கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (1)!
பேட் கிரிபித்ஸ் [Bede Griffiths (1906-1993)] என்ற கிருத்துப் பாதிரி, இந்து சாமியார் போல காவியுடை அணிந்து கொண்டு, சச்சிதானந்த ஆசிரமம் என்று தண்ணிர்ப்பள்ளி கிராமத்தில் இருந்தார்[1]. இந்து கோவிலைப் போன்று கட்டி, அதனை சர்ச் போல உபயோகித்து வந்தார். காவி நிறத்தில் அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் குடிசைகளின் சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டது. அப்பொழுது சிலுவைக்குறியின் மீது ஓம் என்ற ஓங்காரத்தைப் பதித்து, அதுதான் ஏசு, அந்த பிரணவமான ஏசுதான் சிலுவையில் அறையப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் ஓம் / பிரணவம் சிலுவையில் அறையப்பட்டது போன்ற விக்கிரகத்தை கிருத்துவர்கள் இவ்விதமாக உபயோகப்படுத்துவது, அதற்கு திரிபு விளக்கம் கொடுப்பதை, இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர். இது 1985களில் பிரச்சினையைக் கிளப்பி, இந்தியன் எக்ஸ்பிரஸ் (சென்னை பதிப்பு) நாளிதழில் “ஆசிரியருக்கு கடிதம்” பகுதியில் பலவிசயங்களை வெளிக்கொணர்ந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, கிருத்துவர்களும் அதனை எதிர்த்தனர், அதாவது புரொடெஸ்டென்ட் கிருத்துவர்கள் பலமாக எதிர்த்தனர், ஆசார-அடிப்படைவாத கத்தோலிக்கக் கிருத்துவர்கள், எங்கு தங்கள் மதம் ஒருவேளை நாளடைவில் நீர்த்து, தேய்ந்து, மறைந்து போய் விடுமோ என்று பயந்து எதிர்த்தனர்[2].
1987ல் நடந்த முதல் உரையாடல்[3]: “இந்துயிஸம் டுடே” (Hinduism Today) என்ற பத்திரிக்கையில் “கத்தோலிக்க ஆசிரமங்களை” விமர்சித்து கடிதங்கள் வெளி வந்தன. இவையெல்லாமே அமெரிக்காவில் வாழ்ந்த இந்துக்கள் மற்றும் கத்தோலிக்க சாமியார்கள் ஆதரித்தும்-மறுத்தும் எழுதிய கடிதங்கள் ஆகும். அங்கு பணக்காரர்களாகிய இந்துக்களுக்கு, இதைப்பற்றிய தாக்கம் குறைவாகவே இருந்ததால், சிலர் கிறிஸ்த்துவ ஆசிரமங்களை ஆதரிக்கவும் செய்தனர். இதெல்லாம் சமரசத்தை வளர்க்கும், ஒருவர் மற்றொருவர் மதத்தினைப் புரிந்து கொள்ள முடியும் என்றெல்லாம் வாதிட்டனர். உண்மையில் அங்கு இந்து ஆசிரமங்கள் கூட “சர்ச்சுகள்” என்றுதான் அழைக்கப்பட்டன. மற்றவை மடங்கள் மற்றும் கோவில்கள் என்று அறியப்பட்டன. அமெரிக்கக் கிருத்துவர்களைப் பொறுத்த வரைக்கும், இந்துக்கள் “விக்கிர ஆராதனைக்காரர்கள்” (Idolators) என்று ஏளனமாகவே குறிப்பிடப்பட்டனர். இதை சமத்துவ, சர்வமதம் பேசும் அறிவுஜீவி இந்துக்கள் எதிர்க்கவில்லை. சுவாமி விவேகானந்தர் கொடுத்த வளத்தினைக் கொடுத்து மறுக்கவில்லை. மாறாக சமத்துவத்துடன், சமரசத்துடன், அமெரிக்காவில் தங்களது பிழைப்பு சுமுகமாக நடக்க வேண்டுமே என்று எண்ணத்தில், தங்களை அதற்கேற்ற முறையில் மாற்றிக் கொண்டு வாழ்ந்தனர்.
1987ல் நடந்த முதல் இரண்டாவது உரையாடல்[4]: இந்தியன் எக்ஸ்பிரசில் இப்பிரச்சினை விசயமாக பல உரையாடல்கள் நடந்தன. மார்ச்.18 1987 என்று பேட் கிரிபித்ஸ், இங்கிலாந்து இந்தியாவுக்குக் கொடுத்த கொடை என்று புகழ்ந்து, வேய்ன் ராபர்ட் டீஸ்டேல் [Wayne Robert Teadale (1945-2004)] சொன்னது வெளியானது. அவர் சச்சிதானந்த ஆசிரமத்தைப் புகழ்ந்து எழுதியதை “ஆர்.ஆர்” என்பவர் எழுட்தி பதிப்பித்தார். உடனே, மார்ச்.25, 1987 அன்று எல். ஸ்டீபன் (ஸ்தாபகர் மற்றும் நிர்வாகி, சச்சிதானந்த ஆசிரமம், குளித்தலை) என்பவரின் விளக்கம் வெளியானது. இருப்பினும் சிலுபவையின் மீது ஓங்காரத்தைப் போட்டதைக் கண்டித்து, சாமி குலந்தைசாமி என்பவர் எழுதிய கடிதம் மார்ச்.30, 1987 அன்று வெளியானது. ஏப்ரல்.10.1987 அன்று இக்னேசியஸ் அப்சலாம், பேட் கிரிபித்ஸை ஆதரித்து எழுதினார். ஜோஸப் புலிகல் என்பவர் ஏப்ரல்.21, 1987 அன்று இத்தகைய, இந்து-கிருத்துவ கலப்பு முறைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல என்று எடுத்துக் காடினார். வேய்ன் ராபர்ட் டீஸ்டேல் ஜூன்1. 1987 அன்று பேட் கிரிபித்ஸை ஆதரித்து எழுதினார். இதகு பதில் அளிக்கும் முறையில் ஜூன்.17, 1987 அன்று சாமி தேவானந்த சரஸ்வதி என்பவர்[5], ஒரு கடிதத்தை எழுதினார். பிறகு பேட் கிரிபித்ஸ் மற்றும் சாமி தேவானந்த சரஸ்வதி இருவரிடையே அக்டோபர் 1987 வரை கடித பரிமாற்றங்கள் ஏற்பட்டன. அடிப்படை கத்தோலிக்கர்கள் இதனை தீவிரமாகக் கண்டித்தனர். அத்தகைய விவரங்களை குலந்தைசாமி புத்தகத்தில் காணலாம்[6].
1989ல் நடந்த மூன்றவது உரையாடல்[7]: இது பிப்ரவரி 13, 1989ம் அன்று இந்தியன் எக்ஸ்பிரசில், கே. வி. ராமகிருஷ்ண ராவ் எழுதிய “சிலுவையில் அறையப்பட்ட ஓம்” என்ற தலைப்பில் வெளியான, கடிதத்தின் மீதான நீண்ட உரையாடல் தொடர்ந்தது. இது ஏப்ரல் 1989 வரை இந்தியன் எக்ஸ்பிரசில் மற்றும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்தது. இவ்வுரையாடல் மூலம், இப்பிரச்சினை உலகமயமாக்கப்பட்டது எனலாம். ஏனெனில் இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்கும், எழுதும் கிருத்துவ இறையியல் ஆசிரியர்கள் அதனைக் குறிப்பிட்டு எழுத ஆரம்பித்தார்கள்[8]. இதனை இந்துக்களின், கிருத்துவ மதத்திற்கு எதிரான போக்கு மாதிரி சித்தரிக்கப்பட்டது[9]. ஆனால், அவர்கள், அவ்வாறு இந்துமத சின்னங்கள், கருத்துகள், பண்டிகைகள், சுலோகங்கள் முதலியவற்றை தமது போல மாற்றிக் காட்டிக் கொள்தும், பிரச்சாரம் செய்வதும் சரியா என்பது பற்றி நாணயமாக விவாதிக்கவில்லை.
பேட் கிரிபித்ஸ் பிறகு பிரான்சிஸ் சேவியர் குளூனி: 1993 பேட் கிரிபித்ஸ் காலமானது[10] பிறகு, இப்பிரச்சினை அமைதியானது போல இருந்தது. அங்குள்ளவர்கள் இவரை சாமியாராகவே பாவித்தனர். 87 ஆண்டுகள் வாந்த பேட் கிரிபித்ஸ் [1906-1993 (17 December 1906 – 13 May 1993)] அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இதற்குள் பிரான்சிஸ் சேவியர் குளூனி என்பவர் தமிழகத்திற்கு வர ஆரம்பித்தார். இவரும் சொசைடி ஆப் ஜீசஸ் (Society of Jesus) என்ற இயக்கத்தின் சாமியார் ஆவர். இவர் பல வைஷ்ணவர்களுடன் தனது உரையாடலை வைத்துக் கொண்டார். ராமகிருஷ்ண ராவ் வாசித்த, “கிருத்துவர்களின் “உள்-கலாச்சாரமயமாக்கல்” முறைகள்: ராபர்டோ டி நொபிலி முதல் பிரான்சிஸ் குளூனி வரை” என்ற ஆய்வுக்கட்டுரை கிருத்துவர்களிடையே சலசலபை ஏற்படுத்தியது[11]. பிரான்சிஸ் சேவியர் குளூனிக்கு (Francis Xavier Clooney) அதிகமாகவே கோபம் வந்தது. “கிருஸ்டியன் அக்ரெஸன்.காம்” என்ற இணைதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டதை அவர் விரும்பவில்ல என்று பிறகு தெரிய வந்தது[12]. அவர் “பிரென்ட் லைனுக்கு”க் கொடுத்த பேட்டியில், அது கிருத்துவர்கள் மீதான தாக்குதல் என்ற முறையில் கருத்தை வெளியிட்டார். அப்பத்திரிக்கையும் அவ்வாறே பேட்டி மற்றும் கட்டுரைக்களை வெளியிட்டது[13].
வாடிகன் கவுன்சில் – II மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்: “உள்-கலாச்சாரமயமாக்கல்” (Inculturation) என்ற கொள்கையுன் படி, கத்தோலிக்கக் கிருத்துவர்கள், வாடிகன் கவுன்சில் – II (Vatican Council – II)க்குப் பிறகு அத்தகைய வேளைகளில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மதங்களுக்கிடையே உரையாடல் (Inter-faith / religious dialogue) என்றெல்லாம் சோதனைகளை செய்து வருகிறார்கள்[14]. உண்மையில் உரையாடல் என்றால், இருவர் இருக்க வேண்டும். கிருத்துவர் மற்றும் கிருத்துவர் அல்லாதவர், அதாவது, இந்துமதத்துடன் உரையாடல் வைத்துக் கொண்டால், ஒரு கிருத்துவர் மற்றும் ஒரு இந்து இருக்க வேண்டும். ஆனால், நடக்கும் உரையாடல்கள் பெரும்பாலும் ஒருதரப்புடையதாகத்தான் இருந்து வருகிறது. ஒரு கிருத்துவர் இந்துவிடம் வந்து பேசுவார், விவரங்களை கேட்டறிந்து கொள்வார், புத்தகங்கள் மற்ற குறிப்புகளையும் சேகரித்துக் கொள்வார். பிறகு, தான் ஏதோ அவருடன் உரையாடியது போலவும், முடிவில் அந்த இந்து கிருஸ்துவை ஏற்றுக் கொண்டார் அல்லது ஏற்றுக் கொள்ள தயாரக இருந்தார் அல்லது கிருஸ்துவை கடவுளாக மதிக்கிறார் என்று தனது கட்டுரை அல்லது சிறு-குறும்-புத்தகத்தில் முடித்து விடுவார். இன்னும் சொல்லப் போனால், அந்த இந்துவுக்கு, தான் அத்தகைய “உரையாடலில்” ஈடுபட்டார் என்பதே தெரியாது, ஏனெனில் அக்கிருத்துவர் அதனை சொல்வதில்லை. சீசன்பால்கு என்ற ஜெர்மானிய புரெடெஸ்டென்ட் மதப்பரப்பாளி அவ்வாறுதான் தான் இந்துக்களுடன் 300 மாநாடுகளில் விவாதித்தாக எழுதி வைத்தான்.
© வேதபிரகாஷ்
12-05-2015
[1] http://www.bedegriffiths.com/
[2] விக்டர் குலந்தை நடத்திய “தி லெயிதி” (The Laity, Catholic Journal) என்ற மாதப்பத்திரிக்கையில், அத்தகைய விவரங்களை விளக்கமாகக் காணலாம்.
[3] Sitaram Goel, Catholic Ashrams, Voice of India, New Delhi, 1987, and subsequent enlarged and revisded editions.
[4] Sita Ram Goel, Catholic Ashrams, (Letter published in Indian Express March 28, 1989), Voice of India, New Delhi, 1994, p.161. Also, see here: http://voiceofdharma.com/books/ca/ch14.htm
[5] சாமி தேவானந்த சரஸ்வதி, ஒரு கன்னட நாட்டவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு, திருமுல்லைவாயில் வைஷ்ணவி தேவி ஆலயத்தின் வளாகத்தில் உள்ள குடிலில் வாந்து வந்தார். இப்பொழுது திருவண்ணாமலையில் வாந்து வருகிறார்.
Canadian author Swami Devananda Saraswati is a Smarta Dashanani sannyasi who took his Vedic initiation from a renowned mahamandaleswar at Prayag in 1977. His purvasrama family were middle class professionals and God-fearing Protestant Christians. He did not complete high school and is self-educated through reading books on all subjects, with a special interest in religion and history. He has travelled extensively in Canada, USA, Europe, North Africa, West Asia and India. His experiences during these wandering years include service in a communist kibbutz during the Six Day War in Israel and some months spent in retreat in a Franciscan hermitage near Assisi, Italy. He has been living in India since 1967. https://in.linkedin.com/in/10008
[6] Swami Kulandaisami, (Victor J. F. Kulandai), The Paganization of the Church in India, “Galilee”, No.6, Nimmo Road, San Thome, Madras, 1988
[7] Sita Ram Goel, Catholic ashrams – Sanyasins or Swindlers, Voice of India, New Delhi, 1988.
[8] Paul M. Colins, Christian Inculturation in India: Liturgy, Worship and Society, Ashgate Publication Limited, London, 2007, p.155.
[9] Collins, Paul M. The Praxis of Inculturation for Mission: Roberto de Nobili’s Example and Legacy, Ecclesiology, Volume 3, Number 3, 2007 , pp. 323-342(20)
[10] http://www.bedegriffiths.com/bede-griffiths/
[11] “From De Nobili to Clooney: The Christian methods of Inculturation” at TNHC Mayiladthurai session, many mistook me as a Christian. The paper was presented during the 12th session of Tamilnadu History Congress Mayiladuthurai, Tamilnadu, on 30th October to 2nd October 2005.
[12] ஜி.பி.ஶ்ரீனிவாசன் என்பவர் அதனை ராமகிருஷ்ண ராவுக்குச் சொல்லாமல், அந்த இணைதளத்தில் போட வைத்தார். மேலும் தனது பெயரையும் கட்டுரை ஆசிரியர் என்று குறிப்பிட்டுக் கொண்டார். இருப்பினும், இதன் மூலமாகவும் “உரையாடல்” தொடர்ந்தது கிருத்துவர்களின் மனப்பாங்கினை அறிந்து கொள்ள உதவியது.
[13] http://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1132002640
One Nandagopal R. Menon under “Virtual Assaults” has discussed my paper in his own way in “Frontline” Volume 23 – Issue 03, Feb. 11 – 24, 2006, for more details, see here:
http://www.frontlineonnet.com/fl2303/stories/20060224002009600.htm
[14] Sitaram Goel, History of Hindu-Christian Encounters, Voice of India, New Delhi, 1989