Posts Tagged ‘ட்விட்டர்’

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி ஆனது: கிருத்துவ ஊழியத்திலிருந்து சைவ தேவதை ஆகி, குருவின் மீது குற்றஞ்சாட்டிய சீடை!

November 30, 2019

சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, நித்திய சுதேவி ஆனது: கிருத்துவ ஊழியத்திலிருந்து சைவ தேவதை ஆகி, குருவின் மீது குற்றஞ்சாட்டிய சீடை!

Vikatan - publishes in bad taste 30-11-2019

தமிழக ஊடகங்கள் வீடியோ புகாரை வைத்துக் கொண்டு செய்திகளை வெளியிடுவது: நித்யானந்தா பற்றிய பதிவு இது அல்ல அதாவது நித்யானந்தா மற்றும் நித்யானந்தா ஆசிரமம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றியது அல்ல. ஆனால் இந்து மடாதிபதிகள், மடங்கள், ஆசிரமங்கள் முதலியவற்றை சின்னங்களாக அடையாளங்களாக குறியீடுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஊடகங்கள், குறிப்பாக தமிழக ஊடகங்கள் எவ்வாறு குறிப்பாகத் தாக்குகின்றன என்பதனை எடுத்துக் காட்டத்தான் இந்த பதிவு செய்யப்படுகிறது. கிருத்துவ-துலுக்க சிறுமியர்-சிறுவர் பாலியல் சதாய்ப்பு, கற்பழிப்புகள், செக்ஸ் விவகாரங்கள் தமிழகத்திலேயே ஆயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. ஆனால், நித்தியானந்தா தோரணையில் செய்திகளு, வீடியோக்களும் வெளியிடவில்லை. விவாதங்கள் நடத்தப்படவில்லை.

Sarah Stephanie Landry - tried projecting herself as goddess

வீடியோ புகாரின் மீது செய்திகளை வெளியிட்டு விவாதங்களை நடத்துவது: செக்யூலரிஸ நாடு எனும் போது, குற்றங்கள் யார் செய்தாலும் அது ஒரே மாதிரியாக பாவிக்கப்பட வேண்டும், ஊடகங்களும் அவ்வாறு செய்திகளை வெளியிட வேண்டும். ஆனால் நித்யானந்தா விஷயத்தில் அவ்வாறு செயல்படவில்லை. இப்பொழுது கூட ஒருவர் புகார் கொடுத்தார், சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, என்பவர் விடியோ மூலம் புகார் கொடுத்தார் என்ற வகையில்தான் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வில் ஹியூம் போன்றோர் சிறையில் அடைக்க பட்டுள்ளனர். ஆனால், நித்தியானந்தா போன்று தொடர்ந்து செய்திகளோ, குசுகுசுக்களோ, கிண்டல் செய்தி, நக்கல் வீடியோ போன்றவை எல்லாம் வந்ததில்லை. ஆனால், இப்பொழுது, அதே தோரணையில் செய்திகள், வீடியோக்கள் வெளிவர ஆரமித்து விட்டன. அதனால் யார் இந்த சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, என்று பார்த்தால், அவர் நித்திய சுதேவி என்ற பெயரில் இருந்த சீடை என்று தெரியவருகிறது. ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Sarah Stephanie Landry - accusing Bishop Ralph

சாரா ஸ்டீபனி லாண்ட்ரி வீடியோவில் குற்றஞ்சாட்டியது[1]: பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி (Sarah Stephanie Landry) என்ற இளம் பெண், தான் அங்கு தங்கியிருந்த போது நடந்த சம்பவங்கள் பற்றியும் நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவர் மீது புகார் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்[2]. கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார். பின்னர், நித்யானந்தா பற்றிய உண்மையை நேரில் பார்த்து அவர் போலி என அறிந்து மீண்டும் தன் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சாரா. அந்த வீடியோவில் பேசியுள்ள சாரா ஸ்டீபனி லாண்ட்ரி, “நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

Sarah Stephanie Landry - disciplie cpmplaing against guru, sittig on throne
திருவனந்தபுர ஆஸ்ரமத்தில் பார்த்ததுஆகஸ்ட் 2018[3]: கடந்த வருடம் 2018 ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுல ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் கணக்குகளை ஆரம்பித்து அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகத்தொடங்கினர். ஒரு நாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத்தொடங்கிவிட்டனர். அப்போது அவர்கள்தான் என்னிடம் “நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய்” என்று கூறினர், “ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம், கழிவறைக்குச் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தனர். அவர்கள் கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது[4].

Sarah Stephanie Landry became Nithya Sudevi sanyasini selling stones

நவம்பர் 2019ல் – ஒரு வருடம் கழித்து, வீடியோ புகார்[5]: பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மூத்த அதிகாரிகளான நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் திருவனந்தபுரம் ஆசிரமத்தை நடத்துபவர் ஆகியவர்களிடம் நான் பேசினேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் நித்யானந்தாவால் மூளை சலவை செய்யப்பட்டிருந்தேன். அவரின் உண்மையான முகம் தெரிந்த அடுத்த சில நாள்களில் நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அந்த குழந்தைகளைக் காப்பாற்றவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசிய 30 நிமிட வீடியோவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை நித்யானந்தா மீதும் அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் சுமத்தியுள்ளார் சாரா. `இரண்டு வருடங்கள் கழித்து சாரா குற்றம்சாட்டுவது என்பது மதத்தின் மீதான தாக்குதல். மேலும், நித்தியானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்திலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்’ என நித்தியானந்தாவின் இணையதளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை என நித்தியானந்தா, தனது யூடியூப் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்[6].

Sarah Stephanie Landry became Nithya Sudevi -ditched Guru

யார் இந்த சாரா ஸ்டீபைன் லான்ட்ரி, சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி (Sarah Stephanie Landry) ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா, சுதேவி?: இப்பெண்மணி ஒரு கிருத்துவர், முன்னர், பிஷப் ரால்ப் என்பவருடன் சேர்ந்து, “ஒரே கடவுள்” என்ற நிறுவனத்துடன் வேலை செய்து வந்தார். முதலில் சாரா ஸ்டீபைன் லான்ட்ரி “கிருத்து சிந்தனை: கடவுளில் ஒன்றாவது எப்படி” போன்ற புத்தகங்களை வெளியிட்டார். ஆனால், பிறகு பிஷப் ரால்ப் நபிரேஸ்கியுடன் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் அல்லது அத்தகைய நிலை உருவானது போல காட்டியதாகத் தெரிகிறது. அப்பொழுது, பிஷப் ரால்ப் நபிரேஸ்கி, “சாரா லான்ட்ரி பொய்யான தகவல் பரப்பி இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களிடையே பாதிக்கும் முறையில் குழப்பத்தையும், வெறுப்பையும் உண்டாக்கி வருகிறார். இந்துகிருத்துவ நட்பை ஆதரிக்கும் முறையில், இதனை நான் வெளியிடுகிறேன்”, என்று பிஷப் ரால்ப்  என்பவர் தனது தளத்தில் வெளியிட்டுள்ளார்[7]. பிஷப் ரால்ப் நபிரேஸ்கி விளக்குகிறார்[8], “நான் மூன்று ஆண்டுகளுக்கு எல்லாவற்றையும் கொடுத்தேன். இலவசமாக அறை, உணவு, இன்டெர்நெட், மின்சாரம், ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருட்கள்…………………நான் பணக்காரன் அல்ல, இருப்பினும் எல்லா எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தேன். உணவு சமைப்பது, துணிமணி துவைப்பது என்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேன்…… “கடவுளில் ஒன்றுநிறுவனத்திற்காக வேலை செய்வார் என்று நம்பினேன். சில நாட்கள் வேலை செய்தாள்.பிறகு, திடீரென்று காணாமல் போய் விட்டாள். என்கு போனாள் என்று தெரியவில்லை. …..ஆனால், இந்துக்களுக்கு எதிராகவும் செயல் படுகிறாள்…….  ”

© வேதபிரகாஷ்

30-11-2019

Sarah Stephanie Landry - tried to confuse Christians

[1] விகடன், `சிறுவர், சிறுமிகளை டார்ச்சர் செய்கிறார்கள்!’ – நித்யானந்தா மீது புகார் வாசித்த கனடா சிஷ்யை, சத்யா கோபாலன், Published:22 Sep 2019 11 AMUpdated:22 Sep 2019 11 AM.

[2] https://www.vikatan.com/news/india/nithyananda-brainwashed-me-says-sarah-stephanie-landry

[3] நக்கீரன், ‘குழந்தைகளை துன்புறுத்துகிறார்நித்யானந்தா மீது முன்னாள் சிஷ்யை புகார்!, Published on 24/09/2019 (10:42) | Edited on 24/09/2019 (10:52).

[4]https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nithyananda-brainwashed-me-says-sarah-stephanie-landry

[5]NEWS18, நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்! முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு, LAST UPDATED: SEPTEMBER 22, 2019, 9:45 PM IST

[6] https://tamil.news18.com/news/national/a-former-devotee-complaint-against-nithyananda-skd-208319.html

[7] Sarah Landry is spreading some false information and causing a lot of confusion and inflicting hate between hindus and christians. To defend the friendship between hindus and christians I puplish here this important information. Bishop Ralph Napierski. https://oig-movement.weebly.com/

[8] I provided  everything for her for almost 3 years! Free room to to live. Free food. Free internet. Free electricity, free health and bodycare products …… I am not rich but I gave everything I had ……Even cooking and doing the laundery was taken care of. Everything was provided to her for free, that she could build up the One In God Organisation. https://oig-movement.weebly.com/uploads/1/2/7/5/127507372/oigo-declaration.pdf