Archive for the ‘ஸ்டீவ் பார்மர்’ Category

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்,  தொடரும் இந்துமத தூஷணங்கள்!

June 25, 2020

லாஸ் ஏஞ்சல்ஸ்: முதல் அமெரிக்க யோகா பல்கலைக்கழகம், வாடிகனின் யோகா பற்றிய இரட்டை வேடம்தொடரும் இந்துமத தூஷணங்கள்!

Vivekananda Yoga University, 25-06-2020

முதல் யோகா பல்கலை: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடக்கம்: கடந்த, 21ம் தேதி, உலகம் முழுதும், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே உலகின் முதல் யோகா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 23-06-2020 அன்று திறக்கப்பட்டுள்ளது[1]. விவேகானந்த யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பல்கலை.யில் முதுகலை பட்டப்படிப்புக்காக மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது[2]. . அந்த பல்கலையை, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்[3].  இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக்கழகமானது, உலகெங்கிலும் உள்ள பல முதன்மை பல்கலை.யுடன் கூட்டு ஆராய்ச்சி, திட்டங்களிலும் ஈடுபட உள்ளது[4]. யோகாவில் உயர்கல்வியில் பயில 200 அல்லது 500 மணி நேர சான்றிதழ் படிப்புகளும், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலும் இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இருக்கும். அமெரிக்கக் காரன் விவரமாகத்தான் இருக்கிறான். “அமெரிக்கன் பஜார்” என்ற நாளிதழில் செய்தி இப்படி உள்ளது. இதெல்லாம் சந்தோசமான விசயம் தான். ஆனால், அதே நேரத்தில், அமெரிக்க்கர்கள் யோகாவை ஏற்கெனவே வியாபாரமாக்கியுள்ளதை கவனிக்க வேண்டும். அமெரிக்கா மஞ்சளுக்கு பேட்டன் பெற்றது, ஏற்கெனவே யோகாவுக்கும் கேட்டுள்ளது, இனி அது அடைந்து விட்டால், இந்துக்கள் யோகா செய்ய காசு கொடுக்க வேண்டும் போல!

Bikram Choudhury filed a suit claiming patent 2012

லாஸ் ஏஞ்சல்ஸில் பிக்ரம் சௌத்ரி முதல் ஸ்டீவ் பார்மர் வரை: லாஸ் ஏஞ்சலஸ் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டதே, பிரமிப்பாக இருக்கிறது. ஏற்கெனவே, பிரபலமான இருவரின் யோகா கூடங்கள் – பிக்ரம் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டீவ் பார்பர் – அங்கு இருக்கின்றன. பிக்ரம் சௌதுரி (1944- ) 1971ல் லாஸ் ஏஞ்சலஸில் பிக்ரம் ஸ்டுடியோஸ்” என்ற பெயரில் யோகா பயிற்சி மையங்கள் ஆரம்பித்து, நன்றாக சம்பாதித்து, கொடிகட்டி பறந்தார். அமெரிக்கர் 26-யோகா பாவங்கள் / முறைகள் தம்முடையது என்று பேடென்ட் கேட்டு, வழக்கு போட்டார். பிறகு, அமெரிக்க அரசு, அவ்வாறெல்லாம் கோரமுடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது. 2017ல் 73, வயதில் அவரது மீது கற்பழிப்பு, வித்தியாசம் பார்த்தல் போன்ற புகார்களில் வழக்குகள் போடப் பட்டன. 1971ல் உயர்ந்த அவரது வியாபாரம் 2017ல் அப்படியே சரிந்தது. அதாவது அமெரிக்கர்கள் யோகாவை வியாபாரப் பொருளாக மதிக்கும் போது, பேட்டன்ட் எடுப்பதில் ஆச்சரியப் படுவதில் ஒன்றும் இல்லை. ஸ்டீவ் பார்மர் (Steve Farmer) என்ற ஒரு அமெரிக்கன், இப்பொழுதுமே இந்துமதத்தை விமர்சித்துக் கொண்டிருப்பான். யோகாவைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டிருப்பான். ஆனால், அவனது கம்பெனி யோகா சொல்லிக் கொடுக்கிறான். அதுமட்டுமல்ல, யோகா ஆசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கும் “ஆவ்லான்” என்ற யோகா பயிற்சி கூடத்தை, அதே லாஸ் ஏஞ்சலிஸில் நடத்தி வருகிறான். இரா.மதிவாணனை போர்ஜரி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான். இப்படி

Steve Farmer always criticizing Yoga-master of many subjects

வாடிகனும், யோகாவும், இரட்டை வேடமும்: வாடிகனைப் பொறுத்த வரையில் ஆட்டுக்கு நாடு, சர்சுக்கு சர்ச் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆணைகளையிட்டு சாதித்துக் கொள்ளும். 1950களிலேயே காவி வேடத்தில் கிருத்துவ எஸ்.ஜே.க்கள் உலா வந்து, ஆசிரமங்களை ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் ஏசியன் பிஷப் கான்பரன்ஸ் மற்றும் கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா முதலியவற்றில் விவாதித்து தீர்மானித்து தான். 1989ல் சொதப்பலான விளக்க கொடுத்தது[5].  ஆவணத்தில், “கிழக்கத்தைய மத பழக்க-வழக்கங்கள்,” என்று குறிப்பிட்டு, அடிக்குறிப்பில், ஜென், டி..எம், யோக என்று குறிப்பிடுகின்றது[6]. கிருத்துவ ஒத்து-ஊதும் பாதிரிகள் ஆதரவு எழுத்தாளர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. விளக்கம் கொடுத்து, இந்துமதத்தை தூஷிப்பதே வேலையாகக் கொண்டு, முடித்து விடுவர்[8].

Vatican exorcist says Yoga is Satanic 2011

Vatican exorcist says Yoga is Satanic 2011

நவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[9]. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய தீரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[10]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே? ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா? அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா? இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்!

Pope compares transgenders and nuclear weapons, priest links yoga and Satan 2015, 2019

அலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[11]. ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[12]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனிதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல.

Yoga leads to Satan, Satanism Catican

ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[13]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[14]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[15]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.

Yoga leads to Satan, says Northern Ireland priest

யோகா என்பது சாத்தானின் திட்டம், அதை கிருத்துவர்கள் செய்யலாகாது: அது பேயோட்டுதலை விட மோசமானது. அது ஒரு சாத்தானின் ஆன்மீக செயல்பாடாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர். சாத்தான் யோகா செய்வது போல சித்தரித்து நக்கல் அடித்தனர். யோகா செய்யும் போது, ஓம் என்று சேர்ந்து மந்திரங்கள் சொல்ல வேண்டும், தியானம் செய்ய வேண்டும். இதெல்லாம், கிருத்துவத்திற்கு எதிரானது. அமெரிக்க-ஐரோப்பிய நாளிதழ்கள், சஞ்சிகைகள், கிருத்துவ வெளியீடுகள் முதலியவற்றில், யோக முத்திரைகள் எல்லாம் சாத்தானின் அடையாளங்கள், சின்னங்கள், 666 என்றெல்லாம் வர்ணித்தனர். படங்கள் போட்டு, யு-டியூப் போன்றவற்றிலும் அதிரடி வெறுப்பு-பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில், காவியுடைக் கட்டிக் கொண்டு, கத்தோலிக்க ஆசிரமங்கள், புரொடெஸ்டென்ட் சாமியார்கள் வலம் வந்து கொண்டிருந்தனர். தங்களை, “ஐயர்” என்று சொல்லிக் கொண்டு, கிராம, அப்பாவி மக்களை ஏமாற்றினர். கிருத்துவ யோகம் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டனர். இதில் கிருத்துவர்களின் இரட்டை வேடம் தான் வெளிப்பட்டது.

© வேதபிரகாஷ்

25-06-2020

Yoga attacked by Vatican

[1] தமிழ்.இந்து, முதல் யோகா பல்கலை. , Published : 17 Feb 2020 07:38 AM, Last Updated : 17 Feb 2020 07:40 AM

[2] https://www.hindutamil.in/news/vetrikodi/news/539930-yoga-university.html

[3] தினமலர், முதல் யோகா பல்கலைக்கழகம், Added : ஜூன் 25, 2020 12:09

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2564446

[5] Vatican document, CONGREGATION FOR THE DOCTRINE OF THE FAITH- LETTER TO THE BISHOPS OF THE CATHOLIC CHURCH ON SOME ASPECTS OF CHRISTIAN MEDITATION, Joseph Card. Ratzinger, Prefect and Alberto Bovonel Titular Archbishop of Caesarea in Numidia, Secretary,

October 15, 1989.

[6] The expression “eastern methods” is used to refer to methods which are inspired by Hinduism and Buddhism, such as “Zen,” “Transcendental Meditation” or “Yoga.” Thus it indicates methods of meditation of the non-Christian Far East which today are not infrequently adopted by some Christians also in their meditation. The orientation of the principles and methods contained in this present document is intended to serve as a reference point not just for this problem, but also, in a more general way, for the different forms of prayer practiced nowadays in ecclesial organizations, particularly in associations, movements and groups.

http://w2.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_19891015_meditazione-cristiana_en.html

[7] Saliba, John A. “Vatican response to the new religious movements.” Theological studies 53.1 (1992): 3-39.

[8] Stoeber, Michael. “Issues in Christian Encounters with Yoga: Exploring 3HO/Kundalini Yoga.” Journal of Hindu-Christian Studies 30.1 (2017): 3.

[9]  http://vaticaninsider.lastampa.it/en/inquiries-and-interviews/detail/articolo/diavolo-devil-diablo-amorth-yoga-10271/

[10] Father Gabriel Amorth has carried out more than 70,000 exorcisms in his capacity as Chief Exorcist at the Vatican. The 85-year-old can boast 25 years in the post after being appointed by the late Pope John Paul II. At a conference today, he surprised the delegates by revealing some of his greatest dislikes – yoga and Harry Potter. He added:’Yoga is the Devil’s work. You thing you are doing it for stretching your mind and body but it leads to Hinduism. All these oriental religions are based on the false belief of reincarnation.’

[11] http://www.nj.com/south/index.ssf/2015/03/pope_news_of_the_week.html

[12] http://sanfrancisco.cbslocal.com/2015/02/20/pope-francis-compares-transgender-people-to-nuclear-weapons-in-new-book/

[13] Father Roland Colhoun, from Glendermott parish in Derry, fears it could lead Christians to “The Kingdom of Darkness”. In an interview with the Derry Journal [JAMES DUNN, Saturday 21 February 2015], he said that, while people may decide to take up yoga with good intentions, they could set themselves on a path towards “the bad spiritual domain” and even “Satan and The Fallen Angels”.

[14] http://www.independent.co.uk/news/uk/home-news/yoga-leads-to-satan-says-northern-ireland-priest-10061463.html

[15] http://www.catholic.org/news/health/story.php?id=59107

Vatican instructions on TM, yoga etc, 1969