Archive for the ‘பிரான்சிஸ் சேவியர் குளூனி’ Category

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி, ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா ஆனது: ரகசியமாக வந்தது-சென்றது – பின்னணி என்ன?!

December 1, 2019

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி, ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா ஆனது: ரகசியமாக வந்தது-சென்றது – பின்னணி என்ன?!

Sarah Stephanie Landry - different garbs-with Nithyananda

முன்பு பிஷப்பிடம் வேலை பார்த்து புகார் கூறியது, இப்பொழுது, குருவீடம் சிஷையாக இருந்து புகார் கூறியது: இன்றைய நிலையிலும் வெளிநாட்டு காரன், வெள்ளக் காரன் சொன்னதான் ஒப்புக் கொள்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், காசுக்காக இந்தியாவிற்கு வந்து வேலை செய்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள் முட்டாள் இந்துக்கள்! சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். நகைகளை விற்கும் வியாபாரியாகவும் இருந்தார். இதற்காகவும் இணைதளம் வைத்திருக்கிறார். “ஆண் மற்றும் பெண் சக்திகளை சமன் படுத்துக! உள்ளிருக்கும் ஆண் கடவுள் மற்றும் பெண் கடவுளர்களை எழுப்புக! சந்திரக் கல் மற்றும் சூரிய கல் வேண்டுமா, வாருங்கள், என்னிடம் வாங்கிக் கொள்ளுங்கள்!,” என்ற்லாம் விளம்பரம், வீடியோக்கள். சிவசக்தி படத்தை வைத்து, அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை சின்னமாக்கி, வியாபாரத்திற்கு உபயோகப் படுத்திய சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, என்கின்ற நித்திய சுதேவி! “யார் தருவார் இந்த அரியாசனம், நித்திய சுதேவிக்குக் கிடைத்த சிம்மாசனம்!” பாணியில் உட்கார்ந்து, படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் தான், “குருவுக்கு எதிரான குருவும் நான் தான்!,” போன்று செயல்பட்டு புகார் கொடுத்துள்ளார். இங்கு, நித்தியானந்தாவுடன், நேரிடையாக எந்த மோதலும் இல்லை, ஆனால், எதையோ எதிர்பார்த்து வந்து, அது கிடைக்காதலால், ஏமாந்து, அதன் மூலம் உண்டான வெறுப்பில் வீடியோ-புகார் செய்துள்ளார். ஆனால், அது குஜராத் தந்தையின் பூகாரோடு, நேரத்தில் ஒத்துப் போவது கேள்வியை எழுப்புகிறது.

Sarah Stephanie Landry - with catholic bishop Ralph

பிஷப் ரால்ப் நபிரேஸ்கிடம் ஏற்பட்ட மோதல்:  தானே தெய்வம் போன்று யதேச்சாதிகாரமாக செயல்பட்டு, கூட்டங்களை நடத்தினார். ஏசுயோகா பற்றி புத்தகத்தை வெளியிட்டார்[1]. பிஷப் ரால்ப் நபிரேஸ்கி எல்லா உதவிகளையும் பெற்று, அவரையே குற்றஞ்சாட்டியது வியப்பாக உள்ளது[2], “மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சொல்லிக் கொள்ளாமல் மறந்து விட்டாள்….சமூக வலைதளங்களிலும் எங்களை தடுத்து விட்டாள். …..ஒரு கடவுள் பற்றிய வீடியோக்களை எடுத்து விட்டாள். கிருத்துவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தாள். இப்பொழுது, இந்துக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளாள். இதனால், இந்துகிருத்துவர்களிடம் வெறுப்பு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது..” சாரா தான் எழுதிய புத்தகத்தில், இவரைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, கிண்டலாக எழுதியிருப்பது, இவர்க்கு கோபத்தை மூட்டியுள்ளது. இருப்பினும், கிருத்துவர்களான,இவர்களிடையே, ஏதோ போட்டி, பொறாமை, சிக்கல், தகராறு இருப்பது தெரிகிறது.

Sarah Stephanie Landry - different garbs

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, உள்கலாச்சார மயமாக்கல் திட்டத்துடன் செயல் படுகிறார்: வாடிகன் கவுன்ஸில்-II கூட்டத்திற்கு பிறகு உள் கலாச்சார மயமாக்கல் மற்றும் மற்ற மதங்களுடன் உரையாடல் என்ற திட்டங்களுடன், கத்தோலிக்க சர்ச் இந்தியாவில் ஆசிரமங்கள் உருவாக்கி, கத்தோலிக்க பாஸ்டர், பிஷப் போன்றவர்கள் இந்து சன்னியாசிகள் போலவே காவி உடை அணிந்து, இந்துமத சின்னங்களைத் தரித்துக் கொண்டு, உலா வந்து, எளிமையான அப்பாவி இந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதைப் பற்றிய விவரங்கள் சிலர் எடுத்துக்காட்டி வந்தாலும் பரவலாக இப்பிரச்சனை பேசப்படுவது இல்லை. அவர்கள் இந்துக்கள் போலவே இருந்து கொண்டு இந்து கடவுள்களையும் வணங்கிக்கொண்டு வேடதாரிகள், போலி சாமியார்கள். இவர்கள் பலவித குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். செக்ஸ், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் மற்ற உண்மையான இந்து சாமியார்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் ஊடகங்களில், பொதுவாக சாமியார் குற்றத்தில் ஈடுபட்டார், சிறுமிகளை கற்பழித்த பாலியல் குற்றத்தில் மாற்றிக் கொண்டார் என்று தான் வருகினனவே தவிர, அக்குற்றம் சேர்ந்த சாமியார் கிருத்துவர் என்று சொல்வதே இல்லை. இங்கும் இப்பெண், “கிருத்து தான் கடவுள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறாள். பட்டுப் புடவை அணிந்து, நெற்றியில் பெரிதாக குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு, வேடம் போட்டுத் தான் வந்திருக்கிறார்!

Francis clooney and Sarah Stephanie Landry

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, பிரான்சிஸ் சேவியர் குளூனி ஒப்பீடு செய்ய முடியுமா?: மந்திர-தந்திர-யந்திர வித்தைகள் கற்றுக் கொண்டு ஏமாற்றலாம் என்று இப்பெண் வந்தாளா, தமிழகத்தை குளூனி தேர்ந்தெடுத்தது போன்று தேர்ந்தெடுத்தாளா என்ற கேள்வி எழுகிறது. நித்தியானந்தா ஆசிரமங்களுக்குச் செல்வது, விவரங்களை சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, முதலியவை செய்திருப்பது, அவரது வீடியோக்களிலிருந்து அறியலாம். திருவனந்தபுரம் “ரகசியப் பணிக்காக” சென்றது அதற்காக இருக்கும். பார்வதி போல, திரிசூலத்துடன் போஸ் கொடுத்து, புகைப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்தியர்களான எமக்கு, ஏதோ புராண படத்தில் நடிப்பது போன்று இத்தகைய முறையில் போஸ் கொடுக்க என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை. பிறகு நான் வாடிகனால் அனுப்பப் பட்ட ஒற்றனா இல்லையா என்று ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இறையியல் ரீதியில், கிருத்துவ பெண்ணாக, பிஷப் ரால்புடன் பிரச்சினை என்றால், அதை அங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும், தமிழகத்திற்கு ஏன் கொண்டு வரவேண்டும்? “உள்கலாச்சாரமயமாக்கல்” என்ற போர்வையில் கிருத்துவர்கள் இத்தகைய வேலைகளை செய்ய உட்புகுவது சாதாரணமான விசயமாக உள்ளது[3]. குளுனிக்கும், இப்பெணுக்கும் செயல்பாட்டில் ஒற்றுமை உள்ளது. இந்துபோல வேடமிட்டு நடந்து கொண்டு, பிறகு இந்து மதம், மடாதிபதி, நம்பிக்கைகளை உள்நோக்கத்துடன் குறைகூறுவது அல்லது தமது ஏசு-மேரி இவர்களை வீட கீழானவர் போன்று விளக்கம் அளிப்பது, முதலியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய ஒப்பீட்டு இறையியல் விளக்கத்தினால் தான், குளூனிக்கும், சில சென்னை இந்துக்களுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அவர், மெத்தப் படித்தவர் என்பதால், அந்த அளவில் போனது. ஆனால், இப்பிரச்சினை, இவர்களது நிலைக்கு வந்துள்ளாதால், அதுபோன்ற நிலையில் உழல்கிறது.

Francis clooney become Hindu scholar

இந்து மதம் தாக்கப் படுவது கண்டிக்கப் பட வேண்டியுள்ளது: இந்து மதத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பல வெளிநாட்டவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவும் அவர்கள், இந்துக்கள் போலவே நடிப்பது, உடை அணிவது, இந்து மதத்தைப் பற்றிப் பேசுவது, இந்துக்களுடன் நட்பு வைத்திருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்[4]. உண்மையில் அதன் மூலம் அவர்களிடமிருந்து, குறிப்பாக விஷயங்கள் தெரிந்தவர்களிடம் இருந்து நுணுக்கமான தகவல்களை பெற்று, அவற்றை தனது வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்[5]. யோகா, ஆயுர்வேதம் முதலியவை அனைத்துலக ரீதியில் வியாபாரமாக வருவதால் அதற்கு இத்தகைய போலி வேடதாரிகள், இந்துத்துவம் போன்ற கொள்கைகள் உதவியாக இருக்கின்றன[6]. பிரச்சினைகள் வரும்பொழுது, குற்றங்களில் மாட்டிக் கொள்வது, சட்டமீறல்கள் என்று வரும்போது, அவர்கள், இந்துமதம் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். தொடர்ந்து அவ்வாறு இந்துமதம் தாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகளும் துணை போவதை கண்டு கொள்ளலாம். இது இவர்கள் எல்லோருக்குமே மறைமுகமாக உறவுகள் இருப்பது தெரிய வருகிறது. இதனால் தான் இத்தகைய செயல்களை இந்துக்கள் எதிர்க்க வேண்டி உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்களது பிரச்சினைகள், குற்றங்கள் முதலியவற்றை தமதாகக் கொண்டு செயல்படாமல், இந்துமதம் தான் காரணம் என்று பொய்சொல்வது, பிரசாரம் செய்வது, கண்டிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

30-11-2019

Sarah video about - her planting by Vatican

[1] https://jesusyoga.files.wordpress.com/2013/07/christ-consciousness.pdf

[2] And then after almost 3 years she just left. Secretly….. with lies, hiding……No word of explanation. After everybody gave everything to her and provided all she did need for almost 3 years… she just left. She blocked us on all her social media and started to spread lies like she never was involved with One In God and that she never promoted unity between hinduism and christianity. She deleted many homepages, posts and maybe 40 Youtube videos where she promoted One In God and unity. And then she started to preach hate against christians. And now she is attacking hindus too. With her lies Sarah Landry is damaging the relations between christians and hindus and is causing hate! https://oig-movement.weebly.com/

[3] We, Indians, really do not understand, who has right to pose like this, she is acting in some Puranic film! Why then, give statement whether she has been planted by Vatican or not! If she had theological or other problems with Bishop Ralph, instead of settling with him, why repeat the same modus operandi here in Tamilnadu?

[4]  கத்தோலிக்கர் மட்டுமல்லாது மற்ற கத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகளில் இந்த போலி நடவடிக்கைகளில் இறங்கி ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர்.

[5] இதில் குளூனி போன்றவர்கள் அடங்குவர். ஞானம், பண்டிதத் தனம், திறமை என்று எல்லாம் இருந்தும், குறிக்கோள் மதமாற்றத்தையும்தாண்டி, கடவுளையே மாற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது எடுத்துக் காட்டப் படுகிறது.

[6] ஸ்டீஃப் பார்மர் போன்ற அமெரிக்க “இந்துத்துவ வாதிகளே” செய்து வருகின்றனர். ஒரு பக்கம் இந்து மதத்தை தூஷிப்பது, இன்னொரு பக்கம் யோகா சொல்லிக் கொடுப்பது போன்ற இரட்டை வேடங்க்களை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)  

May 12, 2018

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)

Clooney, invited Vasudhat at Harvard

குளூனிவின் வைஷ்ணவ ஆராய்ச்சிற்கு உதவியவர்: இவருக்கு உதவி செய்துள்ள சமஸ்கிருத, வைஷ்ணவ மற்றும் இதர பண்டிதர்கள்: குளூனி தனது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் கீழ்கண்டவர்கள் தமக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  1. ஶ்ரீ ராமமூர்த்தி சாஸ்திரி, முந்தைய சமஸ்கிருத கல்லூரி முதல்வர், மைலாப்பூர்.
  2. ஶ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார்.
  3. ஶ்ரீ எம்.ஏ. வேங்கிடகிருஷ்ணன், வைஷ்ணவ ஆராய்ச்சித் துறை, சென்னை பல்கலைக்கழகம்.
  4. ஶ்ரீமதி பூமா. வேங்கிடகிருஷ்ணன்
  5. ஶ்ரீ. அனந்தகிருஷ்ணன்,
  6. ஶ்ரீ மோஹனரங்கன்.

இதைத்தவிர திருமலையில் உதவிய புரபசர், திருச்செந்தூருக்கு செல்ல உதவியவர், சென்னையில் கச்சேரி, நாடகம், சினிமா முதலியவற்றிற்கு அழைத்துச் சென்ற / உதவிய / கூட வந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அமெரிக்காவில் பரஸ்பரமாக, இந்து மற்றும் இந்தியமூலங்கள் கொண்ட புரபசர்கள், பிரபலமானவர்கள் மற்ற முக்க்கியஸ்தர்கள் உதவி வருகிறார்கள். உதாரணமாக, வசுதா நாராயணன் என்பவர், குளுனிக்கு உதவியிருக்கிறார். அதனால் தான் அவர்களது மைலாபூர் உறவினர்கள் அவருக்கு உதவியுள்ளது தெரிகிறது. இங்கு குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் எல்லோருமே பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆனால், “உள்-கலாச்சாரமயமாக்கல்” மற்றும் “உரையாடல்” என்று வரும் போது, முடிவுகள், இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் தான், கவனிக்க வேண்டியிருக்கிறது.  மேலும், குளூனி பதிவு செய்தது போல, இவர்கள் பதிவு செய்யாதது, திகைப்பாக இருக்கிறது.

M.A. Venkatakrishna and Smt Bhooma Venkatakrishnan

தமிழகத்தைச் சுற்றி வந்து நுணுக்கங்களை அறிந்த குளூனி: வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்ற முகாந்திரத்தில் உலா வந்து மைலாப்பூர் பக்கம் சுற்றி வந்தார். திருவாழ்மொழி படிக்கிறேன் என்று விளம்பரம் செய்து கொண்டார். இவரை ஆதரிக்கிறேன் மற்றும் எதிர்க்கிறேன் என்ற ரீதியில் சிலர் வேலை செய்த போது, அவர் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசயங்களை சேகரித்துக் கொண்டு சென்றார். சென்னை, ஶ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு வந்தால், அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு உபசாரம் செய்தவர்களில் பலர் உள்ளனர். பிரான்சிஸ் சேவியர் குளூனியை பல மடாலயங்கள், கோவில்களுக்குள் அழைத்து சென்றுள்ளனர், ஆனால், குளுனி புத்தகங்களை எழுதியது இந்துமதத்தை எதிர்த்து தான். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

Vasudha speaks in India

  1. ஶ்ரீவைஷ்ணவ “சில்லறை விசயங்கள்” எல்லாம், குளுனிக்கு புரிந்து புத்தகங்கள் எழுதும் அளவுக்கு, நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தது யார்?
  2. “மதங்கங்களுக்குள் உரையாடல்” போர்வையில், ஶ்ரீவேதாந்த தேசிகரையும், கத்தோலிக்க சேவியரையும் ஒப்பிட்டு ஏழுதியபோது, பாராட்டுத் தெரிவித்தது ஏன்?
  3. மேரியை, ஶ்ரீ மற்றும் லக்ஷ்மியுடன் ஒப்பிட்டு, “தெய்வீக மாதா, ஆசிர்வதிக்கப் பட்ட மாதா” என்று குளூனி புத்தகம் எழுதியது எவ்வாறு?
  4. “ஹார்வார்ட் தமிழ் நாற்காலி” என்றால் குதிக்கும் இந்துத்துவவாதிகள், இத்தகைய ஹார்வார்ட் புரவசர்களை ஆதரிப்பது ஏன்?
  5. புரவசர் வசுதா நாராயணன் இங்கே வந்தால், கதா-காலக்ஷேபம் செய்கிறார், அங்கோ, குளுனிக்கு “பேச” ஏற்பாடு செய்கிறார்!
  6. ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி என்பவர், ஶ்ரீரங்கத்தில் நடப்பதையெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார், கோர்ட்டுக்கு போகிறார்!
  7. “மதங்கங்களுக்குள் உரையடல்” இந்துத்துவவாதிகள் என்றாவது நடத்தியுள்ளனரா? பிறகு, ஒருவழியாக அவர்களை அனுமதிப்பது / புலம்புவது ஏன்?

Fr Clooney SJ - Vidyajoti- lecture -2011

2011லேயும் குளூனி சென்னை கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்றிருக்கிறார்[1]: சத்யஜோதி என்ற கிருத்துவ கல்லூரியில், ஜூலை 27, 2011 அன்று பைபிள் மற்றும் திருவாய்மொழி ஒப்பிட்டு சொற்பொழிவாற்றினார்[2]. “சத்யஜோதி” இரு ஜெசுவைட் கல்லூரி, அதனால் அங்கு வரவேற்க்கப்பட்டது, பேசியது எல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மற்ற மதங்களுடைய நூல்கள் எப்படி பைபிள் படிக்க உதவும் என்று அவர் எடுத்துக் காட்டியதிலும் வியப்பில்லை. ஆகஸ்ட் 2, 2011 அன்று எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியிலும், கிறிஸ்துவ-இந்து மதங்களை ஒப்பிட்டு பேசினார்[3]. இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கெனவே, குளூனியின் புத்தங்கள் வெளிவந்த பிறகு, அவற்றின் சர்ச்சை ஏற்பட்ட பிறகு, அவர் எப்படி அங்கு வரவேற்க்கப் பட்டு பேசினார் என்பது வினோதம் தான். ஆகஸ்ட் 5, 2011 அன்று, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தத்துவ துறை சார்பாக சார்பில் நடந்த கருத்தரங்கத்திலும், மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து பேசினார்[4]. அதாவது, 1992-93 விஜயங்களின் போது, சென்னையில் இவரைத் தட்டிக் கேட்டதாலும், நேரில் வந்து கேள்விகள் கேட்டதாலும், இவையெல்லாம் விளம்பரம் இல்லாமல் நடத்தப் பட்டதாகத் தெரிகிறது அல்லது அந்த அளவிற்கு மற்றவகளுக்குத் தெரியும் வகையில் அறிவிக்கப்படவில்லை. மேலும் 2011ல் உடனடியாக, இதைப் பற்றி பதிவு செய்தேன். ஆதாரமாக, இணைதள லிங்குகள் முதலியவற்றைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது, அவையெல்லாம் மறைந்து விட்டன. “இந்து பிசினஸ் லைன்” மட்டும் இன்றளவில் உள்ளது. ஆகவே, இவ்விவகாரங்களை மறைப்பதிலும் ஈடுப்பட்டுள்ளது தெரிகிறது.

Clooney- gave Radhakrishna lecture -2011

இந்துக்கள், கிறிஸ்தவர் போல உரையாடல்களில் ஈடுபடுவதில்லை: இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள் யாரும் கிருத்துவர்களுடன் உரையாடல் நடத்தி, இந்துமதம் தான் தொன்மையானது, அதிலிருந்து தான் தத்துவம் முதலியவற்றை மற்ற மதங்கள் எடுத்தாண்டன என்றெல்லாம் எடுத்துக் காட்டுவதில்லை. ஜைனம் மற்றும் பௌத்தம், 2500 ஆண்டுகளுக்கு முன்னமே அத்தகைய உரையாடலில் ஈடுபட்டதும், இந்து மதத்தின் தொன்மையினைக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவம், இவ்விசயத்தில் எந்த தொன்மையினையும் காட்ட முடியாது. காலக்கணகியலே, அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி விடுகிறது. அயல்நாடுகளுக்கு சென்றவர்கள், செல்கிறவர்கள், அந்தந்த நாடுகளின், நிறுவனங்களின், இயக்கங்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆராய்ச்சி செய்து, பட்டங்களைப் பெற்று, வசதியாக இருந்து விடுகின்றனரே தவிர, சிலர் தான், பிரச்சினையை உணர்ந்து எதிர்க்கிறார்கள்[5].  இந்தியாவிற்கு வரும் போது அல்லது இணைதளங்களில், ஏதோ, இந்துக்களுக்கு போராடுவது, ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அங்கு, பணியிடங்களில் “சலாம்” போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் பதவி போய்விடும், கீழே தள்ளப்படுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

NOP Vaishnava college, Clooney- resource person

இந்தியாவில் இருப்பவர்களுக்குஉரையாடல்நுணுக்கங்கள் தெரியாது, ஆவணப்படுத்துவதில்லை: இந்து கோணத்தில் “உரையாடல்” என்றால் என்ன, கிருத்துவம் அல்லது முகமதிய மதங்களுடன் “உரையாட” வேண்டிய அவசியம் என்ன, அவ்வாறு நிலை வந்தால், என்ன பேசுவது, விவாதிப்பது, நிலைநாட்டுவது, முடிவுக்கு வருவது மற்றும் இறுதியாக ஆவணப்படுத்துவது போன்ற விசயங்களை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு கிருத்துவன் அல்லது முகமதியன் கூட பேசினால், “உரையாடல்” ஆகாது. மேலும், ஆங்கிலத்தில் “என்கவுன்டர்” என்ற பிரயோகம் [encounter, எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நில்] செய்வது எதிர்மறையாக இருக்கிறது. ஆனால், “வாய்ஸ் ஆப் இந்தியா” போன்ற “இந்து-சார்பு” பதிப்பங்களே அத்தகைய பிரயோகங்களை செய்து வருகின்றது[6]. இந்தியாவில் இருப்பவர்களோ, ஏதோ கிருத்துவர்களுடன் பேசினாலே “உரையாடல்” ஏற்பட்டு விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால், ஆவணப்படுத்துவதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில்லை. எம்.டி. ஶ்ரீனிவாஸ் என்பவர், “சத்திய நிலையத்துடன்” நெருக்கமான தொடர்பு வைத்திருந்தாலும், தனது கட்டுரை பதிப்பாயிற்று என்ற நிலையில் அமைதியாக இருந்தார். அங்கு தங்கியிருந்த குளூனியிடம் என்ன பேசினார் என்று ஆவணப்படுத்தவில்லை. அதேபோல, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிக் கொண்டாலும் ஆவணப்படுத்தவதில்லை.

© வேதபிரகாஷ்

11-05-2018

Jesus trail in India, The Hindu 20-11-2007

[1] கீழ்கண்ட லிங்குகள் வேலை செய்யவில்லை / காணாமல் போய்விட்டது என்பதால், என்னுடைய பிளாக்கின் லிங்கைக் கொடுக்கிறேன்: https://vaticanculturation.wordpress.com/2011/08/12/95-the-christian-vaishnavite-dialogue-continues-clooneys-2011-visit-to-chennai/

[2] Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ  This was the topic of the special lecture given by Prof. Francis Xavier Clooney SJ at Vidyajyoti on July 27, 2011. He spoke of the importance of reading the texts of other religions while doing Christian theology.  Dr. Clooney illustrated his ideas by bringing together select texts from Song of Songs of the Bible and Tiruvaymoli of the Tamil bhakti tradition. The scholarly lecture was very enlightening and led to a lively discussion moderated by Fr. George Gispert-Sauch SJ, an eminent Indologist and emeritus Professor at Vidyajyoti.

http://www.americamagazine.org/blog/blog.cfm?blog_id=2&category_id=4A03E29A-3048-741E-7E0C76FB5CD0D40D

Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ By Vidyajyoti College of Theology, August 3, 2011;  http://vidyajyoti.in/?p=1275

[3] Addressing a seminar on Dynamics of Religious Trajectories: Continuities and Changes, Traditions and Improvisations at the M O P Vaishnav College here, Clooney said traditions were not the things of the past, they could cha-nge the world. He said religion was not static and it kept changing as the modern world. “God is like a lover and tends to change. We can’t restrict him saying he belongs to me,” he said.

‘God Is like a lover, can’t restrict him’,  Express News Service, Last Updated : 03 Aug 2011 09:23:22 AM IST, http://expressbuzz.com/cities/chennai/god-is-like-a-lover-can%E2%80%99t-restrict-him/300447.html.

[4] Department of Philosophy organized Dr. Sarvepalli Radhakrishnan Endowment Lectures on 5th August 2011. Prof. Francis X. Clooney, Parkman Professor of Divinity and Director of the Center for the Study of World Religions, Harvard University, USA delivered two lectures on theme “Comparative Theology as 21st Century Christian Theology” and “The Drama of a God Who Comes and Goes: Reading the Biblical Song of Songs with the Srivaishnava Thiruvaymoli“. The Principal, Dr. R.W. Alexander Jesudasan presided over the function and the Bursar, Mr. C. Sundaraj and student and faculty of various departments were present on the occasion.

http://www.mcc.edu.in/index.php?option=com_k2&view=item&id=135:dr-sarvepalli-radhakrishnan-endowment-lectures&Itemid=530

[5] கியானால்ட் எல்ஸ்ட், வாமதேவ சாஸ்திரி, மைக்கேல் டேனினோ, ராஜிவ் மல்ஹோத்ரா, நரஹரி ஆச்சார், கோஸ்லா வேபா, போன்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்க / ஐரோப்பிய குடிமகன்கள் என்ற முறையில், இவர்களுக்கும், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

[6] Hindu-Christian Encounters, Voice of India, New Delhi.

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் – பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

May 12, 2018

ஶ்ரீரங்கத்தில் கிருத்துவர்கள், கோவில்களில் கன்னியாஸ்திரிகள், நடப்பது என்ன? “உள்கலாச்சார மயமாக்கல்” அறியாத முட்டாள் இந்துக்கள் பிரான்சிஸ் குளூனி விவகாரம் மறந்த மூடர்கள் (1)

Clooney, Hindu-christian dialogue-with Hindu Swami

கிருத்துவர்களின் போலித்தனம்உள்கலாச்சாரமயமாக்கலும், இந்தியஇந்து எதிர்ப்பும்: உள்கலாச்சாரமயமாக்கல் (inculturation) என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்துக்களைப் போலவே நடந்து கொண்டு அல்லது வேடமிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறு வாழ்ந்து, சரியான சமயம் வரும்போது, எல்லோரும் “கிருத்துவர்கள்” என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால், இதுவரை, எந்த இந்துவும் கிருத்துவன் அல்லது முகமதியன் போல வேடமிட்டு, நடந்து கொண்டு, அம்மத நுணுக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களைப் போல ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியாதாகத் தெரியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல இந்து குடும்பங்களில் கிருத்துவ மாப்பிள்ளை மற்றும் மறுமகள், தாய் அல்லது தந்தை, மாமியார் அல்லது மாமனார் இருப்பது சகஜமாகி விட்டது. ஆனால், அவர்கள் அதை இந்தியாவில் தங்களது உறவினர்களிடம் கூட சொல்வதில்லை. இப்பொழுது மூன்றாம்-நான்காம் தலைமுறைகள், இந்திய உறவுகளை, சொந்தங்களை, மூலங்களை மறந்து விட்டனர். அவர்களால், இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை. ஆகவே, அவர்களிடமிருந்து, இந்துக்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டுவிடலாம்.

Clooney, Hindu-christian dialogue-with Hindu ISKCON and Swaminarayan Swamis

இவ்விசயங்களில்இந்துஎதிர்ப்பில், கிருத்துவப் பிரிவுகள், டினாமினேஷன்கள் ஒத்துப் போவது: பரஸ்பரமான மதங்களுக்கிடையிலான உரையாடல் (inter-religious dialogue), மதநம்பிக்கைகளுக்கான உரையாடல் (Inter-faith dialogue) என்ற போர்வைகளில் வாடிகன் கவுன்சில் II) (Vatican Council – II) என்ற போர்வையிலும், படித்த, நாகரிகமான ஆனால் விஷயம் தெரியாத இந்துக்களைக் கிருத்துவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். சில குழுக்கள் இந்துமதத்திற்கு பாதகமாக யோகா, சுலோகங்கள் சொல்வது, பொங்கல், தீபாவளி கொண்டாடுவது முதலியவற்றை உபயோகித்து மோசடி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குழுக்கள் / சர்ச்சுகள் கத்தோகலிக்கக் கிருத்துவத்தைச் சேர்ந்தது. அதற்கு எதிரானது என்று சண்டையிட்டுக் கொல்லும் புரொடஸ்டென்ட் கிருத்துவம் (Protestant), இந்தியாவில் கத்தோலிக்கர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு அத்தகையச் மோசடி-ஏமாற்று-அயோக்கியத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய-இந்து எதிர்ப்பும் இங்குதான் ஒன்றாக வேலை செய்கின்றன.

Clooney, Bama Gopalan, Kumudam

ஒருதலைப் பட்சமான, போலி உரையாடல்கள்: “உரையாடல்” [dailogue], “மதங்கங்களுக்குள் உரையாடல்” [inter-religious dialogu], “மதங்களுக்குள் இடையே உரையாடல்” [inter-faith dialogue] என்ற ரீதியில் கிருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். அதை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். ஆனால், இந்துக்களுக்கு அது தெரியாது. படித்தவர்கள், “எல்லாம் மதங்களும் ஒன்று,” “எல்லா மதங்களும் ஒன்றைத் தான் போதிக்கின்றன,” “ஒளி பலவென்றாலும் வெளிச்சம் ஒன்று”, என்று ஏதோ மேலெழுந்தவாரியாக அல்லது முற்றும் துறந்த முனிவர் போல பேசும் ரகங்களைத் தான், இந்து சாமியார்களிடம், மடாதிபதிகளிடம், “துறவி” போன்ற வகையறாக்களில் காணப்படுகின்றன. இவர்களால் இக்காலநிலையில், இந்துக்களும், நன்மையை விட, எதிர்மறையான விளைவைத் தான் ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்திய மதநூல்களை எல்லாம் படித்து விட்டு, அதில் சொல்லப் பட்டிருக்கின்ற இந்து கடவுளர் எல்லாமே, கிருத்துவ மதத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டது, பெறப்பட்டது என்று முடிவாக விளக்கம் கொடுப்பது தான் அவர்களது திட்டம். மறைந்துள்ள ஏசு, உள்ளேயிருக்கும் கிறிஸ்து, ஞானகுரு என்றெல்லாம் சொல்வது அவர்களது வழக்கம். ஆனால், செக்யூலரிஸ, முட்டாள் மற்றும் படிக்காத இந்துக்கள் இதனை அறிந்டு கொள்வதில்லை.

Clooney, Vasudha Narayanan

கிருத்துவர்களின் கட்டுக்கதை மோசடிகள்: ஏசு, கிறிஸ்து அல்லது ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திர ரீதியில் இல்லை என்று மேனாட்டில், கடந்த 200 வருடங்களில் பெரிய-பெரிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டி விட்டனர். இதனால், கிருத்துவர்கள், கிருத்துவ மதத்திற்கு சரித்திர ஆதாரம், தொன்மை முதலியவை குறைவு மற்றும் இல்லை என்ற ரீதியில், மற்றவற்றின் சரித்திர ஆதாரங்கள், தொன்மை முதலியவற்றை தமது போல காட்டிக் கொள்ள, ஆவணங்களை திரித்து எழுதி, போலி ஆதாரங்களை உருவாக்கி, ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். இவையெல்லாம் இன்றும் தொடர்ந்து வருகின்றன. “அதையும்-இதையும் இணைத்து, இரண்டும் ஒன்று” என்ற ஏமாற்று சமன்பாட்டை வைத்து, ஏமாற்றி வரும் போது, நம்பி மோசம் போவது, இந்துக்கள் தாம். “தாமஸ்கட்டுக் கதை,” “இந்தியாவில் ஏசு” போன்ற கட்டுக்கதைகளின் பின்னணி இதுதான். இதெல்லாம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, மோசடி என்றெல்லாம் அடிக்கடி வெளிப்பட்டாலும், வெட்கமில்ல்லாமல் தொடர்ந்து செய்வது தான் அவர்களது கை வைந்த கலை. ஏனெனில், அத்தகைய விவரங்கள் ஒருசிலருக்கே தெரியும் மற்றவகளுக்குத் தெரியாது என்ற நிலையில், மோசடிகளை செய்து வருகின்றனர்.

Nuns inside Srirangam temple -08-05-2018

ஶ்ரீரங்கமும், கிருத்துவர்களும்: ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் கிருத்துவர் நுழைந்து விட்டார்கள் என்று புலம்புகின்றனர் “இந்துத்துவ வாதிகள்”, ஆனால் கிருத்துவர்களுக்கு உதவுவது இவர்களில் சிலர். 08-05-2018, செவ்வாய்கிழமை அன்று கன்னியாஸ்திரிக்கள் நுழைந்தது “குளூனி” விஜயம் போன்றதா என்று ஆராய வேண்டும்[1]ஏனெனில், குளூனி அங்கு வந்து சென்றபோது, யாரும், இந்த அளவுக்கு போட்டோ, போட்டு கேட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக வெளிநாட்டினர், மற்ற மதத்தினர் கோவிலில் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப் படுவது உண்டு[2]. அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இவர்கள் செயலாற்றுவதால் பலனில்லை. ஒரு ஶ்ரீரங்கத்து ஜீயருக்கும் அங்கிருக்கும் ஒரு கிருத்துவ செமினரி பாஸ்டருக்கும் நட்பு என்ற ரீதியில், ஜீயர் பாஸ்டருக்கு மாலை போட்டு கௌரவித்திருக்கிறார், இதை அந்த பாஸ்டரே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், எந்த சர்ச்சோ, செமினரியோ, கிருத்துவ மடாலயமே, இந்துவை உள்ளே விடுவதில்லை. அப்படியே, யாராவது சென்றாலும், “ஏதாவது ஒரு காரணாம் சொல்லி” திருப்பி அனுப்பப் படுவர்.

Francis Clooney at Laksmi temple

பிரான்சிஸ் சேவியர் குளூனி கோவில்களுக்குள் சென்று வந்தது: பிரான்சிஸ் சேவியர் குளூனி [ஹார்வார்ட் புரபசர்] என்பவர், தமிழகத்திற்கு பலமுறை வந்து, கிருத்துவம் மற்றும் வைணவம் இரண்டையும் ஒப்பீட்டு செய்து ஆராய்ச்சி செய்கின்றேன் என்ற விதத்தில் வந்து போக ஆரம்பித்தார். 1982-83, 1992-93, 2011 என்று பல வருடங்கள் வந்து, வருடத்திற்கும் மேலாக தங்கிருந்தார். “ஐக்கிய ஆலயம்” இவருடைய தங்கியிருந்த இடம், அங்கு தான் இக்னேசியஸ்ஸ் இருதயம் என்பவர் இவரை நன்றாக கவனித்துக் கொண்டார். வெஇயில் வரும்போது, கதர் சர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்ததால், ஏதோ அமெரிக்க பிராமணர் அல்லது “”ஹரே கிருஷ்ண” கோஷ்டி என்று நினைத்துக் கொண்டனர். இதனால், சைக்கிளில் ஊர்வலம் வந்து சென்னை முழுவதும் சுற்றி வந்து, ஏகப்பட்ட கோவில்களுக்கு சென்று வந்துள்ளார். அம்மன் கோவில்கள் இவருக்கு தனிப்பட்ட விருப்பமாகும். தமிழைக் கண்டு கொண்டுதால், அப்படியே பேசி சமாளித்து சமாளித்துள்ளார். பணத்தைப் பொறுத்த வரையில் கவலை இல்லை. தாராளமாகவே செலவழித்திருக்கிறார். தமிழகத்தை பஸ், ரெயில் என்று பயணித்து பற்பல கோவில்களுக்கு சென்று வந்தார். ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் உள்ளூர் நண்பர்கள் உதவியுள்ளனர். திருமலை கோவிலுக்கு 1983 மற்றும் 1992 என்று இரு முறை சென்றுள்ளாதாக அவரே பதிவு செய்துள்ளார். அங்குள்ள பட்டரின் நண்பரான புரபசர் அவருக்கு உதவியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-05-2018


Fr Clooney SJ - lecture -2011

[1] The Hindu, Christian nuns’ visit to temple causes flutter, R. Rajaram, TIRUCHI, MAY 10, 2018 00:00 IST; UPDATED: MAY 10, 2018 05:11 IST

[2] The visit of a group of Christian nuns to Sri Ranganathaswamy Temple in Srirangam on Tuesday evening caused a flutter on social media. The visit raised a furore after allegations were made on a social networking site that the nuns in their religious attire started to pray taking out their rosaries while inside the temple. Photographs showing a group of nuns standing and walking near Thousand Pillar Mandapam were also widely circulated on online messaging platforms. Officials of the Hindu Religious and Charitable Endowments Department said the nuns had come from Kerala as tourists and were indeed in their religious attire, but did not pray with rosaries inside the temple. The nuns were near the Thousand Pillar Mandapam at the outer prakaram when it was brought to the notice of the temple authorities by some devotees. Temple officials said the nuns were politely asked to leave the premises as they were in their religious attire. The nuns left the temple immediately, an official said. Although people of other faiths, including foreign nationals, were permitted inside the temple, they were not allowed beyond the Aryapadaal entrance. Visitors of other faiths were not allowed inside any of the Sannidhis as well, the temple authorities explained.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nuns-visit-to-temple-causes-flutter/article23830818.ece