Archive for the ‘பூமா’ Category

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

June 25, 2020

கிருஷ்ணாவா, கிறிஸ்துவா? என்பது கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா ஆகி, மதங்களுக்குள் உரையாடல் என்று முடிந்தது ஏன்? டிகேவி ராஜனின் கிருஷ்ணர் ஆராய்ச்சி ஏன் ஆரிய-திராவிடர்களையும் இதில் சேர்க்கிறது? [2]

TKV Rajan book on Kashmir released

தாமஸ் கட்டுக் கதையுடன் இணைப்பது: சி.பி.ஆர்.பவுண்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில், நந்திதா கிருஷ்ணா, டி.கே.வி.ராஜனை புகழ்ந்து பேசினார்[1]. அவர் நடத்திய கண்காட்சியைக் குறிப்பிட்டு[2], “பிருந்தாவனத்தில் பிரேம சரோவர் என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணராதாராணி படங்களும், ஏசுகிறிஸ்துவின் சித்திரங்களும் வைக்கப் பட்டு, இணைக்கப் படுகின்றன…..மேனாட்டவர் கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்து ஒப்பீடு செய்து, கிருஷ்ணருடைய போதனைகள் தாமஸிடமிருந்து பெறப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், இலக்கிய மற்றும் அகழ்வாய்வு ஆதாராங்கள் அவ்வாறில்லை என்று உறுதி செய்தது.” தாமஸ் கட்டுக் கதையை இணைப்பது வேறு, இந்தியாவில் கிறிஸ்து என்ற கட்டுக் கதை வேறு, ஆனால், இரண்டையும் வைத்துக் குழப்புவதைப் போன்றுள்ளது. இங்கு தாமஸை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை.

TKV Rajan Christ-Krishna DinaMani 20-09-2012

கிறிஸ்துகிருஷ்ணா கண்காட்சி, கிருத்துவஇந்து உரையாடலுக்கு வெள்ளோட்டமா?: லயோலா காலேஜில், ஃபாதர் ஜேம்ஸிடம் ஆதரவுடன், அன்புடன், “பைபிள் ஆராய்ச்சியைப்” பயின்றேன் என்று சொல்லிக் கொள்கிறார்! கிருஷ்ண பக்தராக இருக்கும் இவருக்கு, அவ்வாறு, பாதரிடம், பைபிள் பாடங்கள் கற்றுக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. இவராக கிருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொண்டாரா அல்லது அவர்கள் இவருக்கு வலை வீசினார்களா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். “கிறிஸ்து-கிருஷ்ணா,” கண்காட்சி போது -, Dr R. சேதுராமன் – Meenakshi Foundation founder etc, ஆர்காடு நவாப் -Nawab Mohammed Abdul Ali, Fr போனிஃபேஸ் ஜெயராஜ் SJ முதலியோரை வரவழைத்து, டி.கே.வி.ராஜன் விழா நடத்தினார். அப்பொழுது, லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ், “இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது,” என்று பிரகடனம் செய்தார். அக்டோபர் 23, 2016 அன்று விவேகானந்தர் அரங்க, வேதாந்த மையம், டெக்சாஸில் “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” என்று மதங்களுக்குள் இடையே உரையாடல் என்ற ரீதியில் பேசினார். ஆக, இங்கு, இவரது, கிருத்துவத் தொடர்புகளின் பின்னணி முழுமையாக வெளிப்பட்டது. அத்தகைய உரையாடலில் பங்குக் கொள்ளத்தான், சென்னையில், “கிறிஸ்துவும், கிருஷ்ணரும்,” கண்காட்சி நடத்தப் பட்டது. நவம்பர் 17, 2018 அன்று டெல்லாஸ், அமெரிக்காவில் உள்ள ராதா-கிருஷ்ண கோவிலில், “ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் மஹாபாரதம்” பற்றி சொற்பொழிவாற்றுகிறார்.

TKV rajan - Christ or Krishna, inter-faith presentation!

ஜான் பி. ஜோன்ஸ் போன்று ராஜன் தயாரிக்கப் பட்டாரா?: “கிருஷ்ணா-கிறிஸ்து” ஒப்பீடு, சி.எப்.சி.வோல்னி[3] கிறிஸ்து என்ற தத்துவம், கிருஷ்ண என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியவுடன், அதனை எதிர்க்க, இத்தகைய வேலைகள் ஆரம்பித்தன. இவை மூன்று நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. இதை கே.வி.ராமகிருஷ்ண ராவ்[4] என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஐரோப்பியக் கிருத்துவர்கள் இந்திய புராணங்களில் தான் கடல்கோள்கள், பூமி மூழ்கியது, மறுபடியும் படைப்பு மூலம் உயிரினங்கள் தோன்றியது பற்றிய விவரங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன என்பதை கண்டறிந்தனர். அதில் இருக்கும் காக்கும் கடவுளை – நாராயணனை அவர்கள், கிரிஸ்ட்ன, கிருஸ்ன, கிருஷ்ண, …..என்றெல்லாம் எழுதினார்கள்[5]. முன்னர் சி.எப்.சி.வோல்னி முதல் ஜெ.எம்.ராபர்ட்சன்[6] வரை கிறிஸ்து தத்துவம் கிருஷ்ண என்பதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். இதனால், காலனிய ஆதிக்கக் காலத்தில், தம்முடைய ஏசுகிறிஸ்து உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள “கிறிஸ்துவா-கிருஷ்ணரா” என்று ஒப்பீட்டு கதைகளைப் புனைய ஆரம்பித்தனர். ஜான் பி. ஜோன்ஸ்[7] என்பவன், அத்தகைய தாக்குதலை ஆரம்பித்து, அன்டோவர், ஹேல், ஹார்வார்ட், வெஸ்டர்ன் ரிசர்வ் மற்ற பல்கலைக்கழகங்களின் செமினரிகளில் உரையாற்றினான். பிறகு 1902ல் “இந்துக்களுக்குப் பிரச்சினை கிருஷ்ணரா, கிறிஸ்துவா?” என்ற புத்தகத்தையும் வெளியிட்டான். இந்த ராஜன் விசயத்திலும், முன்னர் கிருஷ்ணரைப் போற்றி ஆரம்பித்து, பிறகு “கிறிஸ்து-கிருஷ்ணர்” என்று ஒப்பிட்டு கண்காட்சிகள் நடத்தி, இறகு முடிவாக, மதங்களுக்கு இடையில் உரையாடல் என்று முடித்துள்ளார்.

TKV Rajan batting for Jesus Christ.USA meeting

ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி முதலியவை: டி.கே.சி. ராஜனின் இந்த வீடியோ பேச்சு, “மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்” திகைப்பாக இருக்கிறது[8]. துவாரகா, கிருஷ்ணா, மஹாபாரதம் என்ற்ய் ஆரம்பித்து, “……..தேர்களையும் குதிரைகளையும் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்…. அதற்கு முன்பாக இருந்தவர்களுக்கு குதிரைகளை ஓட்டத் தெரியாது..குதிரைகளே அக்காலத்தில் இல்லை..சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது….என்று ஐராவதம் மகாதேவன்…..ஆஸ்கோ பார்போலோ….அதற்கான strong evidences இருக்கு… archaeological- இருக்கு…..இல்லை அது வந்து வடமொழி சம்பந்தமா ……Sanskrit oriented அல்லது Aryan orented என்று எஸ்.ஆர்.ராவ் ….சொல்கிறார்கள்…. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது திராவிடர்களுடையதாகத்தான் தெரிகிறது….3000 சீல்ஸ் இருக்குங்க.. இப்போ எல்லாமே internetல் available. அந்த ஒவ்வொரு சீலிலும்  pictogram இருக்கும்.அத கண்டுபிடிச்சா….அந்த pictographல் என்ன இருக்கு என்று தான் இப்பொழுது  task……ஆகவே, இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர வேண்டும்..தொடரப் போகிறதுதமிழனின் தொன்மையும், நாகரிகமும் எங்கும் பறைச் சாற்றும் கீழடி போல இந்த சினோலி extend excavation  செய்ய வேண்டும்…,” என்று முடிப்பது வேடிக்கையாக இருக்கிறது[9]. இன்றைய நிலையில், சரித்திராசிரியர்கள் யாரும் ஆரிய-திராவிட இனவாதங்களைக் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட்டனர். ஆனால், இவர் அதை இன்னும் பிடித்துக் கொண்டு “ஆரியர்கள், திராவிடர்கள், குதிரைகள், சிந்து சமவெளி திராவிடர் நாகரிகம், கீழடி,” என்று பேசியுள்ளது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

TKV Rajan, project

முடிவுரைஇந்துக்களுக்கு எச்சரிக்கை: இந்தியா செக்யூலரிஸ நாடானதால், யார் வேண்டுமானாலும், எந்த மதத்தையும் தழுவலாம், ஆனால், எல்லா மதங்களுக்கும், மத-நம்பிக்கையாளர்களுக்கும் சம-உரிமைகள் இருக்கின்றன. எனவே, யாரும் என் மதம் தான் உயர்ந்தது, எங்கள் மதப்புத்தகம் தான் சிறந்தது, எங்கள் கடவுள்-பெண் தெய்வம் தான் உண்மையான கடவுள்-தெய்வம், மற்றவை எல்லாம் போலி, எங்களுடைய மதங்களிலிருந்து தான் உருவானது என்றெல்லாம், புனைந்து பேச-எழுத உரிமையில்லை. ஆனால், நாத்திகர்கள்-இந்துவிரோதிகள் ஒரு பக்கம் கடவுள்-தெய்வம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வரும் அதே நேரத்தில், கிருத்துவகளும், முகமதியரும், மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களை, இந்துமதத்தைத் தாக்குவது, தூஷிப்பது, ஊடகங்களிலேயே வெளிப்படையாக, இத்தகைய கருத்துகளை சொல்வது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் செய்து வருகின்றனர்.

Christ and Krishna - books produced

1.       கிருஷ்ணரைப் பற்றி அல்லது ராமரைப் பற்றி யார்வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம், உரிமைகள் இருக்கின்றன என்று நம்பலாம்!

 

2.       எஸ்.ஆர்.ராவ் (1922-2013) முதன் முதலில் 1980களில் கடலடி அகழ்வாழ்வு மூலம், கடல் கொண்ட துவாரகையைக் கண்டு பிடித்தார்.

 

3.       மஹாபாரத யுத்தத்தில் அணு ஆயுதம் போன்றவை உபயோகப் படுத்தி இருக்கலாம் என்று முதலில் எடுத்துக் காட்டியது பி.என்.ஓக் (1917-2007).

 

4.       எனவே, அந்நிலையில், இப்பொழுது ஆராய்ச்சி செய்தால், இவர்களது ஆராய்ச்சிகளைக் குறிப்பிடாமல் செய்ய முடியாது.

 

5.       அதனால், கிருஷ்ணரைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று ஏற்கெனவே உள்ளதை எல்லாம் குறிப்பிட்டு, ஏதோ புதியதாகக் கண்டு பிடித்தது போல சொல்லிக் கொள்வது எப்படி என்று தெரியவில்லை!

 

6.       கிருஷ்ணர் என்ற சாக்கில், கிறிஸ்துவையும் சேர்ப்பது, இருவர்களுக்கும் அகழ்வாய்வு ஆதாரங்கள் உள்ளன என்று போதிப்பது சரியில்லை.

 

7.       டி.கே.வி.ராஜன் என்பவர் 1990களில் கிருஷ்ண ஜயந்தி சமயத்தில், தனது வீட்டில் கண்காட்சி என்று வைத்து விளம்பரம் கொடுப்பது வழக்கம்!

 

8.      ஆனால், இப்பொழுது “கிறுஸ்துவும், கிருஷ்ணாவும்” என்றெல்லாம் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்து இருப்பது அவர் கிருத்துவர்களில் திட்டத்திற்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது!

9.       போதாகுறைக்கு, ஜேம்ஸ் பாதிரியிடன் பயிற்சி பெற்றேன், ஜெயராஜிடம் பாராட்டுப் பெற்றேன், “பைபிள் அகழ்வாய்வு”லிருந்து, அறியப் படவேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பேசி வருவது திகைப்பாக இருக்கிறது.

 

10.   கிருஷ்ணரின் பெயரால், இத்தகைய சொற்பொழிவுகள், யூ-டியூப், செய்தி விளம்பரங்கள் என்று பிரச்சாரம் நடப்பது உள்-நோக்கம் கொண்டவை என்று தெரிகிறது

 

© வேதபிரகாஷ்

22-06-2020

Christ, Jesus, myth

[1] Dr. Nanditha Krishna of the C.P.R Foundation was all praise for this when it was exhibited at Chennai some years ago. The exhibition also includes a number of images of sites connected with Lord Jesus Christ alongside pictures of places like the Prema Sarovara in Vrindavan where Lord Krishna met Radharani. Nanditha Krishna was commenting upon the work of Rajan.

Vedakrishna.com, Krishna Archeology, Nanditha Krishna, nankrishna@vsnl.com;

[2] Western scholars tried to establish a connection between Krishna and Christ, claiming that the former was derived from St Thomas’ teachings about the latter, but literature and archaeology have proved otherwise.  http://veda.krishna.com/encyclopedia/krishna-archeology.htm

[3]C. F. C. Volney, , The Ruins, or Meditation on the Revolutions of Empires and the Law of Nature, Truth Seeker Co., New York, 1890.

[4] K.V.Ramakrisha Rao, A Critical analysis of “Christian-Vaishnavite Comparative Studies” in the context of “Inter-faith / religious dialogue” and “Inculturation”, it was supposed to appear in a book proposed by Sandhya Jain and others. For some reasons, it is yet to see the light.

[5] Christna, Chrishna, Cristna, Crishna are the words and expressions found recorded in the literature denoting to “Krishna”, the Hindu protecting and Saviour God. “In India, the Christian mind was terribly upset by the Puranic narratives of Flood, the Fish God saviour of the humanity, Narayana – the protecting and Saviour God, Christna, Chrishna or Krishna[5] and other related concepts”.

[6]J. M. Robertson, Hindu Mythology and Christianity, Swati Publications, New Delhi, 1989.

[7] John  P. Jones, India’s Problem: Krishna or Christ, Fleming H. Revell Company, London and Edinburgh, 1903.

[8] TKV Rajan, மஹாபாரத போர் ரகசியங்களை தோண்டிய எடுத்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர், Indian Space Monitor

[9] https://www.youtube.com/watch?v=PQmP36ydCy8

Christ and Krishna - Rosen, 2011

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)  

May 12, 2018

ஶ்ரீரங்கம், திருமலை கோவில்களில் நுழைந்த ஜெசுவைட் பிரான்சிஸ் சேவியர் குளூனி  – விவகாரம் மறந்த முட்டாள் இந்துக்கள், இந்துத்துவ மூடர்கள் (2)

Clooney, invited Vasudhat at Harvard

குளூனிவின் வைஷ்ணவ ஆராய்ச்சிற்கு உதவியவர்: இவருக்கு உதவி செய்துள்ள சமஸ்கிருத, வைஷ்ணவ மற்றும் இதர பண்டிதர்கள்: குளூனி தனது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் கீழ்கண்டவர்கள் தமக்கு உதவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  1. ஶ்ரீ ராமமூர்த்தி சாஸ்திரி, முந்தைய சமஸ்கிருத கல்லூரி முதல்வர், மைலாப்பூர்.
  2. ஶ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார்.
  3. ஶ்ரீ எம்.ஏ. வேங்கிடகிருஷ்ணன், வைஷ்ணவ ஆராய்ச்சித் துறை, சென்னை பல்கலைக்கழகம்.
  4. ஶ்ரீமதி பூமா. வேங்கிடகிருஷ்ணன்
  5. ஶ்ரீ. அனந்தகிருஷ்ணன்,
  6. ஶ்ரீ மோஹனரங்கன்.

இதைத்தவிர திருமலையில் உதவிய புரபசர், திருச்செந்தூருக்கு செல்ல உதவியவர், சென்னையில் கச்சேரி, நாடகம், சினிமா முதலியவற்றிற்கு அழைத்துச் சென்ற / உதவிய / கூட வந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அமெரிக்காவில் பரஸ்பரமாக, இந்து மற்றும் இந்தியமூலங்கள் கொண்ட புரபசர்கள், பிரபலமானவர்கள் மற்ற முக்க்கியஸ்தர்கள் உதவி வருகிறார்கள். உதாரணமாக, வசுதா நாராயணன் என்பவர், குளுனிக்கு உதவியிருக்கிறார். அதனால் தான் அவர்களது மைலாபூர் உறவினர்கள் அவருக்கு உதவியுள்ளது தெரிகிறது. இங்கு குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் எல்லோருமே பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், ஆனால், “உள்-கலாச்சாரமயமாக்கல்” மற்றும் “உரையாடல்” என்று வரும் போது, முடிவுகள், இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் தான், கவனிக்க வேண்டியிருக்கிறது.  மேலும், குளூனி பதிவு செய்தது போல, இவர்கள் பதிவு செய்யாதது, திகைப்பாக இருக்கிறது.

M.A. Venkatakrishna and Smt Bhooma Venkatakrishnan

தமிழகத்தைச் சுற்றி வந்து நுணுக்கங்களை அறிந்த குளூனி: வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்ற முகாந்திரத்தில் உலா வந்து மைலாப்பூர் பக்கம் சுற்றி வந்தார். திருவாழ்மொழி படிக்கிறேன் என்று விளம்பரம் செய்து கொண்டார். இவரை ஆதரிக்கிறேன் மற்றும் எதிர்க்கிறேன் என்ற ரீதியில் சிலர் வேலை செய்த போது, அவர் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசயங்களை சேகரித்துக் கொண்டு சென்றார். சென்னை, ஶ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு வந்தால், அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு உபசாரம் செய்தவர்களில் பலர் உள்ளனர். பிரான்சிஸ் சேவியர் குளூனியை பல மடாலயங்கள், கோவில்களுக்குள் அழைத்து சென்றுள்ளனர், ஆனால், குளுனி புத்தகங்களை எழுதியது இந்துமதத்தை எதிர்த்து தான். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

Vasudha speaks in India

  1. ஶ்ரீவைஷ்ணவ “சில்லறை விசயங்கள்” எல்லாம், குளுனிக்கு புரிந்து புத்தகங்கள் எழுதும் அளவுக்கு, நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தது யார்?
  2. “மதங்கங்களுக்குள் உரையாடல்” போர்வையில், ஶ்ரீவேதாந்த தேசிகரையும், கத்தோலிக்க சேவியரையும் ஒப்பிட்டு ஏழுதியபோது, பாராட்டுத் தெரிவித்தது ஏன்?
  3. மேரியை, ஶ்ரீ மற்றும் லக்ஷ்மியுடன் ஒப்பிட்டு, “தெய்வீக மாதா, ஆசிர்வதிக்கப் பட்ட மாதா” என்று குளூனி புத்தகம் எழுதியது எவ்வாறு?
  4. “ஹார்வார்ட் தமிழ் நாற்காலி” என்றால் குதிக்கும் இந்துத்துவவாதிகள், இத்தகைய ஹார்வார்ட் புரவசர்களை ஆதரிப்பது ஏன்?
  5. புரவசர் வசுதா நாராயணன் இங்கே வந்தால், கதா-காலக்ஷேபம் செய்கிறார், அங்கோ, குளுனிக்கு “பேச” ஏற்பாடு செய்கிறார்!
  6. ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கிருஷ்ணமாச்சாரி என்பவர், ஶ்ரீரங்கத்தில் நடப்பதையெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார், கோர்ட்டுக்கு போகிறார்!
  7. “மதங்கங்களுக்குள் உரையடல்” இந்துத்துவவாதிகள் என்றாவது நடத்தியுள்ளனரா? பிறகு, ஒருவழியாக அவர்களை அனுமதிப்பது / புலம்புவது ஏன்?

Fr Clooney SJ - Vidyajoti- lecture -2011

2011லேயும் குளூனி சென்னை கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்றிருக்கிறார்[1]: சத்யஜோதி என்ற கிருத்துவ கல்லூரியில், ஜூலை 27, 2011 அன்று பைபிள் மற்றும் திருவாய்மொழி ஒப்பிட்டு சொற்பொழிவாற்றினார்[2]. “சத்யஜோதி” இரு ஜெசுவைட் கல்லூரி, அதனால் அங்கு வரவேற்க்கப்பட்டது, பேசியது எல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மற்ற மதங்களுடைய நூல்கள் எப்படி பைபிள் படிக்க உதவும் என்று அவர் எடுத்துக் காட்டியதிலும் வியப்பில்லை. ஆகஸ்ட் 2, 2011 அன்று எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியிலும், கிறிஸ்துவ-இந்து மதங்களை ஒப்பிட்டு பேசினார்[3]. இதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கெனவே, குளூனியின் புத்தங்கள் வெளிவந்த பிறகு, அவற்றின் சர்ச்சை ஏற்பட்ட பிறகு, அவர் எப்படி அங்கு வரவேற்க்கப் பட்டு பேசினார் என்பது வினோதம் தான். ஆகஸ்ட் 5, 2011 அன்று, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தத்துவ துறை சார்பாக சார்பில் நடந்த கருத்தரங்கத்திலும், மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து பேசினார்[4]. அதாவது, 1992-93 விஜயங்களின் போது, சென்னையில் இவரைத் தட்டிக் கேட்டதாலும், நேரில் வந்து கேள்விகள் கேட்டதாலும், இவையெல்லாம் விளம்பரம் இல்லாமல் நடத்தப் பட்டதாகத் தெரிகிறது அல்லது அந்த அளவிற்கு மற்றவகளுக்குத் தெரியும் வகையில் அறிவிக்கப்படவில்லை. மேலும் 2011ல் உடனடியாக, இதைப் பற்றி பதிவு செய்தேன். ஆதாரமாக, இணைதள லிங்குகள் முதலியவற்றைக் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது, அவையெல்லாம் மறைந்து விட்டன. “இந்து பிசினஸ் லைன்” மட்டும் இன்றளவில் உள்ளது. ஆகவே, இவ்விவகாரங்களை மறைப்பதிலும் ஈடுப்பட்டுள்ளது தெரிகிறது.

Clooney- gave Radhakrishna lecture -2011

இந்துக்கள், கிறிஸ்தவர் போல உரையாடல்களில் ஈடுபடுவதில்லை: இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துக்கள் யாரும் கிருத்துவர்களுடன் உரையாடல் நடத்தி, இந்துமதம் தான் தொன்மையானது, அதிலிருந்து தான் தத்துவம் முதலியவற்றை மற்ற மதங்கள் எடுத்தாண்டன என்றெல்லாம் எடுத்துக் காட்டுவதில்லை. ஜைனம் மற்றும் பௌத்தம், 2500 ஆண்டுகளுக்கு முன்னமே அத்தகைய உரையாடலில் ஈடுபட்டதும், இந்து மதத்தின் தொன்மையினைக் காட்டுகிறது. ஆகவே, கிருத்துவம், இவ்விசயத்தில் எந்த தொன்மையினையும் காட்ட முடியாது. காலக்கணகியலே, அதன் போலித்தனத்தை எடுத்துக் காட்டி விடுகிறது. அயல்நாடுகளுக்கு சென்றவர்கள், செல்கிறவர்கள், அந்தந்த நாடுகளின், நிறுவனங்களின், இயக்கங்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி ஆராய்ச்சி செய்து, பட்டங்களைப் பெற்று, வசதியாக இருந்து விடுகின்றனரே தவிர, சிலர் தான், பிரச்சினையை உணர்ந்து எதிர்க்கிறார்கள்[5].  இந்தியாவிற்கு வரும் போது அல்லது இணைதளங்களில், ஏதோ, இந்துக்களுக்கு போராடுவது, ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அங்கு, பணியிடங்களில் “சலாம்” போட்டு தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் பதவி போய்விடும், கீழே தள்ளப்படுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

NOP Vaishnava college, Clooney- resource person

இந்தியாவில் இருப்பவர்களுக்குஉரையாடல்நுணுக்கங்கள் தெரியாது, ஆவணப்படுத்துவதில்லை: இந்து கோணத்தில் “உரையாடல்” என்றால் என்ன, கிருத்துவம் அல்லது முகமதிய மதங்களுடன் “உரையாட” வேண்டிய அவசியம் என்ன, அவ்வாறு நிலை வந்தால், என்ன பேசுவது, விவாதிப்பது, நிலைநாட்டுவது, முடிவுக்கு வருவது மற்றும் இறுதியாக ஆவணப்படுத்துவது போன்ற விசயங்களை அறியாமல் இருக்கிறார்கள். ஒரு கிருத்துவன் அல்லது முகமதியன் கூட பேசினால், “உரையாடல்” ஆகாது. மேலும், ஆங்கிலத்தில் “என்கவுன்டர்” என்ற பிரயோகம் [encounter, எதிர்பாரா முறையில் பகைமையோடு எதிர்த்து நில்] செய்வது எதிர்மறையாக இருக்கிறது. ஆனால், “வாய்ஸ் ஆப் இந்தியா” போன்ற “இந்து-சார்பு” பதிப்பங்களே அத்தகைய பிரயோகங்களை செய்து வருகின்றது[6]. இந்தியாவில் இருப்பவர்களோ, ஏதோ கிருத்துவர்களுடன் பேசினாலே “உரையாடல்” ஏற்பட்டு விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால், ஆவணப்படுத்துவதில்லை. ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில்லை. எம்.டி. ஶ்ரீனிவாஸ் என்பவர், “சத்திய நிலையத்துடன்” நெருக்கமான தொடர்பு வைத்திருந்தாலும், தனது கட்டுரை பதிப்பாயிற்று என்ற நிலையில் அமைதியாக இருந்தார். அங்கு தங்கியிருந்த குளூனியிடம் என்ன பேசினார் என்று ஆவணப்படுத்தவில்லை. அதேபோல, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிக் கொண்டாலும் ஆவணப்படுத்தவதில்லை.

© வேதபிரகாஷ்

11-05-2018

Jesus trail in India, The Hindu 20-11-2007

[1] கீழ்கண்ட லிங்குகள் வேலை செய்யவில்லை / காணாமல் போய்விட்டது என்பதால், என்னுடைய பிளாக்கின் லிங்கைக் கொடுக்கிறேன்: https://vaticanculturation.wordpress.com/2011/08/12/95-the-christian-vaishnavite-dialogue-continues-clooneys-2011-visit-to-chennai/

[2] Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ  This was the topic of the special lecture given by Prof. Francis Xavier Clooney SJ at Vidyajyoti on July 27, 2011. He spoke of the importance of reading the texts of other religions while doing Christian theology.  Dr. Clooney illustrated his ideas by bringing together select texts from Song of Songs of the Bible and Tiruvaymoli of the Tamil bhakti tradition. The scholarly lecture was very enlightening and led to a lively discussion moderated by Fr. George Gispert-Sauch SJ, an eminent Indologist and emeritus Professor at Vidyajyoti.

http://www.americamagazine.org/blog/blog.cfm?blog_id=2&category_id=4A03E29A-3048-741E-7E0C76FB5CD0D40D

Hindu Texts for Christian Theology?—Prof. Francis Xavier Clooney SJ By Vidyajyoti College of Theology, August 3, 2011;  http://vidyajyoti.in/?p=1275

[3] Addressing a seminar on Dynamics of Religious Trajectories: Continuities and Changes, Traditions and Improvisations at the M O P Vaishnav College here, Clooney said traditions were not the things of the past, they could cha-nge the world. He said religion was not static and it kept changing as the modern world. “God is like a lover and tends to change. We can’t restrict him saying he belongs to me,” he said.

‘God Is like a lover, can’t restrict him’,  Express News Service, Last Updated : 03 Aug 2011 09:23:22 AM IST, http://expressbuzz.com/cities/chennai/god-is-like-a-lover-can%E2%80%99t-restrict-him/300447.html.

[4] Department of Philosophy organized Dr. Sarvepalli Radhakrishnan Endowment Lectures on 5th August 2011. Prof. Francis X. Clooney, Parkman Professor of Divinity and Director of the Center for the Study of World Religions, Harvard University, USA delivered two lectures on theme “Comparative Theology as 21st Century Christian Theology” and “The Drama of a God Who Comes and Goes: Reading the Biblical Song of Songs with the Srivaishnava Thiruvaymoli“. The Principal, Dr. R.W. Alexander Jesudasan presided over the function and the Bursar, Mr. C. Sundaraj and student and faculty of various departments were present on the occasion.

http://www.mcc.edu.in/index.php?option=com_k2&view=item&id=135:dr-sarvepalli-radhakrishnan-endowment-lectures&Itemid=530

[5] கியானால்ட் எல்ஸ்ட், வாமதேவ சாஸ்திரி, மைக்கேல் டேனினோ, ராஜிவ் மல்ஹோத்ரா, நரஹரி ஆச்சார், கோஸ்லா வேபா, போன்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அமெரிக்க / ஐரோப்பிய குடிமகன்கள் என்ற முறையில், இவர்களுக்கும், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

[6] Hindu-Christian Encounters, Voice of India, New Delhi.