கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (3)!
கரூரில் இன்னொரு “சாந்திவனம்‘ ஆசிரமம்: கரூரிலேயே இன்னொரு சாந்திவனம் இருப்பது வியப்பாக இருக்கிறது. “மனநலம் குன்றியோருக்கு தேவை ஆதரவே; அனுதாபம் அல்ல’ என்ற நோக்கில், கரூர் மாவட்டம் தோகமலை அருகே புழுதேரியில் மனநல காப்பகம் ஒன்று இயங்குகிறது[1] என்று தினமலர் இவ்விவரங்களைக் கொடுக்கிறது. கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, கரூர் வழியாக செல்கிறது. வடமாநிலங்களை சேர்ந்த பல வாகனம் கரூரை கடந்து செல்வதால், பல இடங்களை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், லாரியில் இங்கு இறக்கிவிடப் படுகின்றனர். லாரி டிரைவர்களுக்கு கணிசமான தொகை கிடைப்பதால், இந்த நிகழ்வு தொடர்கிறது. இதனால், கரூர் சாலைகளில் மனநிலை தவறியவர்களை காண்பது வாடிக்கையாவிட்டது. நெருங்கவே அச்சப்படும் வகையில் ஆக்ரோஷமாகவும், அருவருப்பாகவும் உள்ள இவர்களை மனிதாபிமானத்துடன் கவனிக்கும் பொறுப்பை, புழுதேரி “சாந்திவனம்’ அமைப்பினர் ஏற்றுள்ளனர். சாலையில் திரியும் மனநிலை பாதித்தவர்களுக்கு அடைக்கலம், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதுடன், பலரை அவர்களுடைய உறவினர்களிடமே சேர்க்கும் கடமையையும் சாந்திவனத்தினர் செய்கின்றனர்.
மக்களின் ஆதரவுடன் நடக்கும் சாந்தி ஆசிரமம்: “சாந்திவனம்’ அமைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது[2]: மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மறுவாழ்வு ஏற்படுத்த அமைப்பு துவங்கினோம். இந்நிலையில், ஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டோர் பாதிக்கப்பட்டது அறிந்து, காப்பகம் அமைக்க தீர்மானித்தேன். டாக்டர் கலையரசன் மற்றும் நண்பர்கள் உதவியுடன், தோகமலை அருகே புழுதேரியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் காப்பகம் அமைத்தோம். இதுவரை 200க்கு மேற்பட்டோர் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஐந்துக்கு மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளிக்க காப்பகம் வருகின்றனர். இதுமட்டுமல்லாது “சாந்திவனம்’ பரிந்துரைக்கும் நபருக்கு, திருச்சியில் உள்ள டாக்டர்கள் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கின்றனர். கரூரில் பொறுப்பில் இருந்த அனைத்து கலெக்டர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருந்து கிடைக்க உதவியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாந்திவனத்தில் இறந்த நோயாளி ஒருவருக்கு, ஜாதியின் பெயரால் தகனம் செய்ய இடமளிக்காமல் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், சாந்திவனம் அருகில் மயானத்துக்கு அரை ஏக்கர் நிலமும் அளிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் எந்த உதவியும் இல்லாமல், மக்கள் நன்கொடை மூலமாக சாந்திவனம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உதவி கோரி, சமூகநலத்துறை மத்திய இணை அமைச்சர் நெப்போலியனிடமும் கோரிக்கை அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட் கிரிபித்ஸின் சாந்திவனம் உருவானது: ஆலன் ரிச்சர்ட் கிரிபித்ஸ் [Alan Richard Griffiths] என்ற ஆங்கிலேயர் 1955ல் இந்தியாவிற்கு வந்து பெங்களூரில் கெங்கேரி என்ற இடத்தில் தங்கினார். அங்கு நடப்பவை எல்லாம் அதிகமாக மேற்கத்தைய பாணியில் இருப்பதாக கேரளாவுக்குச் சென்று, அங்கு பிரான்சிஸ் ஆச்சார்யா என்ற பெல்ஜிய நாட்டுப் பாதிரியுடன் சேர்ந்து, கிறிஸ்திய சந்நியாச சமாஜ், குரிசமல ஆசிரமம் ஆரம்பித்தார். இது சிரிய சடங்குகளைக் கொண்ட சிரிய-மலங்காரா கத்தோலிக்க சர்ச்சைச் சேர்ந்ததாகும். அப்பொழுதுதான் காவியுடை அணிந்து கொண்டு, தயானந்த என்று கிறிஸ்தவ சாமியாராக மாறினாராம். இவர் கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் அமைப்பில் உள்-கலாச்சாரமயமாக்கல் மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் வேலைகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். 1968ல், இந்த சச்சிதானந்த ஆசிரமத்திற்கு வந்தார். இது பிரெஞ்சு பெனிடிக்டைன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாதிரி டாம் ஹென்றி லெ சாக்ஸ் [the French Benedictine monk Abhishiktananda, Dom Henri Le Saux, OSB (1910-1973)] மற்றும் இன்னொரு பிரெஞ்சுக்காரரான ஜூல்ஸ் மோன்சானின் [Jules Monchanin (1895-1957)] என்பவருடன் சேர்ந்து 1950ல் இதனைத் தொடங்கினார். டாம் ஹென்றி லெ சாக்ஸ் மற்றும் ஜூல்ஸ் மோன்சானின் முறையே அபிஷேகானந்த மற்றும் பரம அருப்யனந்த என்று தம்மை அழைத்துக் கொண்டனர். ஜூல்ஸ் மோன்சானின் / அபிஷேகானந்த இதனை 1938ல் ஆரம்பித்தார் என்று விகிபிடியா இன்னொரு இடத்தில் குறிபொபிடுகின்றது. வெயின் ராபர்ட் டீஸ்டேல் [Wayn Robert Teasdale] பேட் கிரிபித்ஸின் நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். 1957ல் மோன்சானின் இறந்ததும், லெ சாக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிருத்துவயியலைக் கற்றுத் தேர்ந்த தயானந்த இந்து-கிருத்துவ உரையாடல்களைப் பற்றி 12 புத்தகங்களை எழுதித் தள்ளினார். அதனால், சாமி தயானந்த என்றழைக்கப் பட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை மாற்றிக் கொண்ட ஆங்கிலேயர்: சுதந்திரத்திற்கு முன்பு, ஆங்கிலிகென் சர்ச் ஆப் இந்தியா [Anglican Church of India (ACI)] சுதந்திரமாக செயல்பட்டு வந்தன. சுதந்திற்குப் பின்பு, ஆங்கிலேயர்க் கிருத்துவர்கள், மதம் மாறிய இந்தியக் கிருத்துவர்களுடன் “யுகாரிஸ்ட்” என்ற மாமிசம் சாப்பிடுவது மற்றும் மது குடிப்பது போன்ற பலி-சடங்குகளில் பங்கு கொள்ள, பாரம்பரிய ஆங்கிலிகன் கிருத்துவர்கள் அதனை விரும்பவில்லை. பலியில் உபயோகப்படுத்தப் படும் அப்பம் மற்றும் வைன்/மது முதலில் தலைமை பூஜாரி எச்சில் சேய்து மற்றவர்களுக்கு கொடுக்கும் விசயத்தில் பிரச்சினை ஆரம்பித்தது. பிறகு, அப்பம் மற்றும் வைன்/மது, ஏசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுகின்றன என்று நம்புவதிலும், வேறுபாடு ஏற்பட்டது. உண்மையில் அவ்வாறு மாறுகிறது என்று நம்பவேண்டும் என்று அடிப்படைக் கிருத்துவம் நம்பவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது. ஆனால், உள்ளூர் கிருத்துவர்கள் அவ்வாறாக நம்புவதில்லை. போச்சுகீசியர்களால் நுழைக்கப்பட்ட சடங்குகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை[3]. கேரளாவில், சிரிய கிருத்துவர்கள் மீது வாடிகன் தனது அதிகாரத்தை சுமத்துவதையும் அவர்கள் விரும்பவில்லை[4]. கேரள கிருத்துவப் பிரிவுகள் பலமுறை உச்சநீதிமன்றம் வரை வழக்குத் தொடுத்து சண்டைப் போட்டுள்ளனர்[5]. இவ்வாறு, இறையியல் மற்றும் இனபாகுப்பாடு விசயங்களில் ஒத்துப்போகாத நிலைகளை மறைத்து வேறுவிதமாக திரிபு வாதங்கள் கொடுக்கப்பட்டன.
இறையியல் பிரச்சினைகள், உள்–கலாச்சாரமயமாக்கல், மாறும் முறைகள்: சென்னையில், ஆங்கிலேயர்கள் கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்கள், விடுகள், தெருக்கள், வழிபாடு கூடங்கள், எல்லாவற்றையுமே வெள்ளையர் மற்றும் கருப்பர் உபயோகப்படுத்தப் படும் நிலையில் தான் வைத்தனர்[6]. இதனால், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அவர்கள் ஆகஸ்ட்.14, 1964ல் தனியாக இந்திய ஆங்கிலிகென் சர்ச் என்பதனை ஆரம்பித்தனர். அதனால், 1947ல் சர்ச் ஆப் சவுத் இந்தியா [the Church of South India (CSI)] என்று செப்டம்பர்.27, 1947 அன்று தனியாக ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஆங்கிலிகென், பாப்டிஸ்ட், பேஸல் மிஷன் மற்றும் பிரெஸ்பிடேரியன் [Anglicans, Baptists, Basel Mission, Lutherans and Presbyterians] முதலிய பிரிவுகள் அடங்குவர். இவையெல்லாம் இறையியல் ரீதியில் இருந்தாலும், சொத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் தகராறுகள் இருந்தன. 1947லேயே இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ், ஒரு கம்பெனியாக [in 1947 the Church of South India Trust Association (CSI-TA) was registered as a company] பதிவு செய்யப்பட்டது. ஆனால், சொத்துக்கள் சண்டை சமீபத்தில் கூட நடந்து, நீதிமன்றத்திற்குச் சென்றது[7]. கேரளா மற்றும் இதர மாநிலங்களிலும் இப்பிரச்சினை சொத்து, பணம், பதவி போன்ற விவகாரங்களில் ஆரம்பித்தாலும், இறையியல் பூச்சு கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். பிறகு, சுதேசி சர்ச் இயக்கம் போன்றவற்றை ஆரம்பித்து, இந்துமுறைகளில் கிறிஸ்து, மேரி முதலியவர்களை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, அத்தகைய முறைகளை செய்ய அனுமதித்தது.
இந்திய காலாச்சாரத்தை வைத்துக் கொண்டு, கடவுளை மாற்றிய கிருத்துவர்கள்: வெள்ளை கிருத்துவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் உள்நாட்டு கிருத்துவர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலையில், கலாச்சாரம், பண்பாடு, நாகரிக போன்ற காரணிகள் குறுக்கிட்டன. இதனால், கலாச்சாரத்தை முக்கியமான காரணியாகக் கொண்டு, கிருத்துவர்களான மாறிய இந்துக்களை, அப்படியே அவர்களது கலாச்சாரத்திலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் ஜாக்கெட்-புடவை அனிவது, தலைமுடித்து பூவைத்துக் கொள்வது, நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது, தாலி-நகை அணிவது, என்று எல்லாமே அனுமதிக்கப்பட்டன. ஆனால், கடவுளை மட்டும் மாற்றினர். ஆங்கிலேயர் 1947ல் சுதந்திரம் கொடுத்த உடனே, சமய ரீதியில், இந்தியாவைக் கட்டுப்படுத்த திட்டமிட்டனர் என்று தெரிகிறது. இதனால், கிருத்துவ பாதிரிகளை, இந்துமதத்தை, கிருத்துவமதத்துடன் ஒப்பிட்டு, ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். ஒரு பக்கம் இந்துமதத்தை உயர்வாக பேசுவது, மறுபுறம் அதனைக் கடுமையாகத் தாக்குவது என்ற முறையில் செயல்பட்டுவருகின்றனர். இந்துமதத்தை அப்படியே காப்பியடித்து, இந்துக்களை ஏமாற்றி, மதம் மாற்ற வேண்டும் என்பதுதான் இந்த கத்தோலிக்க ஆசிரமங்களின் நோக்கம். இவ்வித ஆராய்ச்சியில், சைவம் மற்றும் வைணவம், தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏற்கெனவே ஆரிய-திராவிட பிளவு இருப்பதை அவர்கள் அறிந்தாலும், அதனைக் குறிப்பிடாமல், சமஸ்கிருதம்-தமிழ் முறையில் அணுகினார்கள்.
1969ல் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா (CBCI), சர்ச்சுகளை இந்துமயமாக்கும் முறையில் என்ற பெங்களுரின் ஆர்ச்-பிஷப் மற்றும் லிடர்ஜி கமிஷனின் (Liturgy Commission) தலைவருமான டி.எஸ். லூர்துசாமி (D. S. Lordruswmy) மிக்கவேகமாக செயல்பட்டார். டி.எஸ். அமலோர்பவ தாஸ் (D. S. Amalopavadass) என்ற தனது சகோதரை அதில் ஈடுபடும் படி ஊக்குவித்தார். இந்த டி.எஸ். லூர்துசாமி கார்டினல் ஆகி, இப்பொழுது போப்பாகி விட்டார். வாடிகனுடைய ஏப்ரல்.25, 1969 தேதியிட்ட ஆணை எண்.82/69ன்படி, ஏற்றுக்கொள்ளப்பட 12 வழிபாட்டு முறைகளில், சர்ச்சுகளில் கடைபிடிக்கலாம் என்றுள்ளது. விக்டர் குலந்தை (Victor J. F. Kulanday) உயிரோடிருக்கும் வரை இந்த “சர்ச்சுகளை இந்துமயகாக்கும் முறை”களைத் தீவிரமாக எதிர்த்து வந்தார். இப்பொழுது, மைக்கேல் பிரபு என்பவர் தனது இணைதளத்தில் இம்முயற்சிகளைக் கண்டித்து வருகிறார்[8].
© வேதபிரகாஷ்
13-05-2015
[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=44793&Print=1
[2] தினமலர், மனநலம் குன்றியவர்களுக்கு ஆதரவு : களப்பணியில் “சாந்திவனம்‘ சாதிப்பு, ஜூலை.22, 2010:02:59.
[3] Moran Mar Basselios Catholicos v. Thukalan Paulo Avira & others (1958 K.L.T.721) = AIR 1959 SC 31 ; http://indiankanoon.org/doc/37282232/
[4] Supreme Court of India – Most. Rev. P.M.A. Metropolitan & … vs Moran Mar Marthoma & Anr on 20 June, 1995, Equivalent citations: 1995 AIR 2001, 1995 SCC Supl. (4) 286, Author: R Sahai, Bench: Sahai, R.M. (J, http://indiankanoon.org/doc/634316/
[5] Supreme Court of India – Moran Mar Basselios Catholicos … vs The Most Rev. Mar Poulose … on 21 May, 1954, Equivalent citations: 1954 AIR 526, 1955 SCR 520, Author: B Jagannadhadas ,Bench: Jagannadhadas, B. http://indiankanoon.org/doc/1864509/
[6] பிளாக் டவுன் / தெரு மற்றும் ஒயிட் டவுன் தெரு என்ற பாகுபாடு இருந்தது. சர்ச்சுகளில் இந்தியர்கள் நிற்க தனி இடம் ஒதுக்கப்பட்டது.
[7] The Madras High Court ruled this week that the Church of South India Trust Association (CSI-TA) is a company registered under the Companies Act, and that the Registrar of Companies (RoC) is entitled to invoke the provisions of the Companies Act by calling upon CSI-TA to produce documents for inspection under Section 209A of the Act.
http://articles.economictimes.indiatimes.com/2012-04-01/news/31266997_1_csi-church-of-south-india-ta
[8] http://ephesians511blog.com/category/hinduisation-of-the-catholic-church-in-india/