Archive for the ‘மகாத்மா காந்தி’ Category

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

So called cosmic OM crucified

So called cosmic OM crucified

சிலுவையில் அறையப்பட்ட ஓம்: “ஓம்” என்ற சின்னத்தை சிலுவையில் அறைந்த மாதிரியான இரு சித்திரப்பை வைத்துக் கொண்டு, சச்சிதானந்த ஆசிரமத்தில் பூஜித்து வந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தெரியவந்ததால், அதனைக் ராமகிருஷ்ண ராவ் கண்டித்து எழுதிய கடிதம் பிப்ரவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. “ஓம்” என்ற சின்னம் மற்றும் பிரணவ மந்திரத்தை கிருத்துவர்கள் இவ்வாறு உபயோகப்படுத்துவது சரியில்லை என்றுதான் இந்துக்கள் எதிர்த்தனர். இக்கடிதம் வந்ததும், பேராசியர் கே. சுவாமிநாதன் ராமகிருஷ்ண ராவை அழைத்து பேட் கிரிபித்தை எதிர்த்து எழுத வேண்டாம், ரமண மகரிஷி பற்றி படி, என்று அவரது புத்தக்தைக் கொடுத்து அறிவுருத்தினார்[1]. இது தவிர அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ராம் ஜுகானி[2] என்பவர் முதலில் கடிதம் எழுதி, பிறகு வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் பேசிவிட்டுச் சென்றார். இருவருமே பேட் கிரிபித்ஸின் நண்பர்கள் என்ரு பிறகு தெரிய வந்தது. இடையில் பல மிரட்டல் கடிதக்களும் வந்தன.  அதாவது, சாம-பேத-தண்ட முறைகள் கையாளப்பட்டன என்று தெரிகிறது.

சச்சிதானந்த ஆசிரமம் - 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

சச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

ஓம் உபயோகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்தி எழுதிய பேட் கிரிபித்ஸும், சிபிசிஐயும்: சில கிருத்துவர்களும், அவர்களுடைய இறையியல் பாதிப்பு நிலையில் எதிர்த்தனர். இப்பிரச்சினை பெரிதாகிறது என்றதால், பேட் கிரிபித்ஸ் மார்ச்.23 1989 அன்று ஓமை தான் உபயோகப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று வாதித்து, சச்சிதானந்த ஆசிரமத்தைப் பற்றிய ஒரு குறும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்[3]. இதனால், ராமகிருஷ்ண ராவ் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மற்ற சர்ச் அதிகாரிகளுக்கு மார்ச்.3, 1989 அன்று எவ்வாறு அவற்றை கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று ஒரு கடிதம் மூலம் எழுதி கேட்டார். அதற்கு மே.26, 1989 அன்று அவர்கள் பதிலளித்த போது, NBCLC தயாரித்த சில சுற்றறிக்கைகள் முதலியவற்றை அனுப்பி வைத்தது. லுசியோ ட வைகோ கௌடின்ஹோ (Fr. Lucio da Veiga Coutinho, Deputy Secretary General) என்ற துணை அதிகாரி கையொப்பம் இட்டிருந்தார். 727/29IVi/150 என்ற சுற்றறிக்கையை  டி.எஸ்.அமலோபவதாஸ் தயாரித்தாக உள்ளது. 96/18IV82/185 எண்னிட்ட அறிக்கையில் பெயர் இல்லை. “ஓம் என்பது கடவுளின் வார்த்தை”[4] மற்றும் “ஓம் என்றதன் பொருள்”[5] என்று பேட் கிரிபித்ஸ் எழுதிய பிரசுரத் துண்டுகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, ஓம் என்றது பொதுவான தத்துவம், அது கிருத்துவக் கொள்கைகளுடன் பொறுந்தியுள்ளது, அதனால் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்துன் முறையில் அவை இருந்தன.

NBCLC, Bangalore - CBCI.- entrance

NBCLC, Bangalore – CBCI.- entrance

இரட்டை வேடம் போடும் கத்தோலிக்கர்கள்: இதனால், கத்தோலிக்கர்கள் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. இதனால், சாமி குலந்தை சாமி புத்தகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி மே.31.1989 அன்று ஒரு கடிதத்தினை அவருக்கு எழுதியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர்கள் ஒரு தீர்மானமான திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கத்தோலிக்க-பொரொடெஸ்டென்ட் பிரிவுகள், மறுபக்கம் கத்தோலிக்க-தீவிரவாத மற்றும் மிதவாத குழுக்கள் என்ற போர்வையில், இவர்கள் இந்துக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. “ஓம்” என்பதற்கான வேதங்கள், உபநிடதங்களில் கொடுத்துள்ள சுலோகங்கள், அர்த்தங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை நாங்கள் உபயோகப்படுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்வது, இன்னொரு பக்கம் அதனை எதிர்ப்பது என்ற நிலை காணப்பட்டது. உண்மையில், எதிர்க்கும் பாவனையில், இந்துமதம் தான் தூஷிக்கப்பட்டது. உண்மையில், இந்து மதத்தில் உள்ள நல்லவற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என்றால், அத்தகைய கீழ்த்தரமான செய்களைச் செய்ய மாட்டார்கள். ஆன்மீகம் பேசிக்கொண்டு அராஜகம் செய்யமாட்டார்கள்.

KVR asks questions

KVR asks questions

கிருத்துவர்கள் ஓமை உபயோகப்படுத்துவது, போலித்தனமான ஆன்மீகம்: இங்கு, ராமகிருஷ்ண ராவ் மார்ச்.28 1989 அன்று இந்திய எக்ஸ்பிரசில் வெளிவந்த கடிதத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “கடவுளை நம்புகிறவர்கள் கடவுளர்களை தூஷித்தால், கடவுளைத் தேடுகிறவர்கள், கடவுளை அழித்தால், தார்மீக மற்றும் நேர்மையான கொள்கைகள் மற்றும் அகில-உலக தார்மீக தத்துவங்கள் இவற்றையெல்லாம் மீறி நம்பிக்கையுள்ள ஒருமதத்தவர், மற்ற மத நம்பிக்கைகளை சந்தேகித்து, கேலி பேசினால், போலித்தனமான ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியிலான மதபோர்முறைகளை, இன்னொரு மதத்தின் மீது பிரயோகித்தால், அத்தகைய முறைகளை எல்லாம், உள்-கலச்சாரமயமாக்கல் என்று சொல்லமுடியாது, உன்மையில் அவர்கள், அத்தகைய கொள்கைக்கு எதிராக வேலைசெய்கிறார்கள் என்றகிறது. இந்துக்களுக்கு மதமும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருப்பதால், அவர்களுடைய கலாச்சார சின்னங்கள், முதலியவற்றை விட்டுக் கொடுக்க முடியாது”.

christ_guru

christ_guru

சம-மரியாதை இல்லாத உரையாடல், உரையாடல் இல்லை: “இறையியல் மற்றும் இறையாட்சி எண்ணங்கள் கொண்டவர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட சமதர்மவாதிகள் போல இருப்பது, அணுகுண்டுகளைப் போன்று ஆபத்தானவர்கள் ஆவர். “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், ஆனால், உன் கடவுள் கடவுள் இல்லை”, என்ற போக்கு, புரிதலுக்கோ, சமரசத்திற்கோ ஒவ்வாததாக இருக்கிறது. “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், அதேபோல, உன் கடவுள் என் கடவுள் ஆகும்”, என்று அந்த கோக்கை மாற்றிக் கொண்டு, ஒப்புக் கொண்டால் தான் சமரச, சமதர்மம் ஏற்படும், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருப்பார்கள்”. ராமகிருஷ்ண ராவ் தொடர்கிறார், “மனித வாழ்வுக்கு இதுதான் ஒரே வழி. பெரிய கடவுள் போட்டி, மதவுயர்வு அகம்பாவம், மதரீதியில் உலகத்தை அடக்கியாள் நினைக்கும் போக்கு, நவ-ஆன்மீக உலக ஆதிக்கம் போன்றவை, நம்பிக்கையாளர்களை என்றுமே அமைதியாக வாழ விடாது”.

Beyond compare: Wrapper of the book

Beyond compare: Wrapper of the book

கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் CBCI போடும் இரட்டை வேடங்கள்: கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் அமைப்பின் ஆண்டு பொதுசெயற்குழு கூட்டங்களில் நடக்கும் விசயங்களைக் கவனித்தாலே, இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தனிக்குழுக்களில் சேர்ந்து பேசி தீர்மானங்களை எடுக்கின்றனர் என்பதனை அரிந்து கொள்ளலாம். ஏதோ சர்ச்சுகளை, கிருத்துவமதத்தை, அவர்களது கடவுள்களை, பைபிளை இந்தியமயப்படுத்தும் அல்லது இந்துமயப்படுத்தும் திட்டங்கள், வேலைகள் ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு சில விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

  1. அக்டோபர் 26-31, 1956 தேதிகளில் பெங்களூரில் நடந்த கூட்டத்திலேயே –
    1. கதாகாலக்ஷேபம் போன்ற முறைகளைக் கையாளுவது[6],
    2. எட்மண்ட்ஸ் என்பவர் யுகாரிஸ்ட் சடங்கை சமஸ்கிருதத்தில் எப்படி நடத்துவது[7], ரோம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அதனை ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்தது.
    3. இந்திய இசையை உபயோகிப்பது[8]

போன்ற விசயங்களை அலசியுள்ளனர். தங்களது மதத்தூய்மையினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், இந்த கலப்புகள் தேவையில்லையே!

  1. 1969 ஜனவரி 4-8 தேதிகளில் பூனாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,
    1. தீபாவளி, சரஸ்வதி பூஜை, பொங்கல் முதலிய பண்டிகைகளைக் கொண்டாலலாமா,
    2. வேதங்களில் உள்ள சுலோகங்களை நமது சடங்குகளில், கிரியைகளில் உபயோகப்படுத்தினல் என்ன

முதலியவை “மற்ற மதங்களுடன் உரையாடல்” என்ற பயிற்சி-கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டன[9]. அதே நேரத்தில் கத்தோலிக்கத்துவத்தின் தனித்தன்மையும் வலியுறுத்தப்பட்டது[10].

  1. அடுத்த ஆண்டு 1970ல் எர்ணாகுளத்தில் நடந்த கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் கூட்டத்தில் எப்படி சர்ச்சை இந்தியமயமாக்கல் அல்லது இந்துமயமாக்கல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன[11].
    1. இக்கூட்டத்தில் ஆர். அருளப்பா, டி. எஸ். லூர்துசாமி, பேட் கிரிபித்ஸ், தெரசா போன்றோர் பங்கு கொண்டனர்.
    2. பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையத்தில் (NBCLC) 1969ம் ஆண்டில் ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடந்த பயிற்சி-கருத்தரங்கம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டன[12].
    3. பின்னிணைப்பு-IIல் வாடிகன் ஒப்புக்கொண்ட 12 முறைகள் கொடுக்கப்பட்டன[13].
  1. அதாவது, கத்தோலிக்க ஆசிரமங்களில் நடந்தவற்றையெல்லாம் அங்கீகரிக்கும் முறையில், இந்த ஆணை இருந்தது. இருப்பினும் 1989ல் கிருத்துவர்கள் இவற்றை எதிர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அவர்களும் தெரிந்து கொண்டே விளையாடியுள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-05-2015

———————————–

[1] பேராசியர் கே. சுவாமிநாதன், மஹாத்மா காந்தியின் மொத்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவற்றைத் தொகுத்து, 110 பகுதிகளாக வெளியிட்டவர்.

[2] பேராசிரியர் ராம் ஜுகானி, அமெரிக்காவில் போதித்து வருகிறார், இரண்டு பிஎச்டிக்களைக் கொண்டவர்.

[3]  Bede Griffiths, Saccidananda Ashram- Shantivanam, A Christian Ahram, Jyoti Press, Kulitalai.

[4] Bede Griffiths, Meaning of OM, NBCLC Inculturation pamphlet series.1

[5] Bede Griffiths, OM as the word of God, NBCLC Inculturation pamphlet series. 2

[6]  CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 28.

[7] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[8] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[9] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.39-40 and 149-150..

[10] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.149-150.

[11]  CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 75.

[12] CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 185-185.

[13] Prot.N.802/69, Consilium and Exsequendam Constitutionem de Sacra Liturgia, April 25, 1969. CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 192-194.