள், அறிவிஜீவிகள், மேதாவிகள், பண்டிதர்கள், சாஸ்திரிகள் என்று சொல்லிக் கொள்ளும் கிருத்துவர்கள் – ஜான் சாமுவேல், மைக்கேல் அமலதாஸ், எம். தெய்வநாயகம், மைக்கேல் பாரடே, அலெக்ஸ்சாண்டர் ஹாரிஸ், நீனான் போன்றோர் – விடாமல் அதைப் போன்ற கட்டுக்கதைகளை சிறிதும் வெட்கமில்லாம் பரப்பி வருகின்றனர்[5]. இவ்வாறு அவர்களது “உரையாடல்கள்” மோசடிகளாக இருக்கின்றன. மேலும், விசயம் தெரிந்த இந்துக்கள் கிருத்துவத்திலுள்ள மடத்தனமான விசயங்களை எடுத்திக் காட்டினால், அத்தகைய ஆதாரங்களை அழித்து விடுகிறார்கள். அவற்றிற்கு மாறான, மக்களை ஏமாற்ற, திசைத்திருப்ப புதிய கட்டுக்கதைகளை உருவாக்குகிறார்கள். இதுதான் அவர்களது “உரையாடல்” நிலைப்பாடாக இருந்து வருகிறது.

Ave maria - Hinduized statue

Ave maria – Hinduized statue

இந்துமத ஆராய்ச்சி, இந்துவிரோத போக்கு, அவதூறான பிரச்சாரம், கிருத்துவ மிஷனரிகளின் கேவலமான முறை: ஐரோப்பியர் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆராய்ச்சி எப்பொழுதும் இந்துமதம், இந்து கடவுளர், வேதங்கள், வழிபாடு முயற்சிகள், நம்பிக்கைகள் என அனைவற்றையும் தாறுமாறாக புரிந்து கொண்டு அவற்ற தூஷித்து வந்துள்ள நிலையாக உள்ளது. பிறகு அதே தோரணையில் அவர்களது கலை, கட்டிடங்கள், விஞ்ஞானம், தொழிற்நுட்பம் போன்றவையும் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டது[6]. இந்துக்களை எப்பொழுதுமே அநாகரிகமானவர்கள், காட்டுமிராண்டிகள், ஜென்டுகள், நம்பிக்கையில்லாதவர்கள், விக்கிர ஆராதனையாளர்கள், பாவிகள், விதவைகளை எரிப்பவர்கள், சூத்திரர்களைக் கொடுமைப் படுத்துகிறவர்கள், தேர்த் திருவிழாவில் ரதத்தின் முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் என்றெல்லாம் ஏளனம் செய்து எழுதி வைத்தனர்[7]. பிறகு வந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கிருத்துவ மிஷனரிகளும் அவற்றையே திரும்ப-திரும்ப எழுதி வைத்தனர். இன்றும் எல்லாவிதமான கிருத்துவ மிஷனரிகளும் அப்படியே எழுதி வருகின்றனர். இதுதான் அவர்களது “உரையாடல்”களின் லட்சணம்.

Bede Ashram - reconstructed temple

Bede Ashram – reconstructed temple

2010ல் தினமலரின் விளக்கம் பாராட்டுவதாக உள்ளது: கரூர் அருகே 60 ஆண்டுக்கு முன் மதமாற்ற நோக்கத்தில் உருவான ஒரு மடம், தற்போது மத நல்லிணக்கம் மூலம் அமைதிக்கு வழிகாணும் இடமாக மாறிவிட்டது[8] என்று ஆரம்பித்துள்ளது. இயற்கை சூழல் நிறைந்த காவிரி கரையில், அமைதி நாடிவரும் வெளிநாட்டினரை கவரும் சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகிறது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது தண்ணீர்பள்ளி. கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இவ்வூரில் காவிரி கரையில் சாந்திவனம் ஆசிரமம் அமைந்துள்ளது. ஃபிரான்ஸை சேர்ந்த பாதிரியார்கள் ஜூலியஸ் மோன்சானே, அபிசிக் ஆனந்தா இருவரும் சேர்ந்து 1950ல் மடத்தை துவக்கினர்[9]. மதமாற்றும் நோக்கத்தில் மடம் துவங்கப்பட்டாலும், இங்குள்ள ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தில் நாட்டமடைந்து அமைதிக்கு வழிதேடும் மடமாக மாறிவிட்டது. சாந்திவனத்துக்கு வெளிநாட்டினர் வருகை குறிப்பிட்ட காலங்களில் அதிகம் உள்ளது. இயற்கை சூழலுடன் கூடிய 15 ஏக்கர் தோட்டத்தில் தங்குவதற்கான 50க்கு மேற்பட்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது. தென்னை, வாழை, பலா, மா என கனி மரங்கள் இங்கு பந்தலாக நிற்கிறது. இங்கு வளரும் 40க்கு மேற்பட்ட பசுக்களுக்கு தேவையான புல் மற்றும் தீவனம் இவ்வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கு அடுத்து இங்குதான் இயற்கை எழில்சார்ந்த பகுதியில் ஒரு ஆசிரிமம் அமைந்துள்ளது.

Bede Ashram - temple - Peter

Bede Ashram – temple – Peter

மூன்று மதமுறைகள் பின்பற்றப் படுவது: இங்குள்ள கோவிலில் முறைப்படி தினசரி மூன்றுமுறை வழிபாடு நடக்கிறது. பிரம்மனை பிரதிபலிக்கும் வகையில் நான்கு முனிவர்கள் நான்கு திசைநோக்கி முதுகு ஒட்டிய நிலையில் அமர்ந்துள்ள ஒரு சிற்பமும் தியான மண்டபம் நடுவில் உள்ளது. இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் முறைகளை பின்பற்றி சர்வ மத ஐக்கியமாக வழிபாடு நடக்கிறது. கோவில் சிற்பங்களும் மும்மத இணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சச்சிதானந்தா ஆஸ்ரமத்தில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தில் அடிப்படை வசதிக்கு உதவி, குடிநீர் வசதி, சிறுதொழில் உதவி செய்யப்படுகிறது. சாந்திவனம் சார்பில் ஒரு முதியோர் காப்பகம், ஒரு குழந்தைப்பள்ளி நடத்தப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் மற்றும் நவம்பர், டிசம்பரில் வெளிநாட்டினர் இங்கு வருகின்றனர். இவர்களுக்கு உணவு, வழிபாடு வசதி, யோகா மையம், நூலகம் உள்ளிட்ட வசதி செய்துதரப்படுகிறது. தற்போது 60ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சாந்திவனம், தொடர்ந்து அமைதிக்கு வழிகாணும் இடமாக மாறி வருகிறது[10].

Bede Ashram - library

Bede Ashram – library

© வேதபிரகாஷ்

12-05-2015

[1]  “The Catholic Church rejects nothing that is true and holy in these religions. She regards with sincere reverence those ways of conduct and of life, those precepts and teachings which, though differing in many aspects from the ones she holds and sets forth, nonetheless often reflect a ray of that Truth which enlightens all men”, Nostra Aetate, 2.

http://www.vatican.va/roman_curia/congregations/cfaith/cti_documents/rc_cti_1988_fede-inculturazione_en.html

[2] S. Somasundara Desikar, Tamil Pulavar Varalaru – Padinezham Nutrandu (Tamil – The History of Tamil Poets – 17th Century), Madras, 1939, p.174.

[3] Sivaprakasar was a Shaivite saint-poet, who composed two works “Yesumathanirakaranam” (The Total Rejection of the religion of Jesus) and “Yesumathakandanam” (The Refutation and Condemnation of the Religion of Jesus). As four or five poems survived and they very strongly refute and reject the religion of Jesus, it can be inferred that the works must have been very critical about the Christianity.

[4] Vincent Cronin,  A Pearl to India – The Life of Roberto de Nobili, Rupert Hart-Davis, London, 1959.

[5] John Samuel, Michael Amaladoss, M. Deivanayakam, Michael Faraday, Alexander Harris, Ninan, and host of Christian professors, church historians and others have been engaged in such propagandist work. To push the Christian chronology in India to the first centuries, they bring the “myth of doubting Thomas” in their discourses. Without any shame they fabricate ‘evidence’ to support such baseless fables.

[6] Their studies and research started attacking the Hindu tradition with disparagement of Hindu manners and customs, denigration of Gods and Goddesses, blaspheming of Indian scriptures, belittling of Indian arts and sciences. Suppressing these facts, they started writing against the Hindus.

  1. V. Ramakrishna Rao, Christian-Vaishnavite Dialogue: A critical Study, to appear in a book Inculturation and Dialogue in India by the Christian Missionaries, New Delhi.

[7] Thus, the Hindus have been mentioned as barbarians, non-believers, heathens, gentoos, idolaters, sinners, killers of widows, oppressors and suppressors of women and Sudras and so on.

[8] தினமலர், சாந்திவனம் மடத்தின் நோக்கம் அமைதி, அக்டோபர்.14, 2010: 02:39.

[9] ஜூலியஸ் மோன்சானே 1938ல் இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார் என்று விகிபிடியா கூறுகிறது.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=106125&Print=1

நித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்!

May 2, 2012

நித்யானந்தாவும், லீலா சாம்ஸனும்: பதவியேற்றம், பதவியிறக்கம் – கலாச்சார-மத சம்பந்தமான நிறுவனங்களில் நியமனங்கள்-சர்ச்சைகள்!

கலாச்சார நிறுவனங்களில் அரசு நியமனம்: ஒரு முஸ்லீம் அல்லது கிருத்துவ நிறுவனத்தில் ஒரு இந்து எப்பொழுதும் நிர்வாகியாக, தலைவராக, ஆளுனராக நியமிக்கப்படுவதில்லை. அவ்வாறு நினைப்பதே தவறானது, பாவமானது ஏன் மாபெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, முஸ்லீம், நாத்திகர், கம்யூனிஸ்ட் என்று பலர் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுகின்றனர். முஸ்லீம் அல்லது கிருத்துவ சார்புடைய பல்கலைக்கழகத்திற்கு ஒரு இந்து துணைவேந்தராக முடியாது. சோனியா மெய்னோ ஒரு கத்தோலிக்க எதேச்சதிகாரி என்பதால், பல குறிப்பிட்ட பதவிகளில் கிருத்துவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் என்பது தெரிந்த விஷயமே. அம்பிகா சோனி என்று வலம் வரும் அமைச்சரே கிருத்துவர் தாம். இது கூட பலருக்கு தெரியாது. மேலும் அவர்கள் “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற கொள்கையைப் பின்பற்றுவதால், கிருத்துவர்களாக மாறினாலும், இந்துக்களைப் போலவே பெயர்களை தொடர்ந்து வைத்துக் கொண்டு, உடை-அலங்காரம் செய்துகொண்டு உலா வருகிறார்கள்.

லீலா சாம்ஸன் கலாச்சேத்திரத்தின் இயக்குனராக நியமிக்கப் பட்டார்: லீலா சாம்ஸன் என்ற கிருத்துவ நாடகி கலாச்சேத்திரத்தின் இயக்குனராக 2005ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது அவர் கிருத்துவர் என்று யாரும் எண்ணவில்லை. லீலா சாம்ஸன் சந்தேகமில்லாமல் நிச்சயமாக ஒரு திறமைமிக்க நர்த்தகிதான். ஆனால், அவர் கலாசேத்திராவின் இயக்குனராக பதவியேற்றபோது, யாரும் அவரது நடனத்திறமையில் எந்த மாற்று-எதிர்க்கருத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறிது சிறிதாக அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் அல்லது மாறுதல்கள், நிச்சயமாக சிலரின் மனங்களில் கேள்விகளை எழுப்பின. இப்பொழுது கூட இந்தியன் எக்ஸ்பிரஸில், லீலா சாம்ஸனை ஆதரித்து இப்படி ஒரு கருத்து மானினி சட்டர்ஜி என்ற பெண்மணியால் பதிவுசெய்யப்பட்டுள்ளது[1].

Attack on Leela SamsonLeela Samson, famous Bharatanatyam dancer and current head of the prestigious Kalakshetra Foundation in Chennai, is the target of a vicious attack this week. According to writer P. Deivamuthu, the Mumbai-based editor of Hindu Voice, Samson “has destroyed the values for which this institution stands for and is still continuing the destruction in a subtle way.

Her alleged crimes include a “disdain” for idol worship, removal of Vinayaka idols for which regular poojas used to be conducted by students, discouragement of prayers within Kalakshetra, and setting up a movie club “which has completely spoilt the gurukulam atmosphere of this traditional institution.” She is also accused of planning to demolish the temple structure of the Kalakshetra Auditorium[2] “under the pretext of modernising it”, removing religious symbols which earlier adorned the certificates issued by the institution, and removing earlier restrictions and “thus encouraging the meeting of boys and girls in any hostel room at any time of the day and night.”

There is no mention of the fact that Leela Samson is herself an illustrious alumnus of the institution[3]. Instead, the author says “members of the performing arts world outside Kalakshetra Foundation and members of the Hindu community should initiate an action immediately to stop the planned destruction of a glorious institution teaching and nurturing the ancient traditions of Sanatana Dharma.”

உபி தேர்தலில் இருந்து ஆரம்பித்து, பி.ஜே.பியின் வரும் தேர்தல் யுக்தி என்று விவரித்து லீலா சாம்ஸனில் வந்து முடிக்கிறார் அந்த பெண்மணி.

ஊடகக்காரர்களின் பாரபட்ச, நடுநிலைமையற்ற கருத்துகள்-எழுத்துகள்: எனவே, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக ஊடகத்துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊன்றியிருக்கிறார்கள் அல்லது சித்தாந்தங்களில் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். இந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், தொன்மை முதலிய விஷயங்களில் உண்மைக்குப் புறம்பான பல கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்து மதத்தைப் பற்றி பல தவறுதலான, எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதனால். இந்து மதம், இந்துக்கள் என்றாலே அவர்களுக்கு, அவையெல்லாம் ஏதோ ஆர்.எஸ்.எஸ், பி,ஜே.பி விவகாரங்களைப் போல சித்திரிக்கிறார்கள் அல்லது அவ்வாறே முடிவாக எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் இந்துக்களின் பிரச்சினைகளை அலசினாலோ, விமர்சித்தாலோ, அல்லது இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது-எழுதுவது செய்தாலோ அவ்வாறே முத்திரைக் குத்துகிறார்கள். இதனால், பல இந்துக்கள், நமக்கேன் இந்த வம்பு என்று சும்மா இருந்துவிடுகிறார்கள்; சில அதிகபிரங்கி இந்துக்கள் மற்றவர்களின் நல்லபெயர் வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்து-விரோத கருத்துகளை, விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள், இரண்டுமே இந்துமதத்திற்கு சாதகமானவை அல்ல என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். லீலா சாம்ஸன் விவகாரத்தில் இது அதிகமாகவே வெளிப்பட்டுள்ளன.

லீலா சாம்ஸன் யார்? ஏனிந்த சச்சை? லீலா சாம்ஸன் பெஞ்சமின் அப்ரஹாம் சாம்ஸன் என்ற யூதமத ராணுவ அதிகாரிக்கும், லைலா என்ற இந்திய கத்தோலிக்கப் பெண்மணிக்கும் 1951ல் பிறந்தார். பேட்டிகளில் தனது தந்தையார் இரண்டாயிரம் வருடங்களுக்கு இந்தியாவிற்கு வந்த பெனி-இஸ்ரவேலர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தர் என்று கூறி பெருமைப் பட்டுக்கொள்கிறார் (My father was part of the Bene-Israelites who came to India two millennia ago[4]). என்னுடைய பெயர் யூதமதத்தினுடையதாக இருக்கிறது, ஆனால் பழக்க-வழக்கங்களில் நானொரு கத்தோலிக்கப் பெண்மணி, இருப்பினும் நடைமுறையில் இந்து என்றும் சொல்லிக் கொள்கிறார் (“I’m Jewish by name. I’m Catholic by habit. I’m Hindu by practice.”). பி.ஏ பட்டம் பெற்று ருக்மணி அருந்தேல் கீழ் பரத நாட்டியம் கற்றார்[5].  ஹில்லரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தபோது, இவரை சந்தித்துள்ளார். மேற்கத்தையபாணியில் அவரது வருகையை இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது[6].

அதில் பரதநாட்டியம் ஏதோ கேவலமானது என்றும், அதனை உய்க்கவந்தவர்களே இந்த லீலா தாம்ஸன் போன்றவர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. பரதநாட்டியம் கீழ்த்தரமானது மற்றும் ஆபாசமானது என்றிருந்தபோதுதான், ருக்மணி இதனை குருகுல சம்பிரதாயத்தில் பிரமலமாக்கி, சமூகத்தில் ஏற்புடையதாக்கினார். அதுமட்டுமல்லாது, அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்து கொண்டு, சம்பிரதாயத்தை உடைத்தெரிந்தார். Interestingly, decades ago, Chennai’s orthodox community shunned this institution that is praised today as an upholder of Tamil art and culture—and where visiting dignitaries are taken to showcase the best of the arts. Its founder Rukmini Devi Arundale faced immense social pressure in the 1930s when she learnt Bharatanatyam, which was considered a lowly and vulgar art form by the upper classes. Despite the opposition, she learnt dance from Devadasi women or temple dancers and set up the Kalakshetra Foundation in 1936, which embraced the gurukul system that allowed students to stay on campus and learn the art form. Arundale, who also broke convention by marrying a Britisher, George Arundale, finally did succeed in making Bharatanatyam socially acceptable.

Rani David laid down facts and demonstrated that Christianity existed along with Bharatanatyam and Sanga Thamizh, but history lost in time has given Christianity a western outlook[7].

அவர் செய்த மாற்றங்கள் என்று விவாதிக்கப்பட்டவை[8]:

  1. கணேசன் / விநாயகரின் விக்கிரகத்தை அகற்றினார்[9].
  2. அதனை மாணவர்கள் வழிபடுவதை தடுத்தார்.
  3. தியோசோபிகல் தத்துவத்தின்படி விக்கிரகங்கள் வழிபடுவதில்லை என்று தனது காரியத்திற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
  4. கீதகோவிந்தம் என்ற நடத்தில், மாணவர்களுக்கு கொச்சையான சைகைகளை “முத்திரைகள்” என்ற போர்வையில் கற்றுக் கொடுக்கப் படுகின்றன[10].
  5. அவர் ஒரு கிருத்துவர் என்பதனால், இவ்வாறு செய்கிறார்[11].
Kalakshetra never had idols that were worshipped. A lamp was all that was lit in every place we worshipped, according to Theosophical principles and the highest philosophical principles upheld by our elders. However, one of the wardens, now retired, collected on her own and without the instruction from the management, and much after Athai and Sankara Menon’s time, 4 Ganeshas and had them placed outside the dining hall on a pathway, through which all stores and workers pass. It was a place without sanctity. Students were forced to contribute towards pujas and vastrams for the images. All this had to be stopped. It would not have been encouraged nor allowed in Athai’s time. We decided instead, to put each of the Ganeshas, one in each of the hostel blocks, on a pedestal where the students would look after the images.
In 2005, Samson was appointed as the new director of Kalakshetra. In 2006, she provoked a media storm by justifying the elimination of the spiritual roots of Bharata Natyam. Trouble started in 2006 when Sri Sri Ravi Shankar, the head of “Art of living” meditation, expressed his concern over the attempt of Leela Sampson to thwart the participation of Kalakshetra students in the inaugural function of a “Health and Bliss” religious course being conducted by him in Chennai. According to Ananda Vikatan, a popular Tamil weekly, the most disturbing aspect was the reason cited by Leela Samson. She explained: “This function is concerned with Hindu religion. So Kalakshetra students need not participate in it[12]. 2006ல் ஆரோக்கியமும், அந்தோஷமும் என்ற நிகழ்ச்சி “ஆர்ட் ஆப் லிவிங்” என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்தது. செக்யூலரிஸ போர்வையில் லீலா சாம்ஸன் கலாச்சேத்திர மாணவர்கள் ரவிசங்கர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டாம், ஏனென்றால் அது ஒரு இந்துமத நிகழ்ச்சி என்று விளக்கம் அளித்து தடுத்தது, சர்ச்சையை பெரிதாக்கியது[13].

அதோடல்லாமல், சிலரின் போக்குவரத்தும் அதிகமாகியது. அதாவது கிருத்துவர்கள் வந்து செல்ல ஆரம்பித்தனர். இங்கு பல கிருத்துவர்கள், குறிப்பாக வெளிநாட்டவர் பயின்று வந்தாலும், வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால், சர்ச்சை எழுந்த பின்னர், அவர்கள் போக்குவரத்து வேறுவிதமாகவே பாவிக்கப்பட்டது. இதையறிந்த கலாசேத்திராவின் பாரம்பரிய உறுப்பினர்கள், அக்கரையாளர்கள் வருத்தம் அடைந்தனர். பற்பல நிலைகளில் இதைப் பற்றி சர்ச்சைகளும் ஏற்பட்டு விவாதிக்கப் பட்டன[14]. இவையெல்லாம் “பிரக்ருதி பவுண்டேஷன்” என்ற இணைத்தளத்தில் விவாதிக்கப் பட்டுள்ளன. அங்கு லீலா தாம்ஸனை ஆதரித்து கருத்துகள் இருந்தாலும், அதிலிருந்து பிரச்சினை என்ன என்று அறியமுடிகின்றது. இந்நிலையில் தான் அவர் பதவி விலகினார் என்ற செய்தி வருகிறது.

ராஜினாமா பற்றி முரண்பட்ட செய்திகள்: லீலா தாம்ஸன் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக முதலில் செய்தி வந்தது. அவருடைய வயது குறித்து விவாதம் வந்ததால் ராஜினாமா செய்ததாக செய்தி. கலாசேத்திரத்தின் தலைவர் கோபால கிருஷ்ண காந்தி, லீலா தாம்ஸனின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், அது அவர் உள்மனதில் இருந்த வந்துள்ள வெளிப்பாடாக தான் எடுத்துக் கொள்வதாகவும், மக்களின் பலதரப்பட்ட விமர்சனங்களின் விளக்கங்களுக்குட்பட்டாத எடுத்துக் கொள்ளவில்லை என்றும், மேலும் கலாச்சார அமைச்சகம் அத்தகைய நியமனங்களை செய்வதால், ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றிய முடிவு அங்குதான் உள்ளது என்றும் கூறியுள்ளார்[15]. இருப்பினும் “தி ஹிந்து” இதனை கீழே போட்டு, மேலே அவர் தொடர்வதற்கு அனைவரும் ஆதரவாக உள்ளதாக – “Kalakshetra board members want Leela to continue” செய்தி வெளியிட்டுள்ளது[16].

கிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பது: சென்ற ஜூன் 2011ல் சி.எஸ். தாமஸ் என்ற கலாச்சேத்திரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர், 60 வயதைத் தாண்டியும், லீலா சாம்ஸன் பதவியில் இருப்பதைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்குதல் செய்தார்[17]. இப்படி கிருத்துவரே கிருத்துவரின் மீது வழக்குத் தொடுப்பதை செக்யூலரிஸமாக எடூத்துக் கொள்ளவேண்டாம். இது ராபர்டோ நொபிலி காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் யுக்திதான். ஆமாம், அப்பொழுது கிருத்துவர் தான் நொபிலி கிருத்துவத்தை சீர்குலைக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனக்க்குள்ளாக்கபட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஆச்சார்ய பால் என்பவர் மீது ஆர்ச் பிஷப் அருளப்பா வழக்கு தொடர்ந்தார். இப்பொழுது தாமஸ், லீலா தாம்ஸன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பதவி இல்லையென்றாலும், நாட்டியம் உள்ளது: இப்படி கூறி ராஜினாமா செய்துள்ளார். அப்படியென்றால், ஏன் நாட்டியத்தை விட்டு பதவிக்கு வந்தார் என்ற கேள்வி எழுகின்றது. பதவி மீது ஆசையா, இல்லை இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பாக்கியுள்ளனவா என்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, சர்ச்சைகள் வெளிப்படையாக வந்துவிட்டப் பிறகு, முன்னரே ராஜினாமா செய்து சென்ரிருக்க வேண்டும். அவ்வாறு செல்லாததால்தான், இப்பொழுது கிருத்துவர்களுக்கேயுரித்த வகையில் நீதிமன்றம், வழக்கு என்றெல்லாம் சென்றுள்ளது. உண்மையில் கலைச்சேவைதான் மகேசன் சேவை என்றால், பாரம்பரியப்படி ஆசிரமம் அமைத்து, ஏழை-எளிய மாணவி-மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம். இசைக்கல்லூரியின் தலைவராகி சேவை செய்யலாம். ஆனால், அனைத்தையும் விடுத்து, கலாச்சேத்திராவை பிடித்தது தான் விவகாரமாகியுள்ளது.

அமைச்சகம் இது பற்றி கருத்து கேட்டதற்கு, 60 வயது ஆகியிருந்தால், அவர் ஓய்வு பெற்றிருக்கவேண்டும், இருப்பினும் 28-02-2005 அன்று அவரது நியமன ஆணையில் மற்றும் கலாச்சேத்திரா சட்டத்தின் பிரிவுகளில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்று அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்[18]. In response, the undersecretary to the government of India had informed him that ” Leela Samson, director, Kalakshetra Foundation should have retired at the age of 60 years even though the age of retirement is not mentioned in the Kalakshetra Foundation Act[19], or in the recruitment rules for the post of director nor in the order of appointment (notification) dated February 28, 2005″.

இப்பிரச்சினை கமிட்டி கூட்டத்தில் ஏப்ரல் 12, 2012 விவாதத்திற்கு அன்று வந்ததால், இப்பொழுது ஊடகங்களில் வர ஆரம்பித்துள்ளன.

வேதபிரகாஷ்

02-05-2012


[5] She is the daughter of Vice-Admiral (Ret) Benjamin Abraham Samson, from the Jewish Bene-Israelite community of India, and Laila, a Roman Catholic Indian. After doing her B.A., she learnt Bharatanatyam at the Kalakshetra under the founder Rukmini Devi Arundale.

http://www.rediff.com/news/2003/sep/11spec.htm

[12] ஆனந்த விகடன், வார இதழ், டிசம்பர் 20, 2006.

[15] Chairman of the Kalakshetra board Gopalkrishna Gandhi said: “Leela Samson’s decision to leave her position as director of Kalakshetra was taken in the autonomy of her moral intelligence. Relinquishings such as hers should be taken in the light and echo of her inner voice, not in the script of other people’s vocabularies. We must respect her decision and that of the Ministry of Culture. The Ministry appoints the director, and the Ministry alone can decide on her resignation.”

http://www.thehindu.com/arts/dance/article3367813.ece

[16] The Hindu, Kalakshetra board members want Leela to continue, Chennai edition, April 29, 2012; http://www.thehindu.com/arts/dance/article3367813.ece

[17] In June 2011, C S Thomas, a retired teacher at Kalakshetra, had filed a writ petition in the Madras high court challenging the legality of Samson remaining director of the foundation after the age of 60, the statutory retirement age for Central government employees. After she resigned on April 12, Samson said the issue had come up in a board meeting on April 10 and she saw no reason to stay on in the post if she did not have the support of the ministry, the chairman and the board.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Samson-had-Centres-backing-to-continue/articleshow/12945323.cms

[18] According to the Kalakshetra Act, appointments to the post of director are governed by the Ministry of Tourism and Culture, Department of Culture, Kalakshetra Foundation, Chennai, (Director) Recruitment Rules, 2002. Although the rules specify 55 as the upper age limit for a person to assume the post of director, they do not mention a retirement age.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Samson-had-Centres-backing-to-continue/articleshow/12945323.cms