Archive for the ‘ஹென்றி லெ சாக்ஸ்’ Category

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)!

May 20, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)!

Yoga, Pope, Jesus, Satan - all together

Yoga, Pope, Jesus, Satan – all together

மூச்சடைப்பு வித்தையிலிருந்து, ஏசு-மேரி மேக்தலின் கதை வரை: மூச்சை அடக்கினால், மனதை அடக்கலாம், சிந்தனைகள் ஒருமிக்கும், அவை ஏசுகிறிஸ்துவுடம் செல்லும் என்று சொல்லிக் கொடுத்து, யாகாவை கிருத்துவத்தில் நுழைத்து ஏற்றுக்கொண்டனர். ஒரு நிலையில், ஏசுதான் யோகாவின் தலைவர், அவர் தான் முதன் முதலில் யோகாவைக் கண்டுபிடித்தார், இந்தியர்கள் அவரிடமிருந்து காப்பியடித்தனர் என்றா ரீதியில் புத்தகங்களில் எழுதி வைத்தனர். இதனால் தான், ஏசு தனது இறுதி நாளில், சிலுவையில் மரிக்காமல், உயிர்த்தெழுந்து, மேரி மேக்தலினுடன், கார்ஷ்மீரத்திற்கு வந்து, தனது இறுதி நாட்களைக் கழித்தார். அவருக்கும், மேரி மேக்தலினுக்கும் குழந்தைகள் பிறந்தன. அவை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப் பட்டனர். அவர்கள் வழிவந்த வம்சம் தான் மெரோவிங்கியன் போன்றவை. “கிரைல்” எனப்பட்ட, “அட்சயப் பாத்திரம்” அக்குடும்பத்தாரால், ரகசியமாக பாதுகாத்து வைக்கப்பட்டது, என்றெல்லாம் புதுப்புது கதைகளை உருவாக்கினர். மேற்கத்தைய நாகரிகத்தில், ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திரரீதியில் இல்லாதது என்று ஒதுக்கிவைத்த நிலயில், இந்தியாவுடன் தொடர்பு படுத்தி, அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர். அந்நிலையில், இந்த யோகாவை கையில் எடுத்துக் கொண்டனர். “கிறுஸ்துவ யோகா யூனியன்” என்றெல்லாம் பெயரிட்டு, யோகா மையங்களை ஆரம்பித்தனர்.

Vatican exorcist says Yoga is Satanic 2011

Vatican exorcist says Yoga is Satanic 2011

யோகாகுருவாகச் சித்தரிக்கப் பட்ட ஏசு எப்படி திடீரென்று மறுக்கப்பட்டார்?: யோகா விசயத்தில் கிருத்துவர்களின் போலித்தனம், மோசடி வேலைகள், இரட்டை வேடங்கள் என்று எல்லாமே வெளிப்பட்டன. கத்தோலிக்க ஆசிரமங்களில் காவியாடை வேடங்களுடன் முக்கியமாக, தியானம் மற்றும் யோகா முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, பின்பற்றப்பட்டன. யோகா சொல்லிக் கொடுக்க குரு வேண்டும் என்றபோது, அவர்களே “குருவாகி” யோகாபயிற்சியை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். “மூலமந்திரம்” குருவினால் போதிக்கப்படவேண்டும், என்றபோது, “ஏசுவாய நமஹ”, “கிறிஸ்துவாய நமஹ” என்று போலி மந்திரங்களை உருவாக்கிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். போதாகுறைக்கு, ஏசுகிறிஸ்துவையே யோகாகுரு மாதிரி மாற்றிவிட்டனர். அத்தகைய சித்தரிப்புப் படங்கள் உலகம் முழுவதும் உல்லா வந்தன! 1965 முதல் 1989 வரை எல்லாமே ஏற்றுக்கொள்ளப் பட்டவை, ஒப்புக்க்கொள்ளப்பட்டவை, எப்படி திடீரென்று வேறுவிதமாக மாறியது என்று தெரியவில்லை. கத்தோலிக்க ஆசிரமங்கள் இவ்வாறு யோகா முறைகளில், எல்லைகளைக் கடந்து செல்வதை, கண்டிக்க வேண்டும், வேறுவழியில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, கத்தோலிக்கப் பாதிரிகள், முதலில் கண்டிக்க ஆரம்பித்தனர். இறுதியில், போப்பை வைத்து தடையாணையைப் போட்டனர்.

Christ, yoga, confusion, Satanic for them

Christ, yoga, confusion, Satanic for them

ஓமில் இருந்து ஏசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட்டார்!: யோகா என்பது பொதுவானது, அது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்பு படுத்த முடியாது என்றும், கிருத்துவ அறிவுஜீவிகள் சொல்ல ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் சிலர் அதற்கு “உரிமை” கொண்டாடவும் முயன்றனர். அமெரிக்காவில், இந்துமதத்தை எதிர்க்கும், ஸ்டீப் பார்மர் போன்ற ஆசாமிகள், “யோகா” சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால், 1989ல் இந்த பிரச்சினையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, டிசம்பரில் 23 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தின் மூலம், கிருத்துவர்கள் அத்தகைய முறைகளைப் பின்பற்றக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளக்கம் அளித்தது. இது தவிர நவீன கால இயக்கம் (The New Age Movement) என்ற கிருத்துவர்களின் வேலகளையும் போப் கண்டித்தார்[1].  பௌத்தர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு, பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த, கிருத்துவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொறுந்தும். எனினும், அவர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. போப்போ தியானம் மற்றும் யோகா முறைகள் கிருத்துவர்கள் கண்மூடித்தனமாக செய்யக் கூடாது என்று கண்டித்ததையும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே பிரபலப்படுத்தவில்லை[2]. ஆக, யோகா-குரு கிருஸ்து மறுபடியும், சிலுவையில் ஏற்றபட்டார்!

Crossing the threshold - Pope condemning Yoga etc, 1989

Crossing the threshold – Pope condemning Yoga etc, 1989

யோகா சாத்தானின் செயல்: பால் எச்சரிக்கை செய்தபடி, சாத்தானே தேவதை போல வேடமிட்டு வருகிறான் [Paul warns that “Satan himself masquerades as an angel of light” (2 Cor. 11:14). அதனால், அத்தகைய பிரயோகங்களை செய்யலாகாது என்று விளக்கம் கொடுத்தனர்[3]. பிறகு மெத்தப்படித்த பேட் கிரிபித்ஸ். அமலோர்பவ தாஸ், லூர்துசாமி முதலியோருக்கு அவையெல்லாம் தெரியாமலா போயின? பிறகு எதற்கு அத்தகைய, சத்தானின் கிரியைகளை ஊக்குவித்தனர்? அப்படியென்றால், 1989 முதல் 2014 வரை அவர்களது சாத்தானின் காரியங்களை ஏன் ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தனர்? பைபிளில் சங்கீதத்தில் வரும், “தியானம் என்றால், கடவுள் எப்படி உண்மையினை வெளிப்படுத்தியுள்ளாரோ அவற்றை நினைப்பதுதான். உங்களுடைய தத்துவங்களை மற்றும் வழிகளை கருத்திற்கொள்வேன் மற்றும் தியானிப்பேன்; உங்களது ஆணைகளை ஏற்றுக்கொள்வேன்; உங்கள் வார்த்தையினை நான் மதிக்காமல் இருக்கமாட்டேன், என்றெல்லாம் பைபிளில் உள்ளவற்றின்படித்தான் தியானம் செய்ய வேண்டும்”, என்று விளக்கம் கொடுக்கப்பட்டது[4]. அதை விடுத்து, வேறு முறைகளைக் கையாடுதல் கூடாது[5], ஏனெனில், அவை கடவுளுக்கு உகந்தததல்ல என்றுதான் போதிக்க ஆரம்பித்தனர். யோகாவை ஏசுகிறிஸ்துவுடன் இணைத்த மேதாவிகள், காவி-அறிவுஜீவிகள், பாஷாண்டிகள், பிரகஸ்பதிகள் எப்படி திடீரென்று இவ்வாறு மாறினர் என்று தெரியவில்லை?

யோகா சாத்தானின் வேலை

யோகா சாத்தானின் வேலை

நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[6]. இவர் தனது 85 வயது காலத்தில், 25 வருடம் வாடிகனில் அந்த வேலையை செய்து வருகிறார். இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பேய்-பிசாசுகளை ஓட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய திரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[7]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!

யோகா, போப், ஏசு

யோகா, போப், ஏசு

அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[8].  ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனுதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல. ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[10]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[11]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[12]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

20-05-2015

Pope compares transgenders and nuclear weapons, priest links yoga and Satan 2015, 2019

[1]  Pope John Paul II, The threshold of Hope,

[2] Ram Swarup, Pope Johj Paul II on Eastern Religions and Yoga – A Hindu-Buddhist Rejoinder, Voice of India, New Delhi, 1995.

[3] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html

[4] In the Bible, meditation always means pondering God’s revealed truths and reflecting on how they pertain to us. David revels in the richness of God’s law throughout Psalm 119. He encourages us to meditate on it: “I meditate on your precepts and consider your ways. I delight in your decrees; I will not neglect your word” (Ps. 119:15-16). Since all Scripture is God-breathed (2 Tim. 3:16), all of it is profitable for meditation in the biblical sense.

[5] http://www.christianitytoday.com/ct/2004/november/10.78.html?start=2

[6] http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/

[7] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

http://www.dailymail.co.uk/news/article-2066289/Yoga-work-devil-says-Vaticans-chief-exorcist-doesnt-like-Harry-Potter-either.html

[8] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html

[9] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/

[10] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.

[11] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html

[12] http://www.catholic.org/news/health/story.php?id=59107

Yoga leads to Satan, says Northern Ireland priest

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (8)!

May 17, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (8)!

Crusade against Hindus-Inculturation

Crusade against Hindus-Inculturation

உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விசயத்தில் வாடிகன் கூறுவது[1]: “இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது”.

Using  Swami Vivekananda for propaganda, highly misleading

Using Swami Vivekananda for propaganda, highly misleading

எண் வாடிகன் ஆவணம் கூறுவது அதன் விமர்சனம்
1 இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் புனிதமானதுமான எதையும் கத்தோலிக்கத் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை. உண்மையானதும் புனிதமானதுமானவற்றை, கத்தோலிக்கம் ஏதோ அறிந்து கொண்டு சான்றிதழ் கொடுக்கும் அகம்பாவ-ஆணவரீதியில் இருந்த நிலை
2 தன்னுடைய கொள்கைகளிலிருந்து பலவற்றில் வேறுபடினும், மக்கள் யாவர்க்கும் உள்ளொளி ஊட்டும் உண்மையின் ஒளிச் சுடரைப் பலகாலும் காட்டும் வாழ்க்கை நடைமுறை வழிகளையும் சட்டங்களையும் கோட்பாடுகளையும் திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது. பலவற்றில் வேறுபடினும் என்று ஒப்புக் கொண்டு விட்டு, “திருச்சபை உண்மையாகவே மதிக்கிறது” என்பது இரட்டைவேடத்தைக் காட்டியது. இந்துமதத்தில் உள்ளவை சிறந்தவை என்றா ஏற்றுகொள்ளவேண்டும், அபகரித்து, கிறிஸ்துவுடையது என்று பொய் பேசக்கூடாது.
3 உண்மையிலே, “வழியும் உண்மையும் உயிருமான” (அரு.14:6) கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது; என்றும் அறிவிக்கவும் வேண்டும். கிறிஸ்தவத்தில் இல்லாதவை, இந்துமதத்தில் இருக்கும் போது, அவை எப்படி கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கிறது, என்று பொய் பேசலாம்; என்றும் அறிவிக்கவும் வேண்டும், என்று திட்டம் போடலாம்?
4 அவரிடத்தில்தான் மக்கள் மறைவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர்; அவரிடத்தில்தான் இறைவன் யாவற்றையும் தம்மோடு மீண்டும் உறவுபடுத்தினார். இது பொய் மீது, பொய்களை வைத்து, வளர்க்கும் அபாண்ட புளுகு மூட்டையாகிறதே?
5 எனவே முன்மதியோடும் பரம அன்போடும் கிறிஸ்தவ விசுவத்திற்கும் வாழ்விற்கும் சான்று பகர்ந்து, கிறிஸ்தவமல்லா மறைகளைச் சார்ந்தவரோடு உரையாடல் நடத்த வேண்டும்; இப்படி பொய் சொல்லிக் கொண்டு, உரையாடல் நடத்தினால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஓடும் நிலைத்தான் ஏற்படும்.
6 அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். ஆமாம், பொய்க்கு ஆதரவாக இருந்தால், ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் போலும்.
7 இவற்றின் வழியே அவர் தம் ஆன்மீக ஒழுக்க நன்மைகளையும், அவர்களிடையே உள்ள சமூகம், பண்பாடு இவற்றில் காணப்படும் மதிப்பிற்குரிய கூறுகளையும், அறிந்து, காத்து, வளர்க்க வேண்டுமெனத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துகிறது இதுவரை, கிறிஸ்தவல், இந்தியாவில் அழித்தவை தான் அதிகம், இன்றும் அழித்து வருகின்றது. அந்நிலையில் இத்தகைய அபாண்டமான பொய்களை கூறவேண்டிய அவசியம் என்ன?
One song, many truths

One song, many truths

இந்து மதமும், இந்துமதம் அல்லாத பிற மதங்களும்: கிருத்துவத்திற்கு மூலத்துவம் (Originality), முதலத்துவம் (Primitivity), தனித்தன்மை (Independent unique position) இல்லாததினால், ஒரு தாழ்வு மனப்பாங்கோடு, மற்ற மதங்களின் மீது தீவிரமான தாக்குதல், ஆக்கிரமிப்பு, அபகரிப்பு போன்ற செயல்களில் அதிகமகவே ஈடுபட்டு வந்துள்ளது. கிருத்துவமதம், இடைக்காலத்தில் தான் ஓரளவிற்கு சித்தாந்தங்களை எல்லாம் கூட்டி, சேர்த்து, கழித்து, ஒருவழியாக மதமாக உருவாக்கம் அடைந்தது. முகமதியம் வன்முறை மூலம் பிரபலமடைந்த நிலையைக் கண்டு, தானும் அதே வழியில் இறங்கியது. இரண்டு மதங்களும் சண்டையிட்டுக் கொண்டன. போர், வன்முறை கொலைகள், முதலியவற்றால் அமைதி, சாந்தம், நிம்மதி, ஆன்மீகம், அருள், முதலியவை வரவில்லை. மதநம்பிக்கையில் என்றுமே எதேச்சாதிகாரம், காலனிய அடக்குமுறைகள், முதலாளித்துவம், சர்வாதிகாரம், முதலிய கொள்கைகளுடன் செயல்பட முடியாது. ஆனால், சண்டை-சச்சரவு இல்லாமல், இன்னொரு மதம் எல்லா உலகத்தில் இடங்களிளும் பரவியிருந்தது கண்டு திகைத்து விட்டனர். ஆக பொருட்கள், சேவைகள் மட்டுமல்ல, மற்ற மதம் பற்றிய விசயங்களும் அங்கிருந்துதான் வருகின்றன என்று அறிந்து கொண்டனர். அதுதான் இந்துமதம் என்றறிந்த போது, அதன் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஜைனம், பௌத்தம் மற்றும் சீக்கியம், இந்துமதத்திலிருந்து தோன்றியதால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிக போன்ற காரணிகளால் வேறுபடவில்லை. ஆனால், அடக்குமுறைகளினால் உள்ளே வந்த முகமதியம் மற்றும் கிருத்துவம் மக்களிடையே செல்வாக்குப் பெறமுடியவில்லை.

Jesus picture in Toronto RKM Mutt

Jesus picture in Toronto RKM Mutt

இல்லாதவர்கள் தாம்,வைருப்பவர்களிடம் கையேந்த வேண்டும்: கிருத்துவமதமே ஒரு மதம் இல்லை, ஏனெனில், அது பற்பல மத நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், நாகரிகங்களை எல்லாவற்றையும், அபகரித்துக் கொண்டு, எல்லாவற்றிலும் கொஞ்சம்-கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு, சேர்த்து வளர்ந்த மதம் ஆதலால், மூலத்துவம், முதலத்துவம், தனித்துவம் முதலியவற்றை அதில் எதிர்பார்க்க முடியாது. எனவே பலவற்றிலிருந்து பெற்ற ஒன்று பலவாகவே பிரிந்து போவதில் வியப்பிலை. அதனால் தான், கிருத்துவத்தில் இன்று பல்லாயிரக்கணக்கில் மதப்பிரிவுகள் (denominations), இறையியல் கோஷ்டிகள் (Theological divisions) மற்றும் வகுப்புவாதக் குழுக்கள் (Sectarian groups) இருகின்றன. அதாவது, இல்லாமல் கடன் / தானம் வாங்கி ஆரம்பித்தது அவ்வாறே பிரிந்து விட்டது. இல்லாதவர்கள் தாம், இருப்பவர்களிடம் கையேந்த வேண்டும். எப்பொழுது, உரையாடல் என்று இறங்கி விட்டார்களோ, அப்பொழுதே, அவர்களிடம் சரக்கு, சிறப்பான விசயம், முதலியவை இல்லை என்று தெரிகிறது. எனவே, பிச்சையெடுப்பவர், கையேந்திக் கொண்டு, பவ்யமாகத்தான், வந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், அதிகாரத் தோரணையில் செயல்பட முடியாது. கிருத்துவ மதம் சரித்திர ரீதியிலாக புதிய மதம் என்றதால், ஆரம்பத்திலிருந்தே, ஏற்கெபனவே இருந்த மதங்களிலிருந்து உள்ளவற்றை அபகரித்து, தனதாக்கிக் கொண்டு, பல உருவங்களில் உருவெடுத்து, 13-14ம் நாற்றாண்டுகளில் ஒரு நிலையை அடந்தது.

இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம்: உலகத்திலேயே, இந்து மதத்திற்கு மட்டும் தான், எல்லாமே ஒரே இடத்தில் இருக்கின்றன. அதாவது, அந்த இடத்தில் தோன்றியதால், அந்த பாரம்பரியம், கலாச்சாரம் முதலிய காரணிகளுடன் சேர்ந்து வளர்ந்து, வாழ்ந்து, தொடர்ந்திருப்பதால், எல்லாமே அங்கேயே அடங்கிவிடுகின்றன. தத்துவம், இறையியல், ஆன்மீகம், தர்க்கம் மற்றும் கலை, விஞ்ஞான, தொழிற்நுட்பங்களும் அந்நம்பிக்கையாளர்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பல்லாயியக் கணக்கான வருட மாறுதல்கள் இருந்தாலும், இன்றும் அவர்கள், ஒரு பகுதியிலிருந்து, இன்னொருப் பகுதிக்குச் சென்றால், அங்குள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. என்னத்தான், மேலே புதியபூச்சு பூசப்பட்டிருந்தாலும், உள்ளே இருக்கும் இந்தியத்துவம் வெளிப்படுகிறது. எப்படி பலதரப்பட்ட இந்திய நாட்டியமுறைகளில், வெவ்வேறு சங்கீத பாரம்பரியங்களில், பேசும் பலமொழிகளில் ஒற்றுமைக் காணப்படுகிறாதோ, அடிப்படையிலான ஒற்றுமையுள்ளதோ, அதே போல உணவு, உடை, இருப்பிடம் முதலியவற்றில் அத்தகைய ஒற்றுமைகள் உள்ளதை மக்கள் சொல்லாமலேயே அறிந்து கொள்கிறார்கள் அதுதான், இந்தியநாட்டின் சிறந்தத்தன்மை. ஆனால், இப்பொழுது இந்தியத்துவம் மற்றும் இந்துத்துவம் என்று பேசி குழப்பப் பார்கிறார்கள். நாட்டியம் மற்றும் தேசியம் என்று பேசி பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.

ஒரே கடவுளாக இருக்கும் ஆண்டவர் ஏன் விசுவாசிகளைக் காப்பாற்றுவடில்லை?: கிருத்துவர்களின் உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் விவகாரங்களில், அவர்கள் என்ன தத்துவம் பேசினாலும், திட்டம் போட்டு வேலைசெய்தாலும், சகோதரத்துவம், மனித உரிமைகள் என்றெல்லாம் பாட்டு பாடினாலும் முடிவில் மதம் மாற்றம் தான் என்று வருகிறது. அதில் அவர்களுக்கு இடைக்காலத்தில் கிடைத்த வெற்றி, இப்பொழுது கிடைப்பதில்லை. அப்பொழுது, மக்களிடையே கிருத்து மிஷினரிகளின் திட்டம், மதமாற்றம் முதலியவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சி இருந்ததில்லை. இன்று ஓரளவு ஊடகங்கள் மக்களை இண்மைப்பதால், விசயங்கள், ஓரளவிற்கு மக்களைச் சென்றடைகின்றன. தொடர்ந்து, நெத சித்தாந்தவாதியோ, மதவாதியோ, அரசியல்வாதியோ மக்களை, நம்பிக்கையாளர்களை, விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. கடவுளை மாற்றுவதால் என்ன பலன், மத்தை மாற்றுவதால் என்ன பலன்? என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். கடவுள் ஒருவரே என்றால், அந்த கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு, ஏன் கிருத்துவர்கள் மற்றும் முகமதியர் ஒருவருக்கொருவர் சண்டை-போர்களில் அடித்துக் கொன்று கொண்டார்கள், பிறகு தத்தம்மக்குள் பிரிவுகளை வைத்துக் கொண்டு அவ்வாறே செய்து வந்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகின்றன. அதாவது ஜெஹோவா கிருத்துவர்களையும் மற்றும் அல்லா முகமதியர்களையும் அமைதியாக என் வாழவைக்கவில்லை,ஏன்பது வினோதமாக உள்ளது. தங்களையே காத்துக் கொள்ள முடியாத இவர்கள், மற்றவர்களை எப்படி காக்கப் போகிறார்கள்? அவரவர் நம்பிக்கையாளர்களைக் காக்காத அல்லா மற்றும் ஜேஹோவா எப்படி மற்றவர்களைக் காக்கப் போகிறார்? என்று ஜென்டல்கள், காபிர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

© வேதபிரகாஷ்

17-05-2015

[1]  புனித சின்னப்பர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அருளிய ஏடுகள், குருத்துவக் கல்லூரி, திருச்சி, 1967, ப.670-671.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)!

2007 image of Mother Teresas Home for the Dying, Nirmal Hriday, in Kolkata. 1952

2007 image of Mother Teresas Home for the Dying, Nirmal Hriday, in Kolkata. 1952

வாடிகன் கவுன்சில்IIக்கு முன்பு மற்றும் பின்பு: இந்நிகழ்சிகள் வாடிகன் கவுன்சில்-IIக்கு முன்பு மற்றும் பின்பு என்று நடந்துள்ளது. அதாவது, இத்தகைய பரிசோதனை முறைகளை செய்து வருவது, நடமுறைப் படுத்துவது, பிறகு வாடிகன் அனுமதி கொடுத்துவிட்டது என்று அறிவிப்பது போன்ற நிகழ்வுகள், ஏற்கெனவே திட்டமிட்டு, தீர்மானிக்கப்பட்ட நாடகக் காட்சிகளை அரங்கேற்றுவது போலிருக்கிறது. இங்கு, டி.எஸ். லூர்துசாமி, ராயப்ப அருளப்பா, பேட் கிரிபித்ஸ், தெரசா (1910-1997) என்று எல்லோரும் இக்கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளது நோக்கத்தக்கது. 1970ல் தெரசா அம்மையாருக்கு இவற்றில் நாட்டம் என்ன என்பதனையும் யோசிக்க வேண்டும். இதே அருளப்பா, கணேஷ் ஐயர் என்பவரை வைத்துக் கொண்டு, போலி ஆதாரங்களை உருவாக்கி, சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று, பிறகு விவகாரங்கள் அமுக்கப்பட்டன. இப்பொழுது கூட, CBCIன் இணைதளத்தில் இதற்கான [CBCI Office for Dialogue and Desk Ecumenism] அமைப்புள்லதைக் காட்டுகிறது[1]. வாடிகன் கவுன்சில்-II ஒட்டி, 1969 ஜனவரியில் “இந்தியாவில் சர்ச்” என்ற மாநாட்டிற்குப் பிறகு, உரையாடல் மற்றும் ஒற்றுமை பற்றிய கமிஷன் 1973ல் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக, கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லத பிரிவுகள், மற்றும் மற்ற மதங்கள், மதநம்பிக்கையில்லாதவர்கள் முதலியோருடன் உரையாடல் வைத்துக் கொள்ள் மற்றும் ஒற்றுமை ஏற்படுத்த, சிறிதுசிறிதாக மாற்றியமைக்கப்பட்டது, என்று அறிவிக்கிறது[2].

குழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு

குழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு

சுதந்திரத்திற்கு முன்பு மற்றும் சுதந்திரத்திற்கு பின்பு: சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை ஆங்கிலேயர் எப்படி மாற்றிக் கொண்டனர் என்று மேலே விவரிக்கப்பட்டது. குறிப்பாக ஜேகோபைட், மார் தோமா, மலங்காரா சர்ச்சுகள், கத்தோலிக்கத் திணிப்பை பலமாக எதிர்த்தன. இதனால், புதியக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அவர்களை குழப்பினர். இதில் தான் தாமஸ் கட்டுக்கதை குறிப்பாக வருகிறது. சரித்திர ஆதாரமில்லாத அதனை, ஆரம்பிதிலிருந்தே,  அவர்களே எதிர்த்து வந்தனர். ஆனால், கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முறையில், இதற்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போப் ஒருபக்கம், தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பது, அதே நேரத்தில், இந்த கோஷ்டிகள் வந்தார் என்று பேசுவது, எழுதுவது முதலியவற்றைக் காணலாம். பிறகு ஏசுவை ஒரு யோகி என்பது போல சித்தரிக்கும் போது, சரித்திர ரீதியில் ஏசுகிறிஸ்து இல்லை என்ற செய்து, அவர்களை பாதித்தது. அதனால், அக்கட்டுக்கதையினையும் சேர்த்துக் கொண்டு, ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம், புதிய கட்டுக்கதைகளை உண்டாக்கினர். திரைப்படமும் எடுக்கிறேன் என்று ஆரம்பித்தனர். ஆனால், வெகுஜன மக்களிடையே அத்தகைய யுக்திகள் எடுபடவில்லை. அதே நேரத்தில், லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட், டா வின்சி கோட், போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். சில இடங்களில் தடையும் விதிக்கப்பட்டது. உண்மையில், முந்தைய கட்டுக்கதையில், ஏசு மேரி மேக்தலினியோடு, காஷ்மீருக்கு வந்தார், கணவன் மனைவி போன்று வாழ்ந்தனர், குழந்தைகளை பெற்றுக் கொண்டனர், அங்கேயே இறந்தனர், ஏசுவின் சமாதி இன்றும் உள்ளது என்றெல்லாம் சொல்ல்க்கொள்பவர்களும் உண்டு.  பிறகு, இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

2012_01_11_Jamison_TaintedSaint_ph_Donald_McGuire_SJ_and_Mother_Teresa

2012_01_11_Jamison_TaintedSaint_ph_Donald_McGuire_SJ_and_Mother_Teresa

தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள்: 1970ல் CBCIன் கூட்டத்தில் கலந்து கொண்ட தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள் தனியாக ஆராய வேண்டியுள்ளது. 1952ல் ஒரு கோவிலை ஆக்கிரமித்து, அதனையே “நிர்மல் ஹிருதய்” என்ற அனாதை இல்லமாக மாற்றினார் எனும் போது வியப்பாக இருக்கிறது. இது காளிகோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. போகும் வழியில், சுவற்றை ஒட்டி ஏராளமான கடைகளில், காளி கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய பொருட்கள் விற்கப்படுவதை காணலாம். ஆக வேண்டுமென்றே, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1952ல் ஆக்கிரமித்தனர் என்று தெரிகிறது, ஆனால், உபயோகத்தில் இல்லாத கோவிலை அவர் அவ்வாறு மாற்றினார் என்று கதை விட்டனர். இந்த இடத்தில் ஆனாதைகளைக் காக்கிறேன் என்று, ஆரம்பித்தாலும், இவரது தீவிரமான மதக்கருத்துகள் விசித்திரமாக இருந்தன. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும், கிருத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது ஆண்டவனின், தெய்வீகத் திட்டம் என்றெல்லாம் பேசியுள்ளார். அங்குள்ள அனாதைகள் இறப்புகளிலும் சர்ச்சை ஏற்பட்டது.

Mother Teresa prophecies of

Mother Teresa prophecies of

தெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர். அதைப்பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ராமகிருஷ்ணனின் சாந்திவனம் மேலே குறிப்பிடப்பட்டது.  பெரிய அளவில் உள்ளா தொழிற்சாலை [“Large scale Industry”] என்பார்களே, அதுபோல, இவர், பணம், ஆதரவு, ஆட்கள் முதலியவை இருந்ததினால், அவ்வாறு செய்து பிரபலமடைந்தார்.

Ignatius Hirudayam, Ikkiya Alayam, Santhome

Ignatius Hirudayam, Ikkiya Alayam, Santhome

இந்து அறிவிஜீவிகளை தந்திரமாகப் பிரித்தது: இப்படி 1956-1970களிலேயே நடந்து முடிந்த விசயங்களைப் பற்றி இந்துக்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். உண்மையில், இந்த ஆவணங்கள் எல்லாம், இந்துக்களுக்குக் கிடைப்பவை அல்ல. மேலும் இவற்றில் உள்ள ஆணைகள் முதலியவை கத்தோலிக்கக் கிருத்துவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். முதலில் இந்துக்கள், கிருத்துவர்கள் உண்மையிலேயே, தங்களது மதத்தினால் ஈர்க்கப்பட்டு அவ்வாறு செய்கிறார்கள் என்று அமைதியாக விட்டுவிட்டார்கள் போலும். ஆனால், 1980களில்[3] அவர்களது மதம் மாற்றும் செயல்களைக் கவனித்தபோது, அவையெல்லாம் அவர்கள் கையாளும் யுக்திகள், சாதாரண இந்துக்களை மதம் மாற்றத்தான், அத்தகைய வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்று தெரிய வந்த போது, எதிர்க்க ஆரம்பித்தனர். இங்கு இவர்களது மதம் மற்றும் யுக்திகள் பலவிதங்களில் செயல்படுவதை அறியலாம்.  ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்தால், மதம் மாறிவிடுவர். ஆனால், மற்றவர்கள் அத்தகைய முறைகளுக்கு ஒத்துவர மாட்டார்கள்.

Nirmal Hrudaya before Kali temple

Nirmal Hrudaya before Kali temple

ஒருபக்கம் உண்மைகளை மறைத்தல், இன்னொரு பக்கம் சமத்துவம் பேசுதல்: பேட் கிரிபித்ஸ் போன்றோர், நன்றாக படித்தவர்கள், பணக்காரர்கள், உயர்ந்த பதவிகளில் உள்ளோர் முதலியவர்களுடன் நட்புடன் இருந்து கொண்டு, அவர்களிடம் ஒரு மாதிரி பேசி, நம்பிக்கையை உருவாக்கி, பிறகு மற்றவர்களுடன் வேறு மாதிரி பேசி, மதம் மாற்ற முயற்சிகளைக் கையாண்டுள்ளார்கள். அதனால் தான், பேராசியர்கள் கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், பேட் கிரிபித்ஸை ஆதரித்து, ராமகிருஷ்ண ராவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இக்னேசியஸ் இருதயம், சாமி குலந்தைசாமி, பேட் கிரிபித்ஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், டி. எஸ். அமலோர்பவ தாஸ் முதலியோர் தத்தம் இடங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது. கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், அவர்களது முறைகளை அறிந்து கொண்டிருந்தால், ஒருவேளை, வேறுமாதிரி, நடந்து கொண்டிருப்பார்கள். எனவே, இதுவும் கிருத்துவர்களின் ஒரு யுக்தி என தெரிந்து கொள்ளலாம். உண்மையினை-சொல்-சொல்லாதே பாணியில் செயல்படுவது, ஆன்மீக மோசடி யுக்திகளில் ஒன்று என்று அறிந்து கொள்ளலாம். முரண்பாடுகள் இல்லாமல் இல்லை, முரண்பாடுகள் உள்ளது தான் சிறந்த சித்தாந்தம் (Theory of contradictions), அதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாதத்தையும் இப்பொழுது வைக்கப்படுகிறது.

Prof K Swaminathan

Prof K Swaminathan

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] http://cbci.in/all-Commissions/Dialogue-Ecumenism.aspx

[2] The Commission for Dialogue and Ecumenism’ was established in January 1973 following the national seminar on ‘Church in India’ held in 1969 and as a follow-up of Vatican II. Initially it was one among the cluster of concerns known as ‘Commission for Proclamation, Ecumenism, Dialogue and Mass Media’. Later, it was made an autonomous department with the name ‘Commission for Ecumenism and Dialogue’. The focus of the Commission then included ‘inter-denominational dialogue, inter-religious dialogue and dialogue with non-believers’. http://cbci.in/all-Commissions/Dialogue-Ecumenism.aspx

[3]  மீனாட்சிபுரம் மதம் மாற்றம், பெரிய பிரச்சினையாகியது, எல்லோருக்கும் தெரியவந்தது. அதில் முகமதியர்கள் வளைகுடா பணத்தை உபயோகப்படுத்தி, இந்துக்களை மதம் மாற்றினர்.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)!

So called cosmic OM crucified

So called cosmic OM crucified

சிலுவையில் அறையப்பட்ட ஓம்: “ஓம்” என்ற சின்னத்தை சிலுவையில் அறைந்த மாதிரியான இரு சித்திரப்பை வைத்துக் கொண்டு, சச்சிதானந்த ஆசிரமத்தில் பூஜித்து வந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தெரியவந்ததால், அதனைக் ராமகிருஷ்ண ராவ் கண்டித்து எழுதிய கடிதம் பிப்ரவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. “ஓம்” என்ற சின்னம் மற்றும் பிரணவ மந்திரத்தை கிருத்துவர்கள் இவ்வாறு உபயோகப்படுத்துவது சரியில்லை என்றுதான் இந்துக்கள் எதிர்த்தனர். இக்கடிதம் வந்ததும், பேராசியர் கே. சுவாமிநாதன் ராமகிருஷ்ண ராவை அழைத்து பேட் கிரிபித்தை எதிர்த்து எழுத வேண்டாம், ரமண மகரிஷி பற்றி படி, என்று அவரது புத்தக்தைக் கொடுத்து அறிவுருத்தினார்[1]. இது தவிர அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ராம் ஜுகானி[2] என்பவர் முதலில் கடிதம் எழுதி, பிறகு வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் பேசிவிட்டுச் சென்றார். இருவருமே பேட் கிரிபித்ஸின் நண்பர்கள் என்ரு பிறகு தெரிய வந்தது. இடையில் பல மிரட்டல் கடிதக்களும் வந்தன.  அதாவது, சாம-பேத-தண்ட முறைகள் கையாளப்பட்டன என்று தெரிகிறது.

சச்சிதானந்த ஆசிரமம் - 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

சச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்

ஓம் உபயோகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்தி எழுதிய பேட் கிரிபித்ஸும், சிபிசிஐயும்: சில கிருத்துவர்களும், அவர்களுடைய இறையியல் பாதிப்பு நிலையில் எதிர்த்தனர். இப்பிரச்சினை பெரிதாகிறது என்றதால், பேட் கிரிபித்ஸ் மார்ச்.23 1989 அன்று ஓமை தான் உபயோகப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று வாதித்து, சச்சிதானந்த ஆசிரமத்தைப் பற்றிய ஒரு குறும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்[3]. இதனால், ராமகிருஷ்ண ராவ் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மற்ற சர்ச் அதிகாரிகளுக்கு மார்ச்.3, 1989 அன்று எவ்வாறு அவற்றை கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று ஒரு கடிதம் மூலம் எழுதி கேட்டார். அதற்கு மே.26, 1989 அன்று அவர்கள் பதிலளித்த போது, NBCLC தயாரித்த சில சுற்றறிக்கைகள் முதலியவற்றை அனுப்பி வைத்தது. லுசியோ ட வைகோ கௌடின்ஹோ (Fr. Lucio da Veiga Coutinho, Deputy Secretary General) என்ற துணை அதிகாரி கையொப்பம் இட்டிருந்தார். 727/29IVi/150 என்ற சுற்றறிக்கையை  டி.எஸ்.அமலோபவதாஸ் தயாரித்தாக உள்ளது. 96/18IV82/185 எண்னிட்ட அறிக்கையில் பெயர் இல்லை. “ஓம் என்பது கடவுளின் வார்த்தை”[4] மற்றும் “ஓம் என்றதன் பொருள்”[5] என்று பேட் கிரிபித்ஸ் எழுதிய பிரசுரத் துண்டுகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, ஓம் என்றது பொதுவான தத்துவம், அது கிருத்துவக் கொள்கைகளுடன் பொறுந்தியுள்ளது, அதனால் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்துன் முறையில் அவை இருந்தன.

NBCLC, Bangalore - CBCI.- entrance

NBCLC, Bangalore – CBCI.- entrance

இரட்டை வேடம் போடும் கத்தோலிக்கர்கள்: இதனால், கத்தோலிக்கர்கள் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. இதனால், சாமி குலந்தை சாமி புத்தகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி மே.31.1989 அன்று ஒரு கடிதத்தினை அவருக்கு எழுதியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர்கள் ஒரு தீர்மானமான திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கத்தோலிக்க-பொரொடெஸ்டென்ட் பிரிவுகள், மறுபக்கம் கத்தோலிக்க-தீவிரவாத மற்றும் மிதவாத குழுக்கள் என்ற போர்வையில், இவர்கள் இந்துக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. “ஓம்” என்பதற்கான வேதங்கள், உபநிடதங்களில் கொடுத்துள்ள சுலோகங்கள், அர்த்தங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை நாங்கள் உபயோகப்படுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்வது, இன்னொரு பக்கம் அதனை எதிர்ப்பது என்ற நிலை காணப்பட்டது. உண்மையில், எதிர்க்கும் பாவனையில், இந்துமதம் தான் தூஷிக்கப்பட்டது. உண்மையில், இந்து மதத்தில் உள்ள நல்லவற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என்றால், அத்தகைய கீழ்த்தரமான செய்களைச் செய்ய மாட்டார்கள். ஆன்மீகம் பேசிக்கொண்டு அராஜகம் செய்யமாட்டார்கள்.

KVR asks questions

KVR asks questions

கிருத்துவர்கள் ஓமை உபயோகப்படுத்துவது, போலித்தனமான ஆன்மீகம்: இங்கு, ராமகிருஷ்ண ராவ் மார்ச்.28 1989 அன்று இந்திய எக்ஸ்பிரசில் வெளிவந்த கடிதத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “கடவுளை நம்புகிறவர்கள் கடவுளர்களை தூஷித்தால், கடவுளைத் தேடுகிறவர்கள், கடவுளை அழித்தால், தார்மீக மற்றும் நேர்மையான கொள்கைகள் மற்றும் அகில-உலக தார்மீக தத்துவங்கள் இவற்றையெல்லாம் மீறி நம்பிக்கையுள்ள ஒருமதத்தவர், மற்ற மத நம்பிக்கைகளை சந்தேகித்து, கேலி பேசினால், போலித்தனமான ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியிலான மதபோர்முறைகளை, இன்னொரு மதத்தின் மீது பிரயோகித்தால், அத்தகைய முறைகளை எல்லாம், உள்-கலச்சாரமயமாக்கல் என்று சொல்லமுடியாது, உன்மையில் அவர்கள், அத்தகைய கொள்கைக்கு எதிராக வேலைசெய்கிறார்கள் என்றகிறது. இந்துக்களுக்கு மதமும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருப்பதால், அவர்களுடைய கலாச்சார சின்னங்கள், முதலியவற்றை விட்டுக் கொடுக்க முடியாது”.

christ_guru

christ_guru

சம-மரியாதை இல்லாத உரையாடல், உரையாடல் இல்லை: “இறையியல் மற்றும் இறையாட்சி எண்ணங்கள் கொண்டவர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட சமதர்மவாதிகள் போல இருப்பது, அணுகுண்டுகளைப் போன்று ஆபத்தானவர்கள் ஆவர். “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், ஆனால், உன் கடவுள் கடவுள் இல்லை”, என்ற போக்கு, புரிதலுக்கோ, சமரசத்திற்கோ ஒவ்வாததாக இருக்கிறது. “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், அதேபோல, உன் கடவுள் என் கடவுள் ஆகும்”, என்று அந்த கோக்கை மாற்றிக் கொண்டு, ஒப்புக் கொண்டால் தான் சமரச, சமதர்மம் ஏற்படும், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருப்பார்கள்”. ராமகிருஷ்ண ராவ் தொடர்கிறார், “மனித வாழ்வுக்கு இதுதான் ஒரே வழி. பெரிய கடவுள் போட்டி, மதவுயர்வு அகம்பாவம், மதரீதியில் உலகத்தை அடக்கியாள் நினைக்கும் போக்கு, நவ-ஆன்மீக உலக ஆதிக்கம் போன்றவை, நம்பிக்கையாளர்களை என்றுமே அமைதியாக வாழ விடாது”.

Beyond compare: Wrapper of the book

Beyond compare: Wrapper of the book

கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் CBCI போடும் இரட்டை வேடங்கள்: கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் அமைப்பின் ஆண்டு பொதுசெயற்குழு கூட்டங்களில் நடக்கும் விசயங்களைக் கவனித்தாலே, இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தனிக்குழுக்களில் சேர்ந்து பேசி தீர்மானங்களை எடுக்கின்றனர் என்பதனை அரிந்து கொள்ளலாம். ஏதோ சர்ச்சுகளை, கிருத்துவமதத்தை, அவர்களது கடவுள்களை, பைபிளை இந்தியமயப்படுத்தும் அல்லது இந்துமயப்படுத்தும் திட்டங்கள், வேலைகள் ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு சில விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

  1. அக்டோபர் 26-31, 1956 தேதிகளில் பெங்களூரில் நடந்த கூட்டத்திலேயே –
    1. கதாகாலக்ஷேபம் போன்ற முறைகளைக் கையாளுவது[6],
    2. எட்மண்ட்ஸ் என்பவர் யுகாரிஸ்ட் சடங்கை சமஸ்கிருதத்தில் எப்படி நடத்துவது[7], ரோம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அதனை ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்தது.
    3. இந்திய இசையை உபயோகிப்பது[8]

போன்ற விசயங்களை அலசியுள்ளனர். தங்களது மதத்தூய்மையினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், இந்த கலப்புகள் தேவையில்லையே!

  1. 1969 ஜனவரி 4-8 தேதிகளில் பூனாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,
    1. தீபாவளி, சரஸ்வதி பூஜை, பொங்கல் முதலிய பண்டிகைகளைக் கொண்டாலலாமா,
    2. வேதங்களில் உள்ள சுலோகங்களை நமது சடங்குகளில், கிரியைகளில் உபயோகப்படுத்தினல் என்ன

முதலியவை “மற்ற மதங்களுடன் உரையாடல்” என்ற பயிற்சி-கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டன[9]. அதே நேரத்தில் கத்தோலிக்கத்துவத்தின் தனித்தன்மையும் வலியுறுத்தப்பட்டது[10].

  1. அடுத்த ஆண்டு 1970ல் எர்ணாகுளத்தில் நடந்த கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் கூட்டத்தில் எப்படி சர்ச்சை இந்தியமயமாக்கல் அல்லது இந்துமயமாக்கல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன[11].
    1. இக்கூட்டத்தில் ஆர். அருளப்பா, டி. எஸ். லூர்துசாமி, பேட் கிரிபித்ஸ், தெரசா போன்றோர் பங்கு கொண்டனர்.
    2. பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையத்தில் (NBCLC) 1969ம் ஆண்டில் ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடந்த பயிற்சி-கருத்தரங்கம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டன[12].
    3. பின்னிணைப்பு-IIல் வாடிகன் ஒப்புக்கொண்ட 12 முறைகள் கொடுக்கப்பட்டன[13].
  1. அதாவது, கத்தோலிக்க ஆசிரமங்களில் நடந்தவற்றையெல்லாம் அங்கீகரிக்கும் முறையில், இந்த ஆணை இருந்தது. இருப்பினும் 1989ல் கிருத்துவர்கள் இவற்றை எதிர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அவர்களும் தெரிந்து கொண்டே விளையாடியுள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-05-2015

———————————–

[1] பேராசியர் கே. சுவாமிநாதன், மஹாத்மா காந்தியின் மொத்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவற்றைத் தொகுத்து, 110 பகுதிகளாக வெளியிட்டவர்.

[2] பேராசிரியர் ராம் ஜுகானி, அமெரிக்காவில் போதித்து வருகிறார், இரண்டு பிஎச்டிக்களைக் கொண்டவர்.

[3]  Bede Griffiths, Saccidananda Ashram- Shantivanam, A Christian Ahram, Jyoti Press, Kulitalai.

[4] Bede Griffiths, Meaning of OM, NBCLC Inculturation pamphlet series.1

[5] Bede Griffiths, OM as the word of God, NBCLC Inculturation pamphlet series. 2

[6]  CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 28.

[7] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[8] CBCI, Report of the Meetings of the working and Standing Committees, Bangalore, October 26-31, 1956, p. 108 and 110.

[9] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.39-40 and 149-150..

[10] CBCI, All India Seminar – The Church in India Today, Report on the National Consultation of the Pastoral Clergy, Poona, January 4-8, 1969, pp.149-150.

[11]  CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 75.

[12] CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 185-185.

[13] Prot.N.802/69, Consilium and Exsequendam Constitutionem de Sacra Liturgia, April 25, 1969. CBCI, Report of the General Meeting of the Catholic Bishops’ Conference of India, ernakulam, January 7-16, 1970, p. 192-194.

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)!

May 16, 2015

கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)!

March 21, 1950. Inauguration of Saccidananda Ashram at Shantivanam. Henri Le Saux

March 21, 1950. Inauguration of Saccidananda Ashram at Shantivanam. Henri Le Saux

பேட் கிரிபித்ஸைப் போல மற்றவர்களைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரான்ஸுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கத்தோலிக்க ஆசிரமங்களை உண்டாக்குவது, கிருத்துவ சாமியார்கள், இந்து சாமியார்களைப் போன்று காவியாடை அணிவது, ஆச்சிரமங்களில் வாழ்வது, தாவர-சைவ உணவை உண்பது, சர்ச்சுகளை கோவில் போல கட்டுவது, இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது, முதலிய செயல்களில் ஈடுபட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தாலும், புரொடெஸ்டென்டுகளின் ஆதரவு இருந்தது வியப்பாக உள்ளது. எந்த நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்த அல்லது சட்டப்பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பெயர்கள் மாறுபடினும், நாடுகள் வேறுபடினும் அவர்களது எண்ணம், வாடிகன் கவுன்சில்-II திட்டத்தை நிறைவேற்றுவதில் தான் இருந்தது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

Bed Griffiths books

Bed Griffiths books

பரமருப்யானந்த [Jules Monchanin (1895-1957)]: ஜூல்ஸ் மோன்சானின் என்ற பிரெஞ்சு கத்தோலிக்கர், தண்ணீர்ப்பள்ளியில் 1938ல் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்[1] என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னொரு குறிப்பின் படி, இவர் இந்தியாவுக்கு 1939ல் வந்தார் என்றுள்ளது. அந்த ஆசிரமம் தான் பிறகு சச்சிதானந்த ஆசிரமம் என்று மாறியது என்று கூறப்பட்டது. 1939-1949 காலத்தில் திருச்சி டையோசிஸில் பாதிரியாராக இருந்தார். இந்துமதம் ஏதோ சீரழிந்த நிலையில் இருந்தது என்றும், அதனை காப்பாற்றத்தான், இவர் இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம் இப்பொழுது எழுதி வருகிறார்கள்[2]. ஆனால், வாடிகன் கவுன்சில்-II – படி தான், இவர் செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படிதான், இவர் பல இந்து யோகிகள் முதலியவர்களைச் சந்தித்துப் பேசினார், உரையாடினார், புண்ணியக்ஷேத்திரங்களுக்குச் சென்றார் என்றெல்லாம் இவரைப்பற்றிய விவரங்கள் கூறுகின்றன. இவர் செப்டம்பர் 1957ல் இவர் பிரான்சுக்குச் சென்றதும், அங்கு அக்டோபர் 1957ல் காலமானார்[3].

Henri Le Saux and Jules Monchanin

Henri Le Saux and Jules Monchanin

அபிஷிக்தானந்த (Henri Le Saux 1910-1973): ஹென்றி லெ சாக்ஸ் என்பவர் 1948ல் இந்தியாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். முதலில் ஆகஸ்ட் 15, 1948 அன்று கொழும்பு வந்தடைந்து, அங்கிருந்து, குளித்தலைக்கு வந்து அங்கிருந்த ஜூல்ஸ் மோன்சானின் என்ற பாதிரியுடன் சேர்ந்து கொண்டார். 1950ல் இவர் சச்சிதானந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார், அதாவது, முறைப்படி அப்பொழுது துவக்கி வைக்கப்பட்டது. அப்பொழுதுதான் தன் பெயரை அபிஷிக்தானந்த என்று மாற்றிக் கொண்டார். மே 15 முதல் 20 ஜூன் வரை 1969ல் பெங்களூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி தனது வாழ்நாளை செலவிட்டார் எனலாம். 1973ல் இந்தூரில் இருதய நோயினால் காலமானார்.

D S Amalorpavadass

D S Amalorpavadass

டி. எஸ். அமலோர்பவதாஸ் (1932-1999): டி. எஸ். அமலோர்பவதாஸ், கார்டினல் லூர்துசாமியின் தம்பி. இவர் பிரான்ஸுக்குச் சென்று படித்து வந்ததும் அக்டோபர் 1966ல் தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் [National Biblical, Catechetical[4], and Liturgical[5] Centre (NBCLC)] என்பதனை ஆரம்பித்தார். 1979ல் மைசூர் பல்கலைக்கழகத்தில், கிருத்துவப் படிப்பிற்கு ஒரு துறையை ஏற்படுத்தினார். 1980ல் இந்தியாவிலேயே முதன் முதலாக கிருத்துவப் படிப்புகளுக்கான ஒரு தனிப்பிரிவே உண்டாக்கப்பட்டது. அஞ்சலி ஆசிரமம் என்றதையும் ஆரம்பித்தார். இவர் செய்து வந்த இந்துமதக் கலப்புகளை, சில காத்தோலிக்கர்கள் எதிர்த்தனர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனால், சர்ச்சைகள் ஏற்பட்டன. 1978ம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 8 வரை பத்தாவது தீவிர பயிற்சி வகுப்பு நடந்தது பற்றி புகார்கள் கூறப்பட்டன. உடலுறவு பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது, இதனால், பங்கு கொண்ட இளைஞர்களில் சிலர் ஜோடியாக இருந்தனர், வெளியேசென்றனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது[6]. மே.25 1990 அன்று மைசூரிலிருந்து, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

Acharya Francis

Acharya Francis

ஆச்சார்ய பிரான்சிஸ் (1912-2002): பிரான்சிஸ் ஆச்சார்ய எனப்படுகின்ற ஜான் ரிச்சர்ட் மஹீ [John Richard Mahieu, 1912-2002] என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரி, ஜூலை.12, 1955 அன்று பாம்பேக்கு வந்தபோது, அபிஷிக்தானந்தா (டாம் ஹென்றி லெ சாக்ஸ்) வரவேற்றாராம். இவர் சாந்திவனத்தில் ஓராண்டு இருந்து தங்கி, ஜூல்ஸ் மோன்சானின் மற்றும் டாம் ஹென்றி லெ சாக்ஸ் முதலியோருடன் கத்தோலிக்க ஆசிரமம் உருவாக்குவது பற்றி பேசினர். அதன்படியே நவம்பர் 1956ல் கேரளாவுக்கு ஜான் ரிச்சர்ட் மஹீ புறப்பட்டார்.  திருவல்லாவின் பிஷப் ஜக்காரியா மார் அதனசியாஸ் [Zacharias Mar Athanasios] என்பவர் தான் இவரை, ஆசிரமம் துவங்க அழைத்தாராம். இதற்குள், பேட் கிரிபித்ஸ் அங்கு வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் சேர்ந்து டிசம்பர்.1 1956 அன்று கிறிஸ்திய சந்நியாச சமாஜ, குரிசமல ஆசிரமத்திற்கு, திருவல்லாவில் உள்ள சைரோ மலங்காரா கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அடிக்கல் நாட்டினர். மார்ச்.20, 1988 அன்று 88 ஏக்கர் நிலத்தை வாங்கினர். ஆகஸ்ட்.6, 1958 அன்று இந்திய பிரஜை உரிமை பெற்றார். இருபது ஆண்டுகள் பேட் கிரிபித்ஸ் அங்கு வேலை செய்த பிறகு, 1978ல் சச்சிதானந்த ஆசிரமித்திற்கு வருகிறார்.

Caridnal_Lourdusamy

Caridnal_Lourdusamy

துரைசாமி சைமன் லூர்துசாமி (Duraisamy Simon Lourdusamy 1924-2014): வாடிகன் கவுன்சில் திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றுவதில் முக்கியப்பக்கு வகித்தவர். நவம்பர் 1964ல் நடந்த வாடிகன் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்டவர். தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் (NBCLC) நிறுவி அதன் தலைவராக இருந்தார். அமலோர்பவ தாஸ் இவரின் தம்பி. கத்தோலிக்க பிஷப் மாநாட்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு, உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி பல திட்டங்களை வகுத்தார். போப் ஜான் பால் II கூட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் விஜயத்தின் போது கூட இருந்தார்.

அசைவ ஏசுவும், சைவ கிறிஸ்துவும்: பிண்ட, அண்ட, பேரண்ட விளக்கங்களைக் கொடுக்க முயன்ற (Cosmic Christ, Son of God, Son of Man) கிருத்துவ இறையியல் அறிவுஜீவிகள், குறிப்பாக பேட் கிரிபித்ஸ்[7], இந்துக்களுக்கு ஒரு சாத்துவீகமான ஏசுகிறிஸ்துவை சித்தரித்துக் காட்ட முயன்றனர். சரித்திர ரீதியில் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசு கிறிஸ்து இல்லை என்றாலும், அந்த கட்டுக்கதை பாத்திரத்தை, பலவாறு –

  1. யோகி, யோகேஸ்வரன்,
  2. பாம்பு படுகையின் கீழே உட்கார்ந்திருப்பது,
  3. நடராஜரைப் போல ஆடும் தோற்றம்,
  4. பிரம்மனைப் போறு நான்கு தலைகளுடன் இருப்பது,
  5. விஷ்ணுவைப் போல நான்கு கைகளுடன் இருப்பது

என்று இந்துக்களுக்குச் சித்தரித்துக் காட்டினர். ஆனால், சடங்குகள், கிரியைகள் மற்றும் பண்டிகைகளை விளக்கும் போது, உண்மையினை சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போய், வெலவெலத்து விட்டனர் என்றே சொல்லலாம். குறிப்பாக யுகாரிஸ்ட் (Eucharist) என்பது பலி, திருப்பலி, பலிப்பூசை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சடங்கினை விவரிக்கத் தயங்குகின்றனர். தமிழ் விகிபீடியா சொதப்பலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளது[8]. “திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும், இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு”, என்றதை ஒப்புக்கொண்டு, “லூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப்பலி” (sacrifice) என்று கருதுவதைவிடதிருவிருந்து” (communion) என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன”, என்று சொல்கிறது. அதாவது அவை ஏன் கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக இருக்கின்றன என்பதனை விளக்கவில்லை. மேலும், அத்தகைய நம்பிக்கையே பைபிளுக்கு எதிரான விளக்கம் ஆகும்[9].

© வேதபிரகாஷ்

16-05-2015

[1] Father Jules Monchanin (who chose to call himself Swami Paramarubyananda), (April 10, 1895 in Fleurie, Rhône – October 10, 1957 in Paris) was a French Catholic priest, monk and hermit. He was an ardent proponent of Hindu-Christian interfaith dialogue. He is known for the being one of the “Trinity from Tannirpalli” along with Le Saux, and Griffiths who were the co-founders of Saccidananda Ashram (also called Shantivanam), an ashram founded in the village of Tannirpalli in Tamil Nadu in 1938. http://en.wikipedia.org/wiki/Jules_Monchanin

[2] http://themathesontrust.org/papers/comparativereligion/Hindu-Christian%20Encounter.pdf

[3]   In 1939, Fr. Jules Monchanin (1895-1957) arrived in India from France. From 1939-1949 he served as a parish priest in numerous parishes in the diocese of Trichy, Tamil Nadu. Henri le Saux arrived in Trichy in 1948 and in 1950 the two priests established Saccidananda Ashram. Monchanin remained at the Ashram until serious illness caused him to return to France in September 1957; he died one month later.

http://oblatesofshantivanam.yolasite.com/tributes-to-fr-jules-monchanin.php

[4] Catechetical = relating to religious instruction given in preparation for Christian baptism or confirmation.  “instruction by word of mouth”, relating to religious teaching by means of questions and answers.

[5] Liturgical = Liturgy (Greek: λειτουργία) is the customary public worship done by a specific religious group, according to its particular beliefs, customs and traditions.

[6] Letter of Fr T. J. Chako, Assistant Director, Pastoral Training Centre, P.B.No.10, Impal, Manipur. Apendix – VII, pp.246-255. J. F.  Victor, The Paganization of the Church in India, Madras.

[7] http://www.patheos.com/blogs/christpathseminar/2013/06/teachings-of-the-cosmic-christ-from-fr-bede-griffiths/

[8] http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)

[9] Then Jesus said unto them, Verily, verily, I say unto you, Except ye eat the flesh of the Son of man, and drink his blood, ye have no life in you. Whoso eateth my flesh, and drinketh my blood, hath eternal life; and I will raise him up at the last day. For my flesh is meat indeed, and my blood is drink indeed. (John 6:53-55)